தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 15:20

உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தின் விக்கிரக எண்ணங்களையும், தோற்றங்களையும் அழித்து, நம்முடைய சகல பாரம்பரிய பழக்கவழக்கங்களை விட்டு கர்த்தரை கருத்தோடு தேடுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நித்திய ஜீவன் நிலைத்திருக்கும்படியான செயல்களை கர்த்தருக்குள் செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 13:10-19 

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.

யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.

எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.

அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:

கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான்.

பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்.

அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவகாஸ் நித்திரையடைந்த பின்பு,, அவன் மகன் யோவாஸ் அந்த ஸ்தானத்தில் ராஜாவானான்; அப்போது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் முப்பத்தேழாம் வருஷமாயிருந்தது.  ஆனால் இஸ்ரவேலின் ராஜவாகிய யோவாஸ் சமாரியாவிலே பதினாறு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.  இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை  விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.    மேலும் இவனுடைய வர்த்தமானங்களும், இவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின  வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் உள்ளது.  யோவாஸ் நித்திரையடைந்த பின் யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்.  அந்த நாட்களில் எலிசா மரணத்திற்கேதுவான வியாதியாய் கிடந்தான். அப்போது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்கு போய் அவன் மேல் விழுந்து, அழுது; என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே என்றான். அப்போது வில்லையும், அம்பையும் பிடியும் என்ற போது; அவன் அப்படியே செய்தான்.  அவன் ராஜாவை நோக்கி கையை வில்லின் மேல் வையும் என்றான்; அவன் அப்படியே செய்த போது; எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள் மேல் வைத்து, கிழக்கே இருக்கிற ஜன்னலை திற என்றான்;  அவன் அப்படியே ஜன்னலை திறந்த போது , எலிசா எய்யும் என்றான்; அவன் எய்த போது இது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது;  நீர் சீரியரை ஆப்பெக்கிலே முறிய அடிப்பீர் என்றான்.   பின்னும் அம்புகளை பிடியும் என்றான்; அம்புகளை அவன் பிடித்த போது எலிசா இஸ்ரவேலின் ராஜவாகிய யேவாசோடு தரையிலே அடியும் என்றான்; அவன் தரையிலே மூன்று தரம் அடித்து நின்றான்.  அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன் மேல் கோபமாகி நீர் ஐந்து ஆறு விசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரை தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்று விசை மட்டும் முறிய அடிப்பீர் என்றான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது தகப்பன் செய்த பாவத்தையே மகனும் தொடர்ந்து செய்கிறதை பார்க்கிறோம். ஆதலால் அவனுடைய ராஜ்யபாரத்தின் நாட்களின் அவன் கர்த்தரின் உதவியை நாடும்படியாக; எலிசா மரணத்திற்கு ஏதுவான  வியாதியாய் கிடந்த போது அங்கு செல்கிறான்.  அப்படியிருந்தும் அவனுக்கு முழுமையான சுதந்தரம் கொடுக்கப்படவில்லை என்பது தேவ வசனம் வாசிக்கும் போது புரிகிறது.  என்னவென்றால்  யெரொபெயாமின் பாவத்தை விட்டு விலகாமல் இருந்ததால்; அவனுக்கு தேவனுடைய மனுஷன் திருஷ்டாந்தப்படுத்தின அடையாளம் என்னவென்றால் இருதயமாகிய ஜன்னலை திறந்து கர்த்தருக்காக முழுமையாக ஒப்புக்கொடுத்து இரட்சிப்பை பெற்றுக்கொண்டால் மட்டும் ஆப்பெக்கிலே சீரியரை தீர முறிய அடிப்பீர் என்றான். பின்பு மூன்று முறை தான் சீரியரை முறியடிக்க முடியும் என்று தேவனுடைய மனுஷன் கூறுகிறார் என்றால்; நாம் முழு உள்ளத்தோடு கர்த்தரை சேவிக்காவிட்டால் நம் உள்ளத்தில் இருக்கிற துர்கிரியைகளாகிய விக்கிரகங்களை எண்ணங்களை நாம் அகற்ற முடியாது என்று விளக்குகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் நம்முடைய உள்ளத்திலிருக்கிற துர் கிரியைகளாகிய விக்கிரகங்களை மாற்றா விட்டால் நம் தலைமுறையாகிய நம்முடைய பிள்ளைகளும், சபையாகிய நம் பிள்ளைகளும் இதனின்று விடுதலையாகிறது மிக கடினம்.  நம் பாவம் நம் தலைமுறைகளை தொடர்ந்து பிடிக்காதபடி நாம்  உண்மையுள்ளவர்களாக கர்த்தரை தேடுவோம்.  ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே, கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட நாம் கர்த்தரை கருத்தோடு தேடி, நம்மையும் நம்  தலைமுறைகளையும் இரட்சித்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.