தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:27 

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்திய ஜீவன் நிலைத்திருக்கும்படியான செயல்களை கர்த்தருக்குள்  செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் ஒரு இரட்சகரை தந்ததால், கர்த்தர் பேரில் மட்டும் பற்றுதலாயிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்ன வென்றால் 

2 இராஜாக்கள் 13:7-9 

யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.

யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறிய வசனங்களில் எழுதபட்டவைகள் என்னவென்றால், யோவகாசுக்கு சீரிய ராஜா ஐம்பது குதிரை வீரரையும், பத்து ரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமேயல்லாமல், ஜனங்களில் வேறொன்றையும் மீதியாக வைக்காமல்; அவன் அவர்களை அழித்து போரடிக்கும் தூளைப்போல ஆக்கிப்போட்டான். அல்லாமலும் அவன் இஸ்ரவேலை பாவஞ்செய்யபண்ணின நேபோத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் இருந்ததால் யோவகாசை சீரியரின் கையில் ஒப்புக்கொடுத்து தூளைப்போல ஆக்குகிறதைப் வாசிக்க முடிகிறது. யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.  யோவகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், அவனை சமாரியாவிலே அடக்கம் பண்ணினார்கள்.  அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால்; நாம் அதிகமான காரியங்கள் தேவனுக்கேற்றபடி செய்தாலும், விக்கிரகராதனை முதலிய வேசிதன ஆவி நம்மில் சிறிதளவு  இருக்குமானால் அது அநேக தேவஜனத்தை வஞ்சிக்கிறதயிருக்கும்.  ஆதலால் கர்த்தர் நம்மை பொடித்தூளத்தனையாக்கி விடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இதனைக் குறித்து 

ஏசாயா 29:3-5 

உன்னைப் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்.

அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம்பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.

உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

மேலேகூறப்பட்டிருக்கிற வசனங்ளினால் நாம் மிகவும் ஜாக்கிரதோடு காணப்பட வேண்டம்.  இதனை நாம் கருத்தில் கொள்ளும் போது இஸ்ரவேலர்கள் சீரியரால் ஒடுக்கப்படும்போது யோவகாஸ் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி பிரார்தனை செய்த போது; இஸ்ரவேலருடைய ஒடுக்குதலை கர்த்தர் கண்டு அவனுக்கு செவிக்கொடுத்தார். ஆனால் அவன் யெரெபயாமுடைய பாவங்களை விட்டு விலகாமல் இருந்ததால் இஸ்ரவேலரை பொடிதூளத்தனையாக்குகிறார் என்றால் இஸ்ரவேலரின் அத்தனை கிரியைகளை அழிக்கிறார்.  இப்படியாக நம்முடைய வாழ்விலும், கர்த்தர் சில நேரங்களில் நம் ஜெபத்திற்கு பதில் தருவார்; ஆனால் நாம் விட்டு விட வேண்டிய காரியங்களை விடாமல் இருப்போமானால் நம்மில் உள்ள நித்திய ஜீவனை எடுத்துப்போடுவார். ஆதலால் எப்போதும் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படிந்து நித்திய ஜீவன் நம்மில் நிலைத்திருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.