தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 107: 18, 19

அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் ஒரு இரட்சகரை தந்ததால், கர்த்தர் பேரில் மட்டும் பற்றுதலாயிருப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திற்குள்ளிருக்கிற விளக்குதண்டை கர்த்தர் நீக்காமலிருக்க, அவருடைய சத்தியத்தை விடட்டு விலகாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 13:1-6 

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை.

ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.

ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில், யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் குமாரன் யோவாசுடைய இருபத்து மூன்றாம் வருஷத்தில், யெகூவின் குமாரனாகிய யோவகாஸ் இஸ்ரவேலின் மேல் சமாரியாவிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, இஸ்ரவேலை பாவஞ்செய்ய பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகாமல் அதனை பின்பற்றி  நடந்தான்.  ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களை சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும். ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.  யோவகாஸ் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி பிரார்த்தித்தான்.  சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கி போகிறதை கண்ட கர்த்தர் அவனுக்கு செவிக்கொடுத்தார்.   கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின் கீழிருந்து நீங்கலானார்கள்.  ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன் போல தங்கள் கூடாரங்களிலே குடியேறினார்கள். ஆகிலும் இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரக தோப்பும் நிலையாகயிருந்தது.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னவென்றால் நம்மில் அநேகம் பேர் கர்த்தரால் அபிஷேகப்பட்டருந்தும் உள்ளத்தில் இருக்கிற சில விக்கிரகங்களை விடாமல் இருப்பார்கள்.  அப்படியுள்ளவர்களை கர்த்தர் சீரிய கிரியைகளாகிய பொல்லாத எண்ணங்களால் உள்ளத்தை நெருக்கும் போது; அதனை சகிக்கமுடியாமல் கர்த்தரை நோக்கி வேதனையோடு ஜெபிப்பார்கள்.  இதனை கேட்ட இரக்கமுள்ள தேவன் அப்படிப்பட்டவர்களுடைய ஒடுக்குதலை கேட்டு அவர்களை அந்த நெருக்கத்திலிருந்து விடுவிக்கும் படியாக அவர்களிடத்தில் இரட்சகராகிய இயேசுவை எழுப்புவார்.  அதன் பின்பு கிறிஸ்துவால் அவர்கள் நெருக்கத்தினின்று விடுதலையாகி தங்கள் கூடாரங்களில்  குடியிருப்பார்கள்.  ஆனாலும் கர்ததர் இரட்சித்ததை நினையாமல்  அவர்கள் யெரொபெயாமின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே தான் நடப்பார்கள்.  அவ்விதமாகயிருந்தால் சமாரியாவின் விக்கிரக தோப்பும் நம்மில் நிலையாகத்தான் இருக்கும். ஆதலால் கர்த்தருக்குள் பிரியமானவர்களே கர்த்தர் நம்மை விடுவித்து கூடாரத்தில் குடியேற்றியதை குறித்தும், கர்த்தர் நம்மை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி இரட்சித்ததை நினைத்தும், அவர் கிருபையிலே வளரும்படியாக எல்லா விக்கிரக சிலை, விக்கிரக சிந்தைகள் எல்லாவற்றையும் முழுமனதோடு விட்டு விட்டு, கர்த்தர் பேரில் மட்டும் பற்றுதலாயிருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.