தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 108:6  

உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் மீதியானியரிடத்தினின்று விடுதலையாக்கி இரட்சிக்கிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமானப் பொல்லாப்புகளை செய்தால் நாம் எப்படி சிறுமைப்படுத்த படுவோம் என்று தியானித்தோம்.  

அவ்விதம் கர்த்தரால், சத்துருவிடம் ஒப்படைத்து சிறுமைப்படுத்தப்படும் போது, நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, கர்த்தர் நமக்காக ஒரு தீர்க்கதரிசியாகிய கிறிஸ்துவை நம்மிடத்தில் அனுப்புகிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தவே 

நியாயாதிபதிகள் 6:8-14  

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.

அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கிதியோனை கர்த்தர் இஸ்ரவேலருக்குள்ளே எழுப்புகிறார்.  அவ்விதம்  கர்த்தர்  கிதியோன் மூலம் இஸ்ரவேலரிடத்தில் உரைக்கிறது என்னவென்றால்;  நான் உங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து புறப்படவும் செய்து, எகிப்தின் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாக துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்கு கொடுத்து நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும், அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்கு பயப்படாதிருங்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லை கேளாதே போனீர்கள் என்கிறார் என்றான். 

அதற்கு பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.  அப்போது அவனுடைய குமாரன் கோதுமையை மீதியானியரின் கைக்கு தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாய் அதை போரடித்தான்.  கர்த்தருடைய தூதனானவர்  அவனுக்கு தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.  அப்பொழுது கிதியோன் கர்த்தர் எங்களோடே இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டு வரவில்லையா? எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்து சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு எங்களை மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தாரே என்றான்.  அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரடசிப்பாய்; உன்னை அனுப்புகிறவர்  நான் அல்லவா என்றார்.  அதற்கு அவன் ஆ ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டிலே நான் மிகவும் சிறியவன் என்றான்.  அதற்கு கர்த்தர் நான் உன்னோடே கூட இருப்பேன்; ஒரு மனுஷனை முறிய அடிப்பது போல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.  

பிரியமானவர்களே நாம் ஒவ்வொன்றாக தியானிக்கும் போது கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாவில் எவ்வளவு பெலன் கொண்டிருக்கிறோம் என்பதையும், மேலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல், கர்த்தர் நம்மை சத்துருவுக்கு ஒப்புக்கொடுப்பதும், சத்துரு இஸ்ரவேலராகிய நம்மை மேற்க்கொள்வதும், அது மட்டுமல்லாமல் நம் சத்துருவினால்  ஒடுக்கப்படும்  போது நாம் கர்த்தரை நோக்கி முறையிடுவதும், அவ்விதம் முறையிட்டு கர்த்தரை கூப்பிடும் போது, உடனே கர்த்தர்  நம் ஆத்துமாவில் தருகிற பெலனைக்குறித்து தான் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலருக்குள் எழும்புகிறார்கள் என்று, நம் ஆத்துமாவில் கிறிஸ்துவின் பெலன் தரிப்பதற்கு நமக்கு திருஷ்டாந்தபடுத்தி வருகிறதை நாம் பார்க்க முடிகிறது.  

என்னவெனில் ஒவ்வொரு ஜாதியின் கிரியைகளுக்கு தக்க நம் தேவனை கூப்பிடுகிறதற்குதக்க வண்ணமாக நாம் பெலன் தரிக்கிறோம் என்பதனை ஒவ்வொரு தீர்க்கதரிசிகளுடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம்.  அவ்விதம் ஒவ்வொன்றாக தியானித்து வரும் போது மீதியானியரைப்பற்றி கர்த்தர் குறிப்பிடுகிறார்.  என்னவெனில் இஸ்ரவேலராகிய நம்மில் மீதியானிய கிரியைகள் கர்த்தர் அழிக்கும் படியாக, அபியேஸரியனான யோவாசின்  ஊராகிய ஒப்ராவிலிருக்கும் கர்வாலிமரத்தின் கீழ் கர்த்தருடைய தூதனானவர் உட்கார்ந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இவை நம்முடைய ஆத்துமா தேவகிருபை பெற்று இருக்கிறதைக்காட்டுகிறது.  

அவற்றைக்குறித்து அவனுடைய குமாரன் கிதியோன் என்பவன் இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு தப்புவிப்பதற்காக ஆலைக்கு சமீபமாய் போரடித்தான்.  அல்லாமலும் இஸ்ரவேல் சபையை, கோதுமை என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இஸ்ரவேல் சபை என்றும், அவர் தான் மண்ணில் விதைத்து முதலில் முளைத்து வந்த வித்து என்பதும், அதனை குறித்து கர்த்தர் சொல்வது 

யோவான் 12:23-24  

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

இதனை குறித்து சொல்வது என்னவென்றால் அவனவன் தன் தன் சொந்த ஜீவனை இழந்து, கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்று எழும்ப வேண்டும். அவ்விதம் எழும்பும் போது நாம் எல்லாரும் இஸ்ரவேல் சபையாகிறோம்.  அதனை தான் கோதுமையை மீதியானியரின் கையிலிருந்து தப்புவிக்கும் படியாக கிதியோன் ஆலைக்கு முன்பாக போரடித்தான் என்பதாகும். அப்போது கர்த்தருடைய தூதனானவர்  கிதியோனிடம் தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.  இவ்விதமாக கர்த்தர் நம்மோடு பேசினாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளாதபடி இருக்கிற அநேகர் நம்மிலும் உண்டு என்பதனை இந்த வார்த்தை நம்மோடு பேசுகிறது.  ஏனென்றால் நாமும் நினைப்போம், கர்த்தர் நம்மோடு உண்டானால் நமக்கு இப்படியெல்லாம் நேரிடுமோ என்றும் நம் ஆத்மாவில் நினைப்புகள் வரும் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.  பின்னும் நாம் சிந்திக்கிற காரியம் தான் முற்பிதாக்கள் காலத்தில் நடந்த அற்புதங்கள் இப்போது இல்லையே என்று நினைக்கிறோம்.  

பிரியமானவர்களே முன்பை காட்டிலும், இப்போது தான் அற்புதங்கள் அதிகமாக  நடக்கிறது.  என்னவென்றால் நம்முடைய உள்ளான மனுஷனில் நடக்கிறது, தேவ சாயலாகிய இரட்சிப்பு.  மேலும் கர்த்தர் கிதியோனிடம் உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.  என்னவெனில் கிதியோன் போரடித்துக்கொண்டிருந்ததை கர்த்தர் பார்க்கிறார். அதனால் கர்த்தர் பெலன் இருக்கிறவர்கள் தான் போராடி ஜெபித்து ஜெயம் பெற்றுக்கொள்ள முடியும் என்றதால் நமக்கு கர்த்தர் தந்திருக்கிற பெலன் சிறியதோ, பெரியதோ, நாம் பொல்லாங்கானவைகளை துரத்த வேண்டும் என்பது தான் தேவனுடைய சித்தமாகயிருக்கிறது.  

ஆதலால் நாம் கர்த்தருடைய பெலத்தினால் மீதியானிய செயல்களிலிருந்து விடுதலை பெற்று தேவனுக்கு உகந்த பிள்ளைகளாக வாழ முடியும்.  ஆதலால் பிரியமானவர்களே நமக்கு கொஞ்சம் பெலன் உண்டானாலும், கர்த்தரின் சத்தம் கேட்டு கீழ்படிவோமானால் இரட்சிக்கப்படுவோம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.