தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 7: 17

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஜெயம்பெற்று கர்த்தரை புதிய பாடல் பாடி கீர்த்தனம் பண்ணவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில், கர்த்தர் கானானிய கிரியைகளை அழித்து, நம்மை சுத்தமான இஸ்ரவேலராக மாற்றுகிறதை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

நியாயாதிபதிகள் 5:1 - 5

அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது:

கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.

கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது கானானிய ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்கும் மட்டும்  இஸ்ரவேலர் பலத்துக்கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலருடைய கை பலங்கொண்டதால் தெபோராளும், அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடிய பாட்டாவது, கர்த்தர் நீதியை சரிகட்டுகிற தேவனானவர், மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்ததால் கர்த்தரை ஸ்தோத்தரிப்பதும், கர்த்தர் நமக்கு செவிக்கொடுப்பதால் அவரை கீர்த்தனம் பண்ணுவதும், அவர் சேயீரிலிருந்து புறப்பட்டு ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வருகிறார்;  அப்போது பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகம் தண்ணீர் பொழிந்தது, அவருக்கு முன்பாக பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் கர்த்தருக்கு முன்பாக பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக சீனாயும் கரைந்தது; 

இவ்விதமாக பாடல்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாய் நாம் கத்தரை பாடி ஸ்தோத்தரித்து கீர்த்தனம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்.  அப்படியானால் நம்முடைய உள்ளத்திலிருந்த உலகம், மாமிசம் பிசாசு இவற்றின் கிரியைகள் அழிந்து , கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளின் கிரியைகள் கரைந்து ஒன்று மில்லாமற் போய் நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம்.  இப்படியாக நாம் மனப்பூர்வமாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.