தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 1:15  

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா துர்உபதேசத்தால் நிறையப்படாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அந்நிய தேவர்களுக்கு இடம் கொடாதபடிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால்ஆத்துமா இரட்சிப்பை சுதந்தரித்து அமைதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.    

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

நியாயாதிபதிகள் 3:12-31  

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.

ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு,

காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான்.

அவன் காணிக்கையைச் செலுத்தித்தீர்ந்தபின்பு, காணிக்கையைச் சுமந்து வந்த ஜனங்களை அனுப்பிவிட்டான்.

அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.

ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புறம் இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.

உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.

அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக் கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.

ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.

அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.

அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.

அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.

அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:

என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,

அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.

அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரர் மனதில் அமைதியை கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மூலம் பெற்றுக்கொண்டார்கள் என்பதனை கிறிஸ்துவுக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  ஆனால் ஒத்னியேல் மரணமடைந்த பின்பு, இஸ்ரவேல் புத்தரர் மீண்டும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்த படியால்,கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபிய ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதாக பலக்க பண்ணினார்.  அவன் அம்மோன் புத்திரரையும், அமலேக்கியரையும் கூட்டிகொண்டு வந்து,இஸ்ரவேல் புத்திரரை முறிய அடித்தான்.  பேரீச்சமரங்களின் பட் டணத்தையும் பிடித்தெடுத்தான். இவ்விதமாக இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.  அவ்விதம் சேவித்து வரும் போது, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.  

அப்படி அவர்கள் கூப்பிடும் போது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழுப்பினார்; அவன் இடது கை பழக்கமுடையவனாயிருந்தான்.  ஆனால் அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர், மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு காணிக்கைகளை அனுப்பினார்கள்.  ஆனால் ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி அதை தன் வஸ்திரத்திற்க்குள்ளே தன் வலது பக்கத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு, காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்.  பின்பு அவன் காணிக்கை சுமந்து வந்த ஜனங்களை அனுப்பி விட்டான்.  அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பி வந்து ராஜாவே  உம்மிடத்தில் சொல்ல வேண்டிய ஒரு இரகசியமான வார்த்தை உண்டு என்ற போது , அவன் அதற்கு பொறு என்று சொல்ல; அவனிடத்தில்  நின்ற யாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.  

ஏகூத் கிட்ட போகும் போது அவன் ஒரு குளிர்ச்சியான அறை வீட்டில் உட்கார்ந்திருந்தான்.  அப்பொழுது ஏகூத் உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவ வாக்கு எனக்கு உண்டு என்றான்.  அப்பொழுது தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.  அப்போது ஏகூத் தன் இடது கையை நீட்டி, தன் வலது புறத்திலே இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி அதை அவன் வயிற்றிற்க்குள் பாய்ச்சினான். அலகோடேக்கூட கைப்பிடியும் உள்ளே புகுந்தது.  பின்பு கத்தியை வெளியே இழுக்கக்கூடாமல் நிணம் அலகை சுற்றிக்கொண்டடைத்தது; அது பின் புறத்திலே புறப்பட்டது.  பின்பு ஏகூத் அறைவீட்டை பூட்டிக்கொண்டு கொலுக்கூடத்தின் வழியாய் போய் விட்டான்.  அதன்பின்பு ஊழியக்காரர்கள் வந்து பார்த்த பின்பு கதவு பூட்டியிருந்தது;  ஆகையால் அவர் அந்த குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.  அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்.  ஆனால் அறைகதவை திறக்காததால் அவர்கள் ஒரு திறவு கோலை எடுத்து திறந்தார்கள்.  இதோ அவர்கள் ஆண்டவன் தரையிரே செத்துக்கிடந்தான்.  

அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்த போது, ஏகூத் ஓடிப்போய் சிலைகளுள்ள இடத்தை கடந்து, சேயிராத்தை சேர்ந்து தப்பினான்.  அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்;  அப்போது இஸ்ரவேல் புத்திரர் மலையிலிருந்து இறங்கினார்கள்.  அப்போது அவன் இஸ்ரவேல் புத்திரரிடம் என்னை பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.  அவர்கள் அவனை பின்தொடர்ந்து மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளை பிடித்து, யாரையும் கடந்து போகவிடாமல் மோவாபியரில் ஏறக்குறைய பதினாயிரம் பேரை வெட்டினார்கள்.  அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும், பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்;  அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. மோவாபியர் இஸ்ரவேலரின் கையின் கீழ் தாழ்த்தப்பட்டார்கள்.  அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.  அவனுக்கு பிறகு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான். அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.  

பிரியமானவர்களே முந்தின பகுதிகளின் கருத்துக்கள் என்னவெனில், இஸ்ரவேலை இரட்சிக்கும் படி கிறிஸ்து வெளிப்படுவதற்கு முன்பாக மேலே கூறப்பட்டவர்களை கர்த்தர் எழுப்பி இஸ்ரவேலை இரட்சிக்கிறார் என்பதன் கருத்து என்னவெனில், கர்த்தர் நம்மை ஜாதிகளினின்று விடுவித்து இரட்சித்தும், மீண்டும் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பானவைகளை செய்கிறதால் நம்முடைய ஆத்துமா, பல வித சிலை, விக்கிரகம், மற்றும் வேண்டாத துர்உபதேசங்களால் கொழுத்து ஸ்தூலித்து இருக்கிறதால் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை குறித்து மோவாபிய ராஜா என்று சொல்கிறார்.  ஆனால் அவ்விதம் ஆத்துமா துர்உபதேசங்களால் ஸ்தூலித்து இருக்கிறதால் கர்த்தரால் பெற்றுக்கொண்ட தீர்க்கதரிசன வரங்கள் மோவாபியரால் அழிக்கப்படுகிறது. 

ஆதலால் கர்த்தர் அவருடைய மிகுந்த பெலத்தினால் ஜனங்கள் உட்கொண்ட துர்உபதேசத்தை அழிக்கும்படி ரகசியமாக ஞானத்தோடு நிறைந்தவராய் நமக்குள்ளால் வந்து அவருடைய வசனமாகிய பட்டத்தை உருவி அந்த துர்உபதேசத்தால் நிறைந்த நம்முடைய ஆத்துமாவை நம்முடைய உள்ளமாகிய அறையில் இருந்து ஆளுகை செய்யாதபடி அதனை நிர்மூலம் பண்ணுகிறார்.  அதனை பார்க்கிற அந்த மோவாபிய கிரியைகளாகிய கூட்டத்தார், அந்த கிரியைகள் வெளிப்படாமல் இருக்கிறதால் அவர் மலஜலாதியிருக்கிறாராம் என்று சொல்லி சலித்துப்போகுமட்டும் காத்திருந்து திறவுகோலை எடுத்து திறப்பது என்றால் அவர்கள்  தெய்வத்தோடு விண்ணப்பக்கிறார்கள்.  அவ்விதம் அவர்கள் விண்ணப்பிக்கும் போது அந்த கிரியையாகிய மோவாபிய ராஜா செத்தது அவர்களுக்கு தெரியவந்தது.  

அதன் பின்பு அதன் கூட்டாத்தார் எல்லாரும் இஸ்ரவேலரால் அழிக்கப்பட்டார்கள்.  இவ்விதம் நம்முடைய உள்ளத்திலிருந்து பெருமைகாரராகிய மோவாபியர் அழிக்கப்படும்போது உள்ளம் அமைதியை கண்டடைகிறது.  அப்படி நடக்கும்போது அதனோடு உள்ளத்தில் இருக்கிற பெலிஸ்தரின் கிரியைகளை கர்த்தர் அவருடைய தாற்றுக்கோலால் அடித்து இஸ்ரவேலை இரட்சிக்கிறார் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய உள்ளான மனுஷன் தேவ சாயல் அடையவும், ஆத்துமா  கிறிஸ்துவாகிய நற்கிரியைகளை செய்யவும், நம்முடைய உள்ளான சரீரம் தேவ பெலன் தரித்து எழும்ப வேண்டுமானால் , சிலைகள் வழிபாடு, விக்கிரக ஆராதனை, மோக இன்பங்களாகிய துர் இச்சைகள் எல்லாம் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும்.  ஆதலால் நாம் தேவனுடைய நற்கிரியைகளில் வளரும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.