தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 17:10 

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை சோதித்தறிகிற போது, நாம் எப்போதும் கர்த்தரை விட்டு விலகாமல் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயமாகிய பலிபீடம், அந்நிய தேவர்கள் இடம் பெறாதபடி புதிதாக்கப்பட வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 2: 6-23

யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.

யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.

அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்.

அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.

கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.

நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.

அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது, யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்ட போது, அவர்கள் தேசத்தை சுதந்தரிக்கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள். யோசுவாவின் நாட்களில் கர்த்தர் இஸ்ரவேலுக்காக செய்த அவருடைய எல்லாவித பெரிய கிரியைகளை கண்டவர்களும், அதற்கு பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரை சேவித்தார்கள். யோசுவா மரித்த பின்பு, அக்காலத்தில் இருந்த அந்த சந்ததியார், தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்ட பின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காக செய்த கிரியைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்கு பின் எழும்பிற்று.  அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, பாகால்களை சேவித்து, தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படபண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு , தங்களை சுற்றிலும் இருக்கிற அந்நிய தேவர்களை பின்பற்றி போய், அவர்களை பணிந்துக்கொண்டு கர்த்தருக்கு கோபமூட்டினார்கள்.  

பிரியமானவர்களே, கர்த்தர் எதை செய்யக்கூடாது என்று யோசுவா மூலம் சொன்னாரோ, அதையே இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.  ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தருக்கு கோபம் மூண்டது.  ஏனென்றால் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தரை விட்டு பாகாலையும், அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.  ஆதலால் கர்த்தர் சொன்னது போல் அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைகாரர் கையில் ஒப்புக்கொடுத்து, அவர்களை சுற்றிலும் இருக்கிற அவர்களின்  பகைஞர் கையிலே விற்றுப்போட்டார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் புறப்பட்டு போன இடமெல்லாம் அவர்களுக்கு கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; அவ்விதம் கர்த்தரால் நெருக்கப்பட்டார்கள்.   

அப்போது கர்த்தர் அவர்களுக்காக நியாயாதிபதிகளை எழும்ப பண்ணி அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விடுவித்து இரட்சித்தார்கள்.  ஆனால் அவர்கள் நியாயாதிபதிகளின் சொல்லை கேளாமல், அந்நிய தேவர்களை பின்பற்றி சோரம் போய் அவர்களை பணிந்து கொண்டார்கள்.  மேலும் அவர்கள் தங்கள் பிதாக்களின் வழியை விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற் போனார்கள். அப்போது கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை, எழும்ப பண்ணுகிற போது, கர்த்தர் நியாயாதிபதியோடே கூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களெல்லாம், அவர்கள் சத்துருவின் கையிலிருந்து இஸ்ரவேலரை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.  அவர்கள் ஒடுக்கப்பட்டு தவிக்கிறதாலே கர்த்தர் மனஸ்தாபப்படுவார். ஆனால் நியாயாதிபதி மரணமடைந்தவுடனே, அவர்கள் திரும்பி அந்நிய தேவர்களை பின்பற்றவும், அவர்களை சேவிக்கவும், பணிந்துக்கொள்ளவும், தங்கள் பிதாக்களை பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.  

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் உடன்படிக்கையை மீறி நடந்தால், யோசுவா மரித்து பின் வைத்து போன ஜாதிகளில் ஒருவரையும் இனி அவர்களுக்கு முன்பாக துரத்தி விடாதிருப்பேன்.  ஆனால் கர்த்தர் சொல்வது அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியை கவனித்தது போல அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படி செய்வேன் என்றார்.  அதற்காக கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளை சீக்கிரமாய் துரத்தாமலும் விட்டு வைத்தார்.  

ஆனால் பிரியமானவர்களே மேற்க்கூறிய சகல கருத்துக்களும் நாம் நன்றாக சிந்தித்து கருத்துக்களில் நம் ஆவிக்குரிய வாழ்வை ஒப்புமைபடுத்தி பார்க்க வேண்டும்.  அவ்விதம் நாம் பார்க்கும் போது நம்மிடத்தில் அநேகக்குறைகள் காணப்படும்.  என்னவென்றால் நம்முடைய கர்த்தர் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறாரோ, அதனை செய்து கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி விடுவோம்.  அதனால் கர்த்தருடைய கரம் நமக்கு விரோதமாக இருக்கிறது.  ஆனால் நாம் அதனை உணராமல் இருக்கிறோம்.  அப்படி உணராமல் இருக்கிறதால் நம்முடைய கர்த்தர் நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்களை நம்மை விட்டு துரத்துவதுவில்லை.  ஆனால் கர்த்தர் எவ்விதமாக நம்மை சீர்படுத்தினாலும் அநேகர் சோரம் போய் அந்நிய தேவர்களையே பின்பற்றுகிறார்கள்.    ஆனால்  அவர்கள் தங்கள் முரட்டாட்டமான வாழ்வை விடாதிருக்கிறார்கள்.  

ஆதலால் கர்த்தர் கோபமூண்டவராகி,  அவருடைய வார்த்தைக்கு கீழ்படியாமற் இருக்கிறபடியால்  ஜாதிகளை கர்த்தர் துரத்துவதில்லை.  அவ்விதம் கர்த்தர் நம் உள்ளத்திலிருந்து துரத்தாமல் இருக்கிறபடியால் நாம் பரிசுத்தபட முடியாது.  ஆதலால் நாம் எப்படி நடக்கிறோம் என்று கர்த்தர் நம்மை சோதிக்கிறார்.  ஆனால் பிரியமானவர்களே கர்த்தர் நம்மை சோதித்து, நம்முடைய தப்பிதங்களை கண்டு சத்துருவின் கையில் ஒப்புக்கொடாதபடி நம்மை முழுமையும் கர்த்தருடைய கையில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.