தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 97:7 

சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நம்முடைய இருதயமாகிய பலிபீடம், அந்நிய தேவர்கள் இடம் பெறாதபடி புதிதாக்கப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை அனுதினமும் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ளவேண்டும் என்பதனை திருஷ்டாந்தங்களோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 2:1-5  

கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,

நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.

கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.

அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது எமோரியரின் எல்லை அக்கராபீமுக்கு போகிற மேடு தொடங்கி அதற்கு அப்புறமும் போபிற்று என்று முந்தின நாளில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால் தேசமெங்கும் எல்லா உள்ளத்திலும் எமோரியரின் கிரியைகள் அளவில்லாமல் அடங்காததாயிருக்கிறது. அது இஸ்ரவேலர்  அநேகபேரிடத்தில் இடம் பெற்றுள்ளது என்பதனை காட்டுவதற்காக திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. 

அதனால் கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து இஸ்ரவேலரிடத்தில் சொல்கிறது, நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படபண்ணி உங்கள் பிதாக்களுக்குஆணையிட்ட தேசத்தில் உங்களை கொண்டு வந்து விட்டு உங்களோடே உடன்படிக்கை பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும், நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைப்பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துப்போடவும் கடவர்கள் என்றும் சொன்னேன்.ஆனால் நீங்கள் என் சொல்லை கேளாமல் போனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்?  ஆதலால் நான் அவர்களை உங்கள் முகத்துக்கு முன்பாக துரத்துவதில்லை;  அப்போது அவர்கள் உங்களை நெருக்குவார்கள்;  அவர்களுடைய தேவர்கள் உங்களுக்கு கண்ணியாவார்கள்.  இவ்விதமாக கர்த்தருடைய தூதன் சொல்லும் போது ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.  அவ்விடத்திற்கு போகீம் என்ற பெயரிட்டு அங்கே பலியிட்டார்கள். 

பிரியமானவர்களே இதனை வாசிக்கும் போது நாம் சிந்திக்க வேண்டிய காரியங்கள் என்னவென்றால் எமோரியரின் கிரியைகளாகிய விக்கிரக எண்ணம், துர் செயல்கள், அலங்காரம் இவைகள் நம் உள்ளங்களில் இடம் பெறுவதால் கர்த்தரிடத்தில் எடுத்த உடன்படிக்கையை முறித்து விடுகிறோம்.  ஆதலால் கர்த்தர் சொல்கிறது நாம் அவர்கள் தேவர்களோடு உடன்படிக்கை பண்ணுகிறோம் .  ஏனென்றால் நம்முடைய உள்ளமாகிய பலிபீடம் அந்நிய தேவர்களுடைய  செயல்கள் இருக்கிறதால், அந்த பலிபீடம் இடித்து போடபடவில்லை என்று சொல்கிறார்.  ஆதலால் நமக்கு முன் வருகிற சத்துருக்களை கர்த்தர் துரத்துவதில்லை  என்கிறார்.  அவ்விதம் நாம் இருப்பதால் கர்த்தர் நம்மை விட்டு அவைகளை துரத்தவில்லை என்றால், அந்த தேவர்களே நமக்கு கண்ணியாகயிருக்கும். 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே இவ்வித செயல்பாடுகள் நம்மிடத்தில் இருக்குமானால் நாம் நம்மை கிறிஸ்துவின் பலிபீடமாக மாற்றி தேவன் நம்மை சுத்திகரிக்கும் படியாகவும், நம்முடைய இருதயம் புதிய பலிபீடமாக, எல்லா துர்கிரியைகளையும் அகற்றி, கர்த்தருக்கு நம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம்.   

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.