தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 4:26 

அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், அனுதினம் சபைக்கூடி கர்த்தரை ஆராதிப்பதை, திருஷ்டாந்தமான விளக்கத்தோடுகூட தியானித்தோம்.  மற்றும் சபைக்கூடி தேவனுக்கு ஆராதனைச்செய்யும் போது, கர்த்தர் நம்மிடத்தில் இருக்கிற புற ஜாதிகளின் கிரியைகளாகிய துர்கிரியைகளை நம்மை விட்டு அகற்றி, நம்மை சுத்திகரிப்பார் என்பதில் மாற்றமில்லை.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 1: 21- 36    

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.

அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.

அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.

அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.

மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.

இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.

எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.

செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.

ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.

நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.

எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது பென்யமீன் புத்திரர் எருசலேமில் குடியிருந்த எபூசியரை துரத்தி விடாததால், எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடே எருசலேமில் குடியிருக்கிறார்கள்.  யோசேப்பின் குமாரரும் பெத்தேலுக்கு விரோதமாய் போனார்கள்.  கர்த்தர் அவர்களோடே கூட இருந்ததால் அவர்கள் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள். பெத்தேலுக்கு முன்பு இருந்த பெயர் லூஸ்.  அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்படுகிற போது, ஒரு மனுஷனை கண்டு இதில் பிரவேசிக்கும் வழியை காண்பி; உனக்கு தயை செய்வோம் என்றார்கள்.  அந்தபடியே அந்த மனுஷன் பிரவேசிக்கும் வழியை காண்பித்தபோது, அவர்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்து, பட்டணத்திலுள்ளவர்களை பட்டயகருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டு விட்டார்கள்.  பின்பு அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்கு போய், அங்கு ஒரு பட்டணத்தை கட்டி அதற்கு லூஸ் என்று  பெயரிட்டான் .  அது இந்நாள் மட்டும் லூஸ் என்ற பெயரில் அறியப்படுகிறது.  

மனாசே கோத்திரத்தார் அநேக ஊர்கள், பட்டணங்களில் உள்ளவர்களை துரத்திவிடாமலிருந்ததினால் கானானியர் அந்த தேசத்தில் தானே குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.  இஸ்ரவேல் பலத்தபோது கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதிக்கட்டபண்ணினார்கள்.  மேலும் எப்பிராயீமரும் கானானியரை முற்றிலும் துரத்துவிடவில்லை.  ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள். செபுலோன் கோத்திரத்தார் பெத்ரோனின் குடிகளையும், நாகலோனின் குடிகளையும் துரத்திவிடவில்லை.  ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.  செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோனின் குடிகளையும் துரத்தி விடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களானார்கள்.  ஆசேர் கோத்திரத்தார் ஏழு பட்டணங்களின் குடிகளை துரத்தி விடவில்லை.  ஆசேரின் கோத்திரத்தார் தேசத்தின் குடிகளாகிய கனானியரின் நடுவே குடியிருந்தார்கள்.  நப்தலி கோத்திரத்தாரு பெத்ஷிமேஷின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்தி விடாமல் தேசத்தின் குடிகளோடு கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்.  ஆனால் எமோரியர் தாண் புத்திரரை பள்ளதாக்கில் இறங்க விடாமல் மலைதேசத்திற்கு போகும்படி நெருக்கினார்கள்,  ஆனால் எமோரியர் ஏரேன் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கும்படி நினைத்தார்கள்.  ஆனால் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்ததினாலும், அவர்களுக்கு பகுதி கட்டுகிறவர்களானார்கள்.  எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு தொடங்கி அதற்கு அப்புறமும் ஆயிற்று.  

பிரியமானவர்களே பன்னிரண்டு கோத்திரங்களை பற்றி முந்தின அநேக நாட்களாக தியானித்து வந்தோம்.  ஆனால் தேசத்தை பங்கிட்டு சுதந்தரித்ததையும் தியானித்தோம். ஆனால் அவர்கள் அவரவர் தேசத்திலுள்ள ஜாதிகளை துரத்தாமல், சிலர் பகுதி கட்டுகிறவர்களாயிருக்கிறார்கள்.  ஆனால் சில கோத்திரத்தால் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.  இவை எவற்றை காட்டுகிறது என்றால் திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் விளக்குவது நம்முடைய உள்ளான செயல்கள், துர்கிரியைகள் மாற்றாமல் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.  அவ்விதம் இருப்பதால் கர்த்தரை பரிசுத்தம் பண்ண முடியாமல் இருக்கிறது.  

மட்டுமல்லாமல் தேவ சாயல் அடைந்து நற்கிரியைகள் செய்ய முடியாமல் பழைய பாரம்பரிய வாழ்க்கை வாழ்வது அல்லது இருந்ததை காட்டிலும், மிகவும் ஆத்துமாவுக்கு கண்ணியும், கேடும் உண்டாக்குவது, அநேகர் தேவாராதனையில் பங்குக்கொள்ளாமல் தங்கள் இஷ்டம் போல் நடப்பது, இவற்றையெல்லாம் தேவன் சுட்டுகாட்டி, இவற்றையெல்லாம் ஜெயிக்கும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவராக, நம் உள்ளத்தில் எழுந்தருளி, அவருடைய இருபுறமும் கருக்கான வாளை வாயில் ஏந்தினவராய் புறஜாதிகளை வெட்டும் அதிகாரம் உள்ளவராய் நம் உள்ளத்தில் ஜெயித்தெழும்புகிறார்.  அப்போது கிறிஸ்துவின் சபை வெளிப்படுகிறது.  அவ்விதம் பன்னிரண்டு கோத்திரத்தாரை, ஒரே கல்லில் இணைத்து, ஒரே மாளிகை ஆக்கி, கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கும் படி கிருபை பொழிகிறார்.  

இவ்விதமான ஆசீர்வாதத்தை கிறிஸ்து மூலம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.