தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 102:21,22  

கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,

சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள் 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் சபைக்கூடி வந்து கர்த்தரை ஆராதிப்பதன் திருஷ்டாந்த விளக்கம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில். மணவாட்டி சபையாகிய நம்மை விசுவாச யாத்திரைக்கென்று கிறிஸ்துவாகிய மணவாளனோடு  நம்மை நித்திய விவாகத்திற்கென்று அழைக்கப்பட்டவர்களாய், நம்முடைய ஆத்துமா நீர்பாய்ச்சரலான தோட்டமாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

நியாயாதிபதிகள் 1:16-20  

மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.

கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.

மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும், யூதப்புத்தரரோடே பேரீச்ச பட்டணத்திலிருந்து  ஆராத்தி தெற்கேயிருக்கிற யூதாவின் பட்டணத்திற்கு வந்து அங்கே குடியேறுகிறார்கள். இதன் கருத்துக்கள் என்னவெனில் சபை ஆராதனைசெய்து, தங்கள் உள்ளத்தின் துர் கிரியைகளை அழிப்பதை திருஷ்டாந்தப்படுத்துவது, அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானிரை முறிய அடித்து, அதனை சங்காரம் பண்ணி, அந்த பட்டணத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டான்.  யூதா காசாவையும், அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.  கர்த்தர் யூதாவோவோடே இருந்தபடியினால் மலைதேசத்தரை துரத்திவிட முடிந்தது.  பள்ளதாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்ததினால் அவர்களை துரத்திவிடக்கூடாமற் போயிற்று.  மோசே சொன்னபடியே எபிரோனை காலேபுக்குக் கொடுத்தார்கள்.  அவன் அதிலிருந்து ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்தினார்கள்.  

என்னவெனில் பிரியமானவர்களே சபைகூடி வருதல் மிக முக்கியமான காரியம்.  எனெவென்றால் சபைக்கூடி ஆராதிக்கும் போது நம்மில் இருக்கிற இராட்சத ஆவிகளை கர்த்தர் அழிக்கிறார்.  ஆனால் சில சபைகளில் துர் உபதேசங்கள் கலந்திருக்கிறதால், அது இருப்பு ரதங்கள்  என்று சொல்லப்படுகிறது. என்னவென்றால் அவர்கள் உள்ளான கண்கள் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்திலிருந்து மாறமாட்டார்கள் என்று எழுதபட்டிருக்கிறது.  

ஆதலால் அனுதினம் நாம் சபையில் கர்த்தரை ஆராதித்து, அந்நிய ஆவிகளை துரத்திவிட்டு, கர்த்தரை மட்டும் மகிமைப்படுத்தி நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்.  இவ்விதம் யூதாவின் அபிஷேகம் பெற்று கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.