தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 45:10,11   

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாச யாத்திரையில், மணவாளனாகிய கிறிஸ்துவோடு, நித்திய விவாகத்துக்கென்று அழைக்கப்பட்டவர்களாய், நம்முடைய ஆத்துமா நீர்பாய்ச்சலான தோட்டமாக இருக்கவேண்டும் என்பதை குறித்ததான திருஷ்டாந்தத்தோடு விளக்கம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்படி மணவாட்டி சபையாகிறோம் என்பதனை குறித்து தியானித்தோம்.

 அடுத்தபடியக நாம் தியானிப்பது  என்னவென்றால் 

நியாயாதிபதிகள் 1:12-15  

அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.

அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.

அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.

அப்பொழுது: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது யூதப்புத்திரர்  தெபீரின் குடிகளுக்கு   விரோதமாய் போனார்கள்.    தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்ற பெயர் இருந்தது.  அப்போது காலேப் சொன்னது கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்றான்.  அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன்  ஒத்னியேல்  அதைப்பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.  அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல் வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின் மேலிருந்து இறங்கினாள்.  காலேப் அவளை நோக்கி உனக்கு என்ன வேண்டும் என்றான்.  அதற்கு அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்கு தந்தீர்;  நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்.அப்பொழுது மேற்ப்புறத்திலும், கீழ்ப்புறத்திலும்  அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.  

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது மணவாட்டி சபையை கர்த்தர் உருவாக்குகிறது என்றால், மேசியா சங்கரிக்கப்படுவதை திருஷ்டாந்தத்தில் கர்த்தர் விளக்கிக்காட்டி, அதை சங்காரம்பண்ணி பிடிக்கிறவனுக்கு அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொல்வது கிறிஸ்துவோடு நித்திய விவாகத்துக்கென்று அவருடைய இரத்தம் நம்மை மீட்டு, நாம் கிறிஸ்துவோடுகூட விசுவாச  பயணம் செய்வதும், அதற்காக நல்ல நிலமாகிய பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை  பெற்றுக்கொள்வதும், அவ்விதம் நாம் பெற்றுக்கொள்வோமானால், கிறிஸ்துவின் ஆவியால் நாம் நிறைந்து, நற்கிரியைகளை நாம் செய்து நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொண்டு, ஜாதிகளின் கிரியைகளை அழித்து, பரிசுத்த வாழ்வு வாழ்ந்து பரலோக பாக்கியம் அடையும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.