தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யூதா 15-ம் வசனம் 

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்படி மணவாட்டி சபையாக ஆகிறோம் என்பதன் விளக்கங்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தருக்கு விரோதமாக ஒருபோதும் பொய்சொல்லக்கூடாது என்பதும், அதற்கு கிறிஸ்துவே நமக்குள் சாட்சியாக இருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நியாதிபதிகள் 1:1-11  

யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.

அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.

அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.

யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.

பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.

அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.

அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.

யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.

பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.

அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.

அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை, நாம் தியானிக்கையில், யோசுவா மரித்தபின்பு, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி; கானானியரை நோக்கி யுத்தம்பண்ண யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்கும் போது, கர்த்தர்; யூதா எழுந்து புறப்படகடவன்; இதோ அந்த தேசத்தை அவன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்றரர்.  அப்போது அவன் தன் சகோதரனாகிய சிமியோனை தன் பங்கு வீதத்தில் கானானியரோடு கூட யுத்தம் பண்ண அழைக்கிறதை பார்க்கிறோம்.  அப்போது அவனும் நான் கூட வருகிறேன் என்று சொல்லி யூதாவோடேக்கூட புறப்படுகிறான்.  யூதா எழுந்துப்போனப்போதுக் கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.  

மேலும் பேசேக்கிலே அதோனிபேசேக்கை கண்டு, அவனோனுக்கூட யுத்தம் பண்ணி கானானியரையும், பெரிசியரையும் வெட்டினார்கள்.  அப்போது அதோனிபேசேக் ஓடிப்போகையில் அவனை பின் தொடர்ந்து பிடித்து  அவன் கைகால்களின் பெருவிரல்களை தறித்துப்போட்டார்கள். அப்போது அதோனிபேசேக் சொல்வது எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய்,  என் மேஜையின் கீழ் விழுந்ததை பொறுக்கித்தின்றார்கள்.  நான் எப்படி செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்கு கொண்டு போனார்கள்.  அங்கே அவன் செத்து போனான்.  மேலும் யூதாவின் புத்திரர் எருசலேமின் மேல் யுத்தம்பண்ணி, அதை பிடித்து, அதிலுள்ளவர்களை பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கி விட்டார்கள்.   பின்பு யூதாவின் புத்திரர் மலைதேசத்திலேயும், தெற்கேயும், பள்ளதாக்குகளிலிருக்கிற கானானியரோடு யுத்தம் பண்ண புறப்பட்டார்கள்.  அப்படியே யூதாவின் கோத்திரத்தார் எபிரோனிலிருக்கிற கானானியருக்கு விரோதமாய் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள்.  முற்காலத்தில் எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பெயர்.  அங்கேயிருந்து தெயீரின் குடிகளுக்கு விரோதமாய் போனார்கள்.  முற்காலத்தில் தெயீருக்கு கீரியாத் செப்பேர் என்று பெயர்.  

பிரியமானவர்களே, நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நம்முடைய இரட்சிப்பை முடிவு பரியந்தம் காத்துக்கொள்ள வேண்டு மானால், நம்முடைய தேவன் எழுதியிருக்கிற  பழைய ஏற்பாட்டின் வாரத்தைகளை கருத்தோடு தியானித்து, அதன் அர்த்தங்களையும்,அதன் புதைப்பொருட்கள் என்ன என்று கற்றறிந்து, நம் வாழ்வை அனுதினம் புதிதாக்கிக்கொண்டு, கிறிஸ்துவோடு இணைந்து வாழ்ந்தாலே நம் இரட்சிப்பை காத்துக்கொள்ள முடியும். மேற்க்கூறிய வார்த்தைகளின் உள்ளடங்கிய கருத்துக்கள், சுருக்கமாக சொல்லும் போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய பரிசுத்தவான்களுமாக நமக்குள்ளில் வந்து நம்மில் இருக்கிற கானானியனாகிய சத்துருவை கர்த்தருடைய வசனமாகிய பட்டயத்தால் வெட்டி, கர்த்தருடைய வார்த்தையினால் சுட்டெரிக்கிறார். கானானியரின் செயல்களையெல்லாம், (உலகம், மாமிசம், பிசாசு) இவற்றின் கிரியைகளை எல்லாம் நம்முடைய  உள்ளத்திலிருந்து மாற்றி கிறிஸ்து வெளிப்படுவார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி அந்த உள்ளமாகிய , எபிரோன் கீரியாத் அர்பா என்ற பெயர் உண்டாயிருந்தது.  

அதென்னவெனில் அங்கிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்.  தெபீர் என்பது நம்முடைய பாரம்பரிய பழக்கத்தைக்காட்டுகிறது.  அதற்கு தான் கீரியாத் செப்பேர்.  இந்த கீரியாத் செப்பேர் எவ்விதம் எவ்விதம் கிறிஸ்துவின் ராஜ்யமாகிறது என்பதனை அடுத்த நாளில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம்.  இவ்விதமாக நாம் பாரம்பரிய பழக்கம் மாற்றபட்டு, கிறிஸ்துவை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.