தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 19:9  

பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், தேவனுக்கு விரோதமாக பொய் சொல்லாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கிறிஸ்துவே அதற்கு சாட்சியாக இருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் தொடக்க முதல் பூரணமாகுதல் வரையிலும் வரும் மாற்றங்களை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது  

யோசுவா 24:15-33 

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.

யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.

கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.

ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.

அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.

அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.

அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.

அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.

இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,

எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி,

யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.

அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.

யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.

ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் யோசுவா கர்த்தருடைய வார்த்தைகளை, இஸ்ரவேலின் மூப்பர், தலைவர், நியாதிபதிகள், அதிபதிகள் இவர்களிடம் கர்த்தரை எவ்விதம் சேவிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, பின்பு அவன் இஸரவேலரிடம் சொல்லுகிற  வார்த்தையாவது, கர்த்தரை சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய் கண்டால், பின்னை யாரை சேவிப்பீர்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் பிதாக்கள் சேவித்த தேவர்களை சேவிப்பீர்களோ? அல்லது எமோரியரின் தேவர்களை சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான்.  

பின்பு ஜனங்கள் வேறே தேவர்களை சேவிக்கும்படி கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் தூரமாயிருப்பதாக; என்று சொன்னதுமன்றி, நம்மையும், நம்முடைய பிதாக்களையும்அடிமைதன வீடாகிய எகிப்திலிருந்து நம்மை புறப்பட பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாக அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்து, நாம் நடந்து வந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மை காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே. மேலும் தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாக துரத்தினாரே;  ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்பொம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.  

இதனை கேட்ட யோசுவா  ஜனங்களை நோக்கி:  நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன், உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.  கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களை சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்கு தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.  அதற்கு ஜனங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.  அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரை சேவிக்கும்படி நீங்கள் அவரை தெரிந்துகெகொண்டதற்கு நீங்களே உங்களுக்கு சாட்சிகள் என்றான்.  அதற்கு அவர்கள் நாங்களே சாட்சிகள்.  அதற்கு அவன் அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவிலிருக்கிற அந்நிய தேவர்களை அகற்றி விட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராக திருப்புங்கள் என்றான்.  அப்போது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கு கீழ்படிவோம் என்றார்கள்.  அந்தபடி யோசுவா அந்நாளிலே சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கை பண்ணி அவர்களுக்கு அதை பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.  இந்த வார்த்தைகளை யோசுவா நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின் கீழ் நாட்டி, எல்லா ஜனங்களையும் நோக்கி , இநத கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாக பொய்சொல்லாதபடிக்கி, இது உங்களுக்கு சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி யோசுவா ஜனங்களை சுதந்தரத்திற்கு அனுப்பி விட்டான்.  இந்த காரியங்கள் நடந்து தீர்ந்த பின்பு யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியகாரன் நூற்றுபத்து வயதுள்ளவனாய் மரித்தான்.    

பிரியமானவர்களே நாம் சுதந்தரத்தில் பங்கடைவதற்காக கர்த்தர் யோசுவா மூலம் திருஷ்டாந்தப்படுத்தியதை மேற்கூறப்பட்ட கருத்துக்கள் நமக்கு விளக்குகிறது.  அதெப்படியென்றால், நம்முடைய ஆத்தும இரட்சிப்பின் போது கர்த்தர் அநேக துர்கிரியைகளை நம் நடுவிலிருந்து அகற்றி தான் நாம் கிறிஸ்துவை சுதந்தரிக்க செய்கிறார்.  ஆனால் நாமோ அதனை பின்பற்றாமல் அநேகர் மீண்டும் துரந்தின கிரியைகளை, செய்ய முன வருகிறதால், கர்த்தர் அந்நிய தேவர்களை  நாம் ஏற்று கொண்டு அதனை பின்பற்றக்கூடாது என்று கர்த்தர் எச்சரிப்போடு கூறியும், நாம் அதனை ஏற்றுக்கொண்டேன் கர்த்தரிடம் சாட்சியாக  கூறினாலும், நம் உள்ளம் அறிந்த தேவன் நாம் ஏற்றுக்கொண்டேன், தேவன் ஒருவர் தான் என்று அறிக்கைப்பண்ணினாலும், கரத்தராகிய தேவன் நம் உள்ளத்தில் மீண்டும் எழும்புகிற துர் கிரியைகளை முன்னமே கண்டு, நாம் பொய்சாட்சி சொல்லுகிறோம் என்பதனை அறிந்த தேவன் அவருடைய நியாயப்பிரமாணத்தை நம் இருதயத்தில் எழுதுகிறார், அது மட்டுமல்லாமல், நம் உள்ளத்தில் கிறிஸ்து சாட்சியாக இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக கர்த்தர் ஒரு பெரிய கல்லை கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின் கீழ் நாட்டி, யோசுவாவை வைத்து திருஷ்டாந்தபடு்துகிறார்.  

அதென்னவெனில் யோசுவா ஜனங்களை நோக்கி இந்த  கல் நமக்குள்ளே சாட்சியாக இருக்கக்கடவது என்பதன் காரணம், நாம் தேவனுக்கு விரோதமாக பொய்சொல்லாதபடிக்கு சாட்சியாக இருக்கும் படியாகவே தான் என்பதனை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.  அதனைக்குறித்து தான் 

மத்தேயு 16:18  

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

மேற்கூறப்பட்ட வார்த்தையானது கிறிஸ்துவின் சரீரமான சபையாக தேவன் நம்மை அவருடைய சுதந்தரராக்குகிறார் என்பதனை நாம் அறிந்து அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்தவர்களாக அவருக்காய் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.