தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 9:25 

மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மனவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்ற நன்மைகளை எப்போதும் காத்துக்கொள்ளும்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்கு பயப்படுகிற பயம் உண்டாக வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வகுத்து வைக்க வேண்டும் என்று தியானித்தோம்.  அதென்னவெனில் ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும்  அவ்விதம் பிள்ளைகளுக்கு வழிகாட்டும்படியாக யோர்தானுக்கருகில் பலிபீடம் கட்டனதை பார்க்கிறோம்.  அதைத்தான் பிதாக்களின் சுதந்தரம் பிள்ளைகளுக்கு என்று எழுதப்பட்டிருக்கிறது.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 23:1-4  

கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது,

யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன்.

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் இஸ்ரவேலை சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேக நாட்கள் சென்றபின்பு யோசுவா முதிர்வயதுள்ளவனானான்.  அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய மூப்பர், தலைவர், நியாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, கர்த்தர் இஸ்ரவேருக்காக யுத்தம் செய்து ஜாதிகளுக்கு செய்த யாவையும் எடுத்துக்கூறினபின்பு, யோசுவா சொன்னது மீதியான தேசம் அனைத்தையும் கோத்திரங்களுக்கு சுதந்தரமாக  பங்கிட்டு க்கொண்டதையும், அவர்கள் ஜாதிகளுடைய தேசத்தை கட்டிக்கொள்ளும்படி, ஜாதிகளை துரத்தினதையும் கூறிவிட்டு பின்பு 

யேசுவா 23:5-8  

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

மேற்கூறிய வசனஙகள் பிரகாரம் கர்த்தர் அடுத்ததாக செய்ய போகிறதையும்,  இஸ்ரவேல் புத்திரர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி எச்சரிக்கிறான். எப்படியெனில், நீங்கள் இந்நாள் மட்டும் இருந்தது போல உங்கள் தேவனாகிய கர்த்தரை பற்றிக்கொண்டிருங்கள் என்கிறான்.  

பிரியமானவர்களே நாம் ஒருபோதும் கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து போகாமல், அனுதினம் அவர் சொற்படி நடக்கிறவர்களாக  இருக்க வேண்டும். மேலும் நம்முடைய உள்ளமாகிய தேசத்திலிருந்து, பல வித ஜாதிகளை துரத்திவிட்டு, நித்திய  ஜீவனாகிய கிறிஸ்துவை சுதந்தரிக்க செய்கிறார்.  அவ்விதம் தேவன் நமக்கு செய்த நன்மைகளை நாம் மறவாதபடி, அதனை காத்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்,  இதனை குறித்த விளக்கங்களை, கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த நாளில் கிருபையினால் தியானிப்போம்.  இவ்விதம் நாம் யாவரும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.