தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 10:36 

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் விவேகத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆசீர்வாதத்தை, சகோதர சிநேகத்தை உடையவர்களாக இருந்து, சுதந்தரித்து கொள்ள வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு நாம் தியானித்தோம்.   

அல்லாமலும், அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

யோசுவா 22:6-11 

இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது அவர்களை ஆசீர்வதித்து:

நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.

அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான்தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம், யோசுவா லேவி கோத்திரத்தாருக்கு, இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்தினின்று, அவர்கள் சுதந்தரம் கொடுத்த பின்பு அவர்களை, தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பினான்.   ஆனால் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்: அதின் மற்ற பாதிக்கு , யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடுகூட சுதந்தரம் கொடுத்தான்.  யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடும் போது ஆசீர்வதித்து சொல்வது என்னவென்றால் நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டு கொள்ளுங்கள் என்றான்.  

அப்போது, ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் கர்த்தர் கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசமாக்கிக் கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்கு போகும்படிக்கு, கானான் தேசத்திலுள்ள சீலோவாவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டு திரும்பி போனார்கள்.  ஆனால் அதன் பக்கத்தில் போகும் போது யோர்தானின் ஓரத்திலே பார்வைக்கு பெரிதான பீடத்தை கட்டினார்கள்.  இதனை இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்ட உடனே 

யோசுவா 22:12-14  

அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,

கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,

அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப்பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்பளில் உள்ள பிரகாரம் அஙர்கள் சீலோவிலே அவர்களிடம் யுத்தம் பண்ண கூடுகிறார்கள். அவர்கள் யுத்தம் பண்ணக்கடி வர காரணம் என்னவென்றால், அந்த மூன்று புத்திரரும் வேறு ஒரு பீடம் கட்டினதால் அவர்கள் கோபமடைந்து அவ்விதம் செய்ய நினைத்தார்கள்.  ஆனால் பின்பு அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொன்ன கருத்துக்கள் அவர்களுக்கு நன்மையாக தோன்றிற்று.  இதனை குறித்தான விளக்கங்கள், கர்த்தருக்கு சித்தமானால், நாளை கர்த்தரின் கிருபையினால் தியானிப்போம்.  

பிரியமானவர்களே, இதே போல் நாமும், அநேக நேரங்களில், நம்முடைய சகோதரர்கள் செய்வது தவறாக தோன்றும்.  அப்படி தோன்றுகிறதால் நாம் அவர்களை சத்துருக்கள் என்று நினைத்து விடுவோம். ஆதலால் நம்முடைய வாழ்வில் அமைதியில்லாமல், போராட்டமாகவே காணப்படும். இதன் காரணம் நம் உள்ளத்தில் விவேகம இல்லாததால். அதனால் கர்த்தர் சொல்வது நாம் விவேகத்தை பேணிக்கொள்ள வேண்டும்.  அப்போது நாம் ஒரு காரியத்தை பொறுமையோடு ஆராய்வோம்.  அவ்விதம் செய்தால் நமக்கு அமைதி கிடைக்கும்.    

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் விவேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், அப்போது கர்த்தர் நமக்கு சமாதானம் நல்கி கிருபை பொழிந்தருள்வார்.  யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.