தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 1:11,12    

அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.            

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஞானஸ்நானத்தினால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒன்றாயிருக்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கர்த்தர் பேரில் மட்டும் நம்பிக்கையாயிருப்போமாகில் பாக்கியவான்களாயிருப்போம் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 14:1- 5  

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்கு தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக் கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயெசாரும்,  நூனின் குமாரனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப்பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி  சீட்டுபோட்டு, ஒன்பதரை கோத்திரங்களுக்கும் சுதந்தரமாக பங்கிட்டார்கள்.  

இதனை திருஷ்டாந்தபடுத்தியது எதற்க்காகவென்றால், நாம் சுதந்தரிக்கிற கானான் தேசம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  அவரை சுதந்தரித்துக்கொண்டவர்கள், யாரென்றால் அவரை தரித்தவர்கள்.  எப்படியென்றால் கர்த்தராகிய இயேசுவின் பாடு மரணம், நம்முடைய வாழ்விற்கு விடுதலையாகி விட்டது.  என்னவென்றால்  

சங்கீதம் 22:17-23   

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.

உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.

மேற்க்கூறிய வசனங்கள், நம்மை பாவம், மரணம் என்பவற்றிலிருந்து விடுதலையாக்கிற்று.  எப்படியென்றால் என் வஸ்திரங்களை தங்களுக்குள்ளே, பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டு போடுகிறார்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.  இதனை திருஷ்டாந்தப்படுத்தியே பழைய ஏற்பாட்டின் பகுதியில் அனைத்து தேசங்களும் சீட்டுப் போட்டு பங்கிடப்படுகிறது.  ஆனால் மோசே ஒன்பதரை கோத்திரங்களுக்கும் பங்கிட்டு விட்டு, மற்ற இரண்டரை கோத்திரங்களுக்கும் யோர்தானுக்கு அப்புறத்தில் சுதந்தரம் கொடுத்திருந்தான்.   ஆனால் லேவி கோத்திரத்துக்கு மாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.  

பிரியமானவர்களே இரண்டரை கோத்திரம் என்னப்படுவது யோர்தானுக்கு அப்புறம் என்று எழுதப்பட்டிருப்பது, அவர்கள் யாரென்றால் கிறிஸ்துவால் ஜெயம் பெற்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறவர்கள்.  ஆனால் மனாசே, எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்;  ஆதலால் அவர்கள் லேவியருக்கு தேசத்திலே பங்குக்கொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும் அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்களுக்காக வெளி நிலங்களையும் மாத்திரம் அவர்களுக்கு கொடுத்தார்கள். அல்லாமலும் 

கலாத்தியர் 3:23-29  

ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால், நம்முடைய விசுவாசம் வருவதற்கு முன்னே நாம்,  வெளிப்படபோகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயபிரமாணத்தின் கீழ் காவல் பண்ணபட்டிருந்தோம். விசுவாசம் வந்த பின்பு அவர்கள் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. அல்லாமலும் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்துவை தரித்தவர்களும், அவர்களில் வித்தியாசம் ஒன்று மில்லை என்பதும்.  அப்படியுள்ளவர்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள்.  இவ்விதமாக  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாரையும் ஒன்றாக்குகிறார்.  இவ்விதமாக எல்லோரையும் ஒரே சகோதரதத்துக்குள்ளாக்கிறார். இவ்விதமாக நாம யாவரும் ஒன்றாக சகோதரர்களாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.