தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8: 24,25  

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?

 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கையாயிருப்போமானால் பாக்கியவான்களாயிருப்போம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு, கர்த்தரின் தகனபலியே நம்முடைய சுதந்தரம் என்பதனை நாம் தியானித்தோம்.  ஏனென்றால் லேவி கோத்திரத்தாருக்கு, வேறு சுதந்தரம் எதுவும் கொடுக்காத காரணத்தால், அவர்கள் முழு நம்பிக்கையும் கர்த்தருக்கு கொடுத்தார்கள்.   ஆதலால் கர்த்தர் அவர்களை ஆசாரியத்துவ அபிஷேகம் கொடுக்கிறதை பார்க்கிறோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 13:15-24 

மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,

சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,

யாகசா, கெதெமோத், மேபாகாத்,

கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரெத்சகார்,

பெத்பெயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான

சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:  

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் ரூபன் புத்திரரின் வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.  அல்லாமலும்   கூறப்பட்டுள்ள சமபூமி, பட்டணங்கள், மலைகளிலுள்ள, பிரபுக்களையெல்லாம் மோசே வெட்டிப்போட்டு, மோசே வெட்டின மற்றவர்களோடுக்கூட பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிச்சொல்லுகிறவனை, பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.  அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று.  இந்த பட்டணங்களும், இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.  

இவைகளின் கருத்துக்கள் கர்த்தர் மோசே மூலம் செய்த காரியங்கள் என்னவென்றால், நம்முடைய வாழ்வில் உலகத்திலுள்ள பொருட்களில் எதை நாம் பிரதானமாக வைத்திருக்கிறமோ, அந்தகாரியங்கள்நம்முடைய வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஏனென்றால் அவ்விதம் ஒரு பொருளையோ  மற்றும் எந்த உலக காரியங்களை முக்கியப்படுத்துவோமானால், அது, தேவனை காட்டிலும் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், தேவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை மற்றெல்லாவற்றிற்கும் கொடுக்கிறோம்.  இது நம்முடைய அக்கிரமம் என்பதனை சிந்திக்க வேண்டும்.  அவ்விதம் சிந்தித்து உணர்ந்து தேவனுக்கு மட்டும் மகத்துவம் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். 

மேலும் காத் புத்திரருக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்கு கொடுத்த சுதந்தரங்கள் என்னவெனில் 

யோசுவா 13:25-28 

யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,

எஸ்போன் துவக்கி ராமாத்மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,

எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

மேற்கூறப்பட்டவைகள் காத் புத்திரர்களுக்கு கொடுத்த சுதந்தரங்களாகும். மேலும் மனாசே புத்திரரின் பாதி கோத்திரத்துக்குக் கொடுத்த சுதந்தரம் என்னவென்றால் 

யோசுவா 13:30-32 

மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.

மேற்க்கூறப்பட்டவைகள்,  கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற  மோவாபின் சமனான  வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள்.லேவிக் கோத்திரத்துக்கு மோசே எந்த  சுதந்தரமும் கொடுக்கவில்லை.  இஸ்ரவேலின் கர்த்தர் சொல்லியிருந்த படியே கர்த்தரே அவர்கள் சுதந்தரம். 

பிரியமானவர்களே, இதன் விளக்கங்களை, நாம் ஆராய்ந்தறியும் போது, நம்முடைய உள்ளான மனுஷனில் சாயலில் பூரண வளர்ச்சியடையாமைக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் பன்னிரண்டு கோத்திரங்களும் பெற்றுக்கொண்ட சுதந்தரம் வேறு வேறு அனுபவங்களை காட்டுகிறது. அதெப்படியென்றால் வெவ்வேறு பகுதிகளை கொடுக்கிறதால் பூர்த்தியடையாமையை காட்டுகிறது.  ஆனால் லேவி கோத்திரமானது ஒரு நிறைவான அனுபவத்தை காட்டுகிறது. அது பலியினால் மாத்திரம் பூரண நிறைவடைய செய்கிறது.  ஆதலால் நாம் கர்த்தருடைய பலிகளில் பிரியமாயிருந்து, அவரையே நம்பிக்கையாயிருந்து, அவர்பேரில் பற்றுதலாயிருப்போமானால், கர்த்தரே பேரில் நாம் பாக்கியவான்களாயிருப்போம். இவ்விதமாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.