தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 கொரிந்தியர் 6:20  

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய சரீரத்தின் அவயவத்தை வேசியின் அவயவங்களாக்காதபடி எச்சரிக்கையாகயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில், மன அமைதியும், சமாதானமும் பெற்றுக்கொள்ள, நாம் கர்த்தருக்குள் எவ்விதம் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  நம்முடைய உள்ளான செயல்கள், நீதியின் கிரியைகளால், பரிசுத்தமாக இருந்தால் மட்டுமே நாம் மன அமைதியும், சமாதானமும் நமக்கு வரும் என்பது நிச்சயமாக இருக்கிறது. 

யோசுவா 12: 1 – 3 

யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

மேற்க்கூறிய வசனங்களில் எழுதப்பட்டிருப்பது இஸ்ரவேலர்,  யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையில்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேலர் முறியடித்தார்கள்.  அவ்விதமாக முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களை சுதந்தரித்துக்கொண்டார்கள்.  அந்த ராஜாக்களில் எஸ்போனில் குடியிருந்த  எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும், பாதி கிலேயாத்துமுட்பட்ட அம்மோன் புத்திரரின் எல்லையான  யாபோக்கு மட்டுமுள்ள  தேசத்தையும், சமனான வெளித்துவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல் மட்டும் பெத்யெசிமோத் வழியாய் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல் மட்டுமிருக்கிற  தேசத்தையும், தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.  

மேலும் யோசுவா 12: 4,5 

இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.

மேற்க்கூறிய வசனங்களில் எழுதப்பட்டிருக்கிற தேசத்தையும் ஆண்டான். அவர்களை கர்த்தரின் தாசனாகிய மோசேயும், இஸ்ரவேல் புத்திரரும்  முறிய அடித்தார்கள்.  அத்தேசத்தை மோசே ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதி கோத்திரத்துக்கும்  சுதந்தரமாக கொடுத்தான்.  

பிரியமானவர்களே, முந்தின பகுதிகளில் எழுதப்பட்டவை, யோர்தானின் அப்புறத்திலே உள்ள தேசங்களை சுதந்தரித்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருப்பது, நாம் ஞானஸ்நானத்தினால் தேவனோடு உடன்படிக்கை பெற்றுக்கொள்வது, யோர்தானை கடந்து வருவதாகும்.  அவ்விதம் கடந்து வரும் போது, கிறிஸ்துவின் சுபாவங்களும், செயல்களும், நடத்தைகளுமாகிய சகல நற் கிரியைகளும், நம்முடைய எல்லா அவயவங்களிலும் உண்டாக வேண்டும்.  இதற்காக தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, யோர்தானில் இறங்கி ஞானஸ்நானம் பெற்று நமக்கு அக்கரை சேர்வதை தெளிவு காட்டுகிறார்.  அவ்விதம் செய்து  கரையேறும்போது, வானம் திறக்கப்படுகிறது; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் உண்டாயிருந்தது.  

இதன் அர்த்தம் நாமும் அவ்விதம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு அவரோடுகூட மரித்து, உயிர்தெழுதலின் சாயலில் இணைக்கப்படுகிறோம் என்பதனை நமக்கு காட்டுகிறார்.  இவ்விதமாக கிறிஸ்துவின் ராஜ்யத்தை சுதந்தரிக்கிறோம் என்பதற்கு தான் கர்த்தர், யோசுவாவையும், இஸ்ரவேல் புத்திரரையும் வைத்து சுதந்தரிக்கிற தேசத்தை காட்டுகிறார்.   அல்லாமலும் நம்முடைய முழு தேசமும் சொந்தமாக்கிக்கொள்வது என்னவென்றால், நம்முடைய எல்லா அவயவங்களும் கர்த்தருக்கு சொந்தமாக்குகிறார் என்பதனை காட்டுகிறது.  

இதனை குறித்து 1கொரிந்தியர் 6:13-19 

வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.

தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.

உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.

வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

  மேற்க்கூறிய வசனங்கள் என்னவெனில், இரட்சிக்கப்பட்ட நம்முடைய சரீரம் கர்த்தருக்குரியது, அது வேசிதனத்திற்குரியதல்ல .  ஆதலால்தான், இதன் திருஷ்டாந்தத்திற்காகவே, புறஜாதிகளுடைய  ராஜாக்களை முறிய அடித்ததான காரியங்களை கர்த்தர் கூறுகிறார்.  அந்த ராஜாக்கள் யாரென்றால் 

யோசுவா 12:9-24  

எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

மேற்க்கூறிய வார்த்தைகளில் முப்பத்தொரு ராஜாக்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள். ஆதலால் பிரியமானவர்களே நாம் நம்முடைய சரீரத்தின் அவயவங்களை, வேசியின் அவயவங்களாக்காமல், ஜாதிகளுடைய செயல்கள் நம்மில் செயல்படாமல் பாதுகாத்துக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.