தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 32:17   

நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில், மன அமைதியும்,  தேவ சமாதானம் பெற்று கொள்ள, நாம் நடந்துக்கொள்ள வேண்டிய விதம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நாம் மனந்திரும்பினால், நம் உள்ளத்திலிருக்கிற சகல துர்கிரியைகளையும், நம்முடைய விசுவாசத்தால், நாம் நம்மை விட்டு அகற்றி விடும்படியாக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம் உள்ளத்தில், தம்முடைய ஆவியினால் யுத்தம் செய்து, இராட்சத கிரியைகளை அழித்து ஜெயம்பெறுகிறார் என்பதனையும், நாம் மனந்திரும்பாத பட்சத்தில் நம்மை பல விதத்தில் தண்டிக்கிறார் என்பதையும் நாம் தியானித்தோம்.  

அதனைக்குறித்து யோசுவாவை வைத்து அநேக காரியங்கள் திருஷ்டாந்தப்படுத்தி காட்டியிருக்கிறார் என்பதையும், மேலும் யோவானுக்கு பத்மு தீவில் தரிசனம் கொடுத்தது, நம்முடைய மனந்திரும்புதலும்,, பாவ மன்னிப்பும், இரட்சிப்பும், நம்முடைய வாழ்வில் நாம் எப்படிப் பெற்றுக்கொள்கிறோம் என்பதனை குறித்து தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது.  அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 11:13-15 

ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.

அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.

மேற்க்கூறிய வார்த்தைகளை தியானிக்கும் போது, கர்த்தர் மோசேயிடம் சொல்லியிருந்த எல்லாவற்றின் படியும், யோசுவா செய்ததை பார்க்கிறோம்.  மேலும் பத்து ராஜாக்களையும் வெட்டி, அவர்கள் பட்டணங்களையெல்லாம் பிடித்து அவர்களை சங்கரிக்கிறதை பார்க்கிறோம்.  ஆனால் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்ளையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்;  ஆத்சோரை மாத்திரம் யோசுவா சுட்டெரித்துப் போட்டான்.  ஆத்சோர் தலைமை பட்டணமாயிருந்தது. அந்த பட்டணங்களிலுள்ள மிருக ஜீவன்களையும், மற்றெல்லா கொள்ளைப் பொருட்களையும், இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்.  ஆனாலும்  எல்லா மனுஷரையும் அழித்து தீருமட்டும் பட்டய கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்.  சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.  அப்படியே கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்ட ஒன்றையும் யோசுவா செய்யாமல் இருக்கவில்லை.  

பிரியமானவர்களை நம் வாழ்வில் எந்த சூழ்நிலமை வந்தாலும் கர்த்தர் கட்டளையிட்ட ஒன்றையும் நாம் தவறாமல் செய்யவேண்டும்.  அல்லாமலும், யோசுவா செய்த காரியங்கள் எந்த அந்நிய அக்கினியோ, (உலகம்)   நம் உள்ளத்தை வஞ்சிக்காதபடி, பாதுகாக்கும்படியாக, எந்த ஜாதிகளின் பட்டணமோ, நம்மில் எழும்பாதபடி, காக்கும்படியாக அந்நிய கிரியைகளை, கர்த்தருடைய வசனமாகிய அக்கினியால் சுட்டெரித்துவிட வேண்டும்.  எதையும் அதில் மீதியாக வைக்கக் கூடாது என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். 

இவ்விதமாக யோசுவா 11:16-20   

இந்தப்பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன் தேசத்தையும், சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,

அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.

யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.

கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.

யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.

மேற்கூறப்பட்ட தேசங்களையெல்லம் யோசுவா பிடித்து அவைகளின் ராஜாக்களெல்லாரோடும் யுத்தம் பண்ணினான்.   கிபியாவின் குடிகளாகிய ஏவியரைத் தவிர ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடு சமாதானம் பண்ணவில்லை.  மற்றெல்லா பட்டணங்களையும் யுத்தம் பண்ணி பிடித்தார்கள்.   இவையென்னவென்றால் நம்முடைய உள்ளத்திலிருக்கிற சுய ஆடம்பர வாழ்க்கை என்பவைகளெல்லாம் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரணான பட்டணங்கள் எல்லாம் சுட்டெரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது.  அவ்விதம் செய்து, அந்த பொருட்கள் இஸ்ரவேலர் எடுத்துக்கொள்ளலாம் எற்று எழுதப்பட்டிருக்கிறது.  இவ்விதம் இந்த காரியங்களுக்கு இரக்கம் காட்டாமல் அந்த பொல்லாத எண்ணங்களையெல்லாம் சங்காரம் பண்ணுவது, கர்த்தரால் வந்த காரியமாயிருக்கிறது.  

அவ்விதம் யோசுவா போய் மலைதேசங்களிலுள்ள ஏனாக்கியரை நிக்கிரகம் பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடுங்கூட சங்கரித்தான். இவற்றின் தெளிவு என்னவென்றால் இஸ்ரவேலராகிய இரட்சிக்கப்பட்டவர்களின் காரியங்களில் எந்த இராட்சத ஆவிகளுடைய கிரியைகளும் நம்முடைய உள்ளில் செயல்படாதபடி மிகவும் சுத்திகரிக்கப்பட்டு, நீதியின் கிரியைகளை செய்து பரிசுத்தபடுத்த படவேண்டும் என்பதனை காட்டுகிறது. ஆனால் யோசுவா புறஜாதிகளை அழித்து பட்டணங்களை பிடித்து சுத்திகரித்ததில் காசாவிலும் காத்திலும் அஸ்தொத்த்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.  இவ்விதமாக யோசுவா, கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே தேசமனைத்தையும் பிடித்து அதை இஸ்ரவேலருக்கு அவர்கள் கோத்திரங்களின் பங்குகளின்படியே; சுதந்தரமாக கொடுத்தான்.  யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.  

பிரியமானவர்களே, நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும், தன்னைதான் இந்நாட்களில் சோதித்து அறியவேண்டுவது மிகவும் அவசியமாயிருக்கிறது.  என்னவென்றால் நம் வாழ்க்கையில் சமாதானமும், அமைதியில்லாமலிருப்பது, காரணம், நாம் முந்தின பகுதிகளை வாசித்து தியானிக்கும் போது நம்மை நாம் சோதிக்க வேண்டும்.  என்னவென்றால் நாம் விசுவாசித்து கிறிஸ்துவினால் இரட்சிக்கபட்டும்,  சமாதானம் இல்லாமலிருப்பது காரணம், நம்மில் இருக்கிற பாவம், அக்கிரமம் ஆகிய துர்கிரியைகளை முழுமையாக அழித்து விடாமல், பழைய பாரம்பரிய வாழ்க்கையையும் விட்டு விடாமல்,சிலதை சில காரியங்களுக்காக வைத்து கொண்டு வாழுகிறோம். முழுமையான ஒரு அர்ப்பணிப்பு இல்லாமை தான் இதற்கு காரணம்.  

அதனால் நமக்கு அமைதலில்லை.  இவற்றை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி, எப்போது அமைதி கிடைக்குமென்றால் நம்மில் அகற்ற வேண்டிய காரியங்களை அகற்றும் போதும், நீதியின் கிரியைகளை செய்யும் போதும்,  கிறிஸ்துவை உண்மையாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும்போது; எப்படியென்றால் நாம் கிரியைகளில் அதனை நடப்பிக்க வேண்டும்.  அப்போது, எல்லாவற்றிற்கும் மேலான தேவ சமாதானம் கிடைக்கும்.  இவ்விதமாக அமைதியும் சமாதானமும் கிடைக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.