தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 4:17 

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் பாதாளகுழியாக இராமல் பரலோகமாக மாறும்படி மனந்திரும்புவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நமக்குள் எந்த துர்கிரியைகளும் இல்லாதபடி நம்மை சுத்திகரிக்கும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக யுத்தம் பண்ணி ஜெயித்தவராயிருக்கிறார் என்று தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் யோசுவாவும், இஸ்ரவேலர் அனைவரும் அநேக ராஜாக்கள் எல்லாரையும், அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்க பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்  பண்ணினார்.  அதன் பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு திரும்பினான்.  இவ்விதமாக நடந்ததை ஆத்சோரீன் ராஜாவாகிய யாபீன் அதனை கேள்விபட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்தில், சிம்ரோனின் ராஜாவினிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும் மற்றும் 

யோசுவா 11:1-3 

ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,

வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும்,

கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.

 மேற்க்கூறிய  வசனங்களில் எழுதியிருக்கிற பத்து ராஜாக்களிடத்திற்கும் ஆள் அனுப்பினான்.    அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான ஜனமாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும். இரதங்களோடுங்க் கூடப் புறப்பட்டார்கள்.  இந்த ராஜாக்களெல்லாம் ஏகமாய் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண வைத்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே பாளயமிறங்கினார்கள்.  அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, அவர்களுக்குப் பயப்படாயாக.  நாளை இந்நேரத்திலே இவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்;  நீ அவர்கள் குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்க கடவாய் என்றார். 

யோசுவாவும், அவனோடுக்கூட யுத்த மனுஷர் அனைவரும் , திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில்  வந்து அவர்கள் மேல் விழுந்தார்கள்.  கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன் மட்டும் மிஸ்ரபோத்மாயீம்மட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளதாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி வெட்டிப்போட்டார்கள்.  யோசுவா கர்த்தர் அவர்களுக்கு சொன்னபடி, குதிரைகளின் குதிகாலை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.  

பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் பத்துக்கொம்புகள்,  யோவான் பத்மு தீவில் தரிசனம் பார்த்ததின் திருஷ்டாந்தம் தான் முந்தின பகுதியில் எழுதியுள்ள பத்து ராஜாக்களாகும்.  இவர்கள் ஏகமாய் கூடி இஸ்ரவேலோடே யுத்தம் பண்ணினார்கள் என்று எழுதப்பட்டிருப்பது, இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்தார்கள் என்று வெளி 17:13-ல் கொடுக்கப்பட்டுள்ளது.  இவர்கள் தங்கள் வல்லமையையும்,அதிகாரத்தையும் மிருகத்திற்கு கொடுப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

இவற்றின் விளக்கங்கள் என்னவென்றால் பத்து கட்டளைகளுக்கு எதிராக எழும்புகிற பொல்லாத அதிகாரங்களாகிய பிசாசின் கிரியைகள்.  இவைகள் கற்பனைகளுக்கு கீழ்படிய விடாதபடி தடுத்து, கைக்கொள்ளவிடாதபடி, தேவனை விட்டு நம்மை தூரமாக்குகிறது.  அதனால் அநேகம் பேர் பாதாளக்குழியில் அகப்படுகிறார்கள்.   இவற்றை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, பாதாளத்தையும், மரணத்தையும், ஜெயித்தவராக நம் உள்ளத்தில் எழும்புகிறார்.  அப்போது அவர்கள் கிறிஸ்துவோடுகூட இருக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். அதற்கு திருஷ்டாந்தமாக அக்காலத்திலே யோசுவா ஆத்சோரை பிடித்து, அதின் ராஜாவை பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்.  ஆத்சோர் முந்தின நாட்களில் மற்ற ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.  

இதனை குறித்து யோசுவா 11: 4-12 

அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும்கூடப் புறப்பட்டார்கள்.

இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ணவந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்.

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.

யோசுவாவும், அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள்.

கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீம்மட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.

யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.

அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.

அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான்.

 மேற்க்கூறப்பட்ட வசனங்களின் விளக்கங்கள் என்னவென்றால் பாதாளத்தின் தூதனை குறித்து  

வெளி 9:11-21  

அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.

ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,

எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.

அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.

குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.

அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;

தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

  மேற்க்கூறிய வசனங்களின்  விளக்கங்கள் என்னவென்றால் மனுஷர்கள்   செய்கிற துர்கிரியைகளினிமித்தம்  கர்த்தர் மனுஷனை தண்டிக்கிற காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும், கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளுமாயிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.  தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசிதனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை என்று கர்த்தர் கூறுகிறார். 

இவ்விதமாக கர்த்தர் நம்முடைய உள்ளம் பாதாளகுழியாக இருக்கிறது என்றால் இராட்சத கிரியைகள் கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ளவிடாமல், நம்மை துர்கிரியைகளுக்கு நேராக நடத்தி செல்வதால், கர்த்தர் நம்முடைய உள்ளத்தில், அவருடைய ஆவியினால் யுத்தம் செய்கிறார்.  அப்படி செய்து அநேக ஜனங்களை பாதாள குழியிலிருந்து மீட்டு எடுக்கிறார்.  

ஆனால் அவரை விசுவாசியாதவரகள் தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.  பிரியமானவர்களே நாம் அவருடைய சத்தத்தைக்கேட்டு எல்லா துர்கிரியைகளை விட்டு மனந்திரும்பும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.