தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2:13 

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபைகளாகிய நமக்குள் எந்த துர்கிரியைகளும் இல்லாதபடி, நம்மை சுத்திகரிக்கும்படியாக கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து நமக்காக யுத்தம்பண்ணி ஜெயிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம்,  நம்முடைய ஆத்துமாவை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: அவருடைய ஆவியினாலும், அவருடைய இரத்தத்தினாலும். செத்த கிரியைகளற சுத்திகரிக்கிற தேவனாயிருக்கிறார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  அதன் கருத்துக்கள் என்னவெனில் ஐந்து ராஜாக்களை கர்த்தர் யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்கிறதை நாம் பார்த்தோம்.  என்னவென்றால் கர்த்தர் உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உங்களுக்கு சொந்தமாக தருவேன் என்று நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்கு தத்தம் நல்கியிருந்தார்.  அந்த தேசம் இராட்சதர்கள் குடியிருக்கிற தேசம்.  

இதனை கர்த்தர் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், நம்முடைய ஆத்துமா, கிறிஸ்துவின்  ஜீவனை அடைந்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்போது, வாக்குதத்தம் உள்ள கானானுக்குள் பிரவேசிக்கிறோம் என்பது கர்த்தர் நமக்கு தந்த ஈவு.  இதனை நாம் சுதந்தரிக்க வேண்டுமானால்  ஏழுவித ஜாதிகள் நமக்குள் உண்டு என்பதற்காக, கர்த்தர் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தபடுத்தி அதனை கர்த்தர் துரத்துகிறதை வாசிக்க முடிகிறது. அதனால் கர்த்தர் கிறிஸ்துவின் ஆவியினாலும், அவருடைய இரத்தத்தினாலும் நிர்மூலம் பண்ணுகிறார் என்பது புரிகிறது.  அதில் ஐந்து ராஜாக்கள் விழுந்தார்கள்.  ஒருவன் இருக்கிறான்  மற்றவன் இன்னும் வரவில்லை;  அவன் வரும் போது கொஞ்ச காலம் தரித்திருக்க வேண்டும்.  இருந்ததும், இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடைய போகிறவனுமாயிருக்கிறான்.  

ஆனால் வெளி 17:12-14  

நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்னவெனில் நம்மிடத்தில் உள்ள பொல்லாத அதிகாரமும், துர்கிரியைகளுமே.  அதனை குறித்து தரிசனத்தில் கண்டவைகள் என்னவென்றால் பத்து கொம்புகள்; பத்து இராட்சத ஆவிகளாகிய அதிகார பிரபுக்கள்;  இவர்கள்  இன்னும் ராஜ்யம் பெறவில்லை என்பது இவர்களுக்கு இரட்சிக்க பட்டவர்களிடத்த்தில் இடம் இல்லை என்பதும், ஆனால் இவர்கள் மிருகத்துடனே ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக்கொள்வார்கள்.  என்னவென்றால் உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன், அந்த மிருகம், அதினிடத்தில் அதிகாரம் பெற்றுகொள்ளும்.  

என்னவென்றால் நாம் எல்லாரும் தெரிந்துக்கொள்ளவேண்டியது, நம் உள்ளத்தில் சிறிதளவு உலகத்தின்  கிரியைகள் இருந்தாலே, அதிகாரபிரபுவாகிய அந்த இராட்சதன், அந்த அதிகாரத்தோடே ஒருமணி நேரமாவது ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக்கொள்வான்.  இவர்கள் ஒரே யோசனையோடே தங்கள் வல்லமையும், அதிகாரத்தையும்,மிருகத்திற்கு கொடுப்பார்கள்.   பின்பு ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள். ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார். அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறாரகள் என்றான்.  இவ்விதமாக நம்முடைய உள்ளத்தில் இருந்த, இருக்கிற துர் எண்ணங்களாகிய மிருகத்தின் சுபாவங்களை அழித்து, நாசப்படுத்தி, கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை பாவம், சாபம், அக்கிரமம், மீறுதல் என்பவற்றிலிருந்து விடுதலையாக்கி இரட்சித்து மீட்பாகிய நித்திய  சுதந்தரத்தை பெற்றுக்கொள்கிறோம். 

அதனை திருஷ்டாந்தபடுத்தி காட்டவே, மோசேக்கு, அடுத்ததாக யோசுவாவை வைத்து அநேக பட்டணங்களின் மேல் யுத்தம்பண்ணி, அந்த பட்டணங்களின் ராஜாக்களையும், ஜனங்களையும் , வெட்டிப்போட்டு ஒன்றையும் மீதியாக வைக்காமல் நர ஜீவன்களையெல்லாம்  சங்காரம் பண்ணினான் என்று எழுதபட்டிருக்கிறது. இதனை குறித்து 

யோசுவா 10:28-43 

அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப்பிடித்து, அதைப்பட்டயக் கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.

மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.

கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.

லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான்.

கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,

அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,

அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான்.

பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,

அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

  மேற்க்கூறியவற்றின் கருத்து என்னவென்றால் நம் உள்ளம் பரிசுத்தபடுத்தும் படி, எந்த ஒரு துர் கிரியைகளோ, செத்த கிரியைகளோ,  இராட்சத ஆவிகளின் கிரியைகளோ, மாம்ச சிந்தையோ, உலக சிற்றின்பங்களோ, உலக வழிபாடுகளோ, நம்மில் இடம் பெறாதபடி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கர்த்தாதி கர்த்தா, ராஜாதி ராஜாவாக இருந்து அவைகளையெல்லாம் ஜெயித்து, நம்மை அவருடைய அழைக்கப்பட்ட, தெரிந்துக்கொள்ளப்பட்ட, உண்மையுள்ள கூட்டத்தாரோடு சேர்த்துக்கொள்கிறார்.   இவ்விதமாக நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.