தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 9:14 

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா செத்த கிரியைகளற கிறிஸ்துவின் ஆவியினாலும், அவருடைய இரத்தத்தினாலும் சுத்திக்கரிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபைகளாகிய நம்முடைய பகைஞர்களை, நீதிசரி கட்டுகிற தேவனாயிருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அது மட்டுமல்லாமல் முந்தின பகுதியில் ஐந்து ராஜாக்கள் குகையில் ஒழித்தார்கள்.  அதனைக் யோசுவா அறிந்து அதன் மேல் பெரிய கற்களை அதன் வாயிலே புரட்டி வைத்து அதனை காக்க மனுஷர்களை நியமித்தான். ஆனால் புறஜாதிகள் யாரும் பட்டணத்திற்குள்  பிரவேசிக்கக் கூடாது. ஆனால், புறஜாதிகள் சங்கரிக்கபட்ட பிறகு, அதில் மீதியானவர்கள் அந்த பட்டணத்திற்குள் பிரவேசித்தார்கள்.  இதன் விளக்கம் என்னவெனில், பட்டணம் என்பது எருசலமை குறிக்கிறது.  அந்த எருசலேம், கிறிஸ்துவால் மீண்டு எடுக்கப்பட்ட நாம் ஓவ்வொருவரும். நமக்குள்  புறஜாதிகளுடைய கிரியைகள் இருக்கக்கூடாது என்பதற்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வசனமாகிய பட்டயத்தால் புறஜாதிகளை அழிக்கிறார். 

அதனை குறித்து வெளி 19:14- 20

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். 

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். 

மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது, கிறிஸ்து புறஜாதிகள் மேல்அதிகாரம் பெற்றவராக ஜெயம்பெறுகிறார்.  ஆனால் அதில் மீதியான கிரியைகள் சில நம்மில் பிரவேசிக்கும் (அரணான பட்டணம்) என்று எழுதப்பட்டிருக்கிறது. 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 10:20- 27 

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.

அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.

சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள். 

மேற்க்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது இஸ்ரவேலுக்கு விரோதமாக யாரும் எதையும் பேசவில்லை என்பது புரிகிறது.  அல்லாமலும் இஸ்ரவேலர்கள் மக்கெதாவிலிருந்து எல்லாரும் சுகமாய் யோசுவாவினிடத்தில் திரும்பி வந்தார்கள்.  மேலும் யோசுவா ஐந்து ராஜாக்களும் இருந்த கெபியின் மேல் வைக்கப்பட்ட கல்லை புரட்டி தள்ளி ஐந்து ராஜாக்களையும் வெளியே கொண்டு வரச்சொல்லும் போது, அப்படியே வெளியில் கொண்டு வந்தார்கள். அப்போது யோசுவா, யுத்த மனுஷர்களாகிய அதிபதிகளிடம் நீங்கள் கிட்ட வந்து,உங்கள் கால்களை ஐந்து ராஜாக்களின் கழுத்துகளின் மேல் வையுங்கள் என்றான். அவர்கள்  கிட்ட வந்து அவ்விதமே தங்கள் கால்களை கழுத்தின் மேல் வைத்தார்கள்.  அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் எதற்கும் பயப்படாமலும், கலங்காமலும் திடமனதாயிருங்கள் என்றான்.  நீங்கள் யுத்தம் பண்ணும் படி கர்த்தர் இப்படியே உங்களுக்கு செய்வார் என்றான்.  

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துவது, அந்த கெபியானது நம்முடைய உள்ளமும், அதனுள் ஒழித்துக்கொண்ட ராஜாக்களும் என்பது உலகத்தின் அதிபதிகளாகிய இராட்சத ஆவிகள்.  இந்த பொல்லாத இராட்சத ஆவிகளை கர்த்தர்  அவருடைய கால்களின் கீழ் வைத்து அவருடைய வசனங்களாகிய பட்டயத்தினால் கொன்று போடுகிறார் என்பதை, கர்த்தர் யோசுவாவை கொண்டு,   அந்த உடலை சாயங்காலம் மட்டும், மரத்தில் தொங்க விட்டு, பின்பு அந்த உடலை அங்கிருந்து இறக்கி, அவர்கள் ஒழித்து  இருந்த கெபியிலே வைத்து, அதன் மேற்ப் பெரிய கற்களை குவித்தார்கள்.  

அதென்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,தம்முடைய ஆவியினால்நம்முடைய உள்ளத்திலுள்ள செத்த கிரியைகளற நம்மை சுத்திகரிக்கிறார் என்பது திருஷ்டாந்தபடுத்தப்படுகிறது. இதனைக் குறித்து 

வெளி 17:5-10 

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.

நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.

அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது அந்த ஐந்து ராஜாக்களின் விளக்கங்கள் நமக்கு தெரிய வரும்.  இதனைக் குறித்து நாளைக்கு தேவ கிருபையால் தியானிப்போம்.  

பிரியமானவர்களே நாம், முன்பு கூறப்பட்டுள்ள இராட்சத ஆவிக்கு, நம்முடைய உள்ளத்தில் இடம் கொடாதபடி நம்மை முழுமையும் கா்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.