தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 59: 17

அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்காக கர்த்தர் நம் பகைஞரிடத்தில் நீதியை சரிகட்டுகிற தேவனாயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை சத்துருவின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கிற விதத்தை கர்த்தர் யோசுவா மூலம் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி கர்த்தர் நமக்கு காட்டின விதத்தை நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 10: 12 - 21 

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.

இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.

ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.

நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் எமோரியரை இஸ்ரவேலின் புத்திரரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.  ஒப்புக்கொடுத்த அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கி பேசி  பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளதாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.  அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியை சரிகட்டுமட்டும், சூரியன் தரித்தது, சந்திரனும்  நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்றும்; அப்படியே சூரியன் அஸ்தமிக்க தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. 

பிரியமானவர்களே நடு வானம் என்று சொல்வது திருஷ்டாந்தத்தில் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்களின் உள்ளத்தை கர்த்தர் சொல்கிறார். மேலும் நீதியை சரிகட்டுவது என்னவென்றால், நம் ஆத்துமாவை வஞ்சித்து, நம்மை கர்த்தரை விட்டு தூரமாக்கின சத்துருக்களாகிய பொல்லாதவர்களாகிய புற ஜாதியார் நம்மை நெருக்கும் போது, கர்த்தர் நமக்காக துணை செய்து, நமக்காக யுத்தம் செய்து, நம்முடைய பகைஞர்களுக்கு கர்த்தர் நீதியை சரிகட்டும்படி சூரியனாக கர்த்தராகிய இயேசுவும், சந்திரனாக பரிசுத்த ஆவியானவரும் நமக்காக, நாம் வேண்டிக்கொள்வது போல், நம்முடைய உள்ளத்தில் நின்று நமக்காக யுத்தம் செய்கிறவராக வெளிப்படுகிறார் என்பதனை நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறார். 

இப்படி கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்நாளுக்கொத்த வேறொரு நாள் இதற்கு முன்னுமில்லை, இதற்கு பின்னுமில்லை என்பது நாம் நிச்சயமாக அறிந்துக்கொள்ள முடியும். ஏனென்றால் இப்போது மனுஷனல்ல, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நமக்காக பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்து, நமக்காக யுத்தம் செய்து நாம் வெற்றிப்பெறும்படி செய்கிறார். இவ்விதமாக கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணின பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட  கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு இறங்கினான்.   

அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய் மக்கொதாவிலிருக்கிற  ஒரு கெபியிலே ஒழித்துக்கொண்டார்கள்.  அவ்விதமாக கெபியில் ஒழித்து அகப்பட்டார்கள்  என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது யோசுவா பெரிய கற்களை கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களை காவல் காக்க மனுஷரை வையுங்கள்.  நீங்கள் நில்லாமல், உங்கள் சத்துருக்களை துரத்தி, அவர்கள் பின்படைகளை வெட்டிப்போடுங்கள் என்றான்.  அவர்களை பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.  யோசுவாவும், இஸ்ரவேல் புத்திரரும் அவர்கள் மகாசங்காரமாய் அழியுமளவும் சங்கரித்தார்கள்.  அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.  ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.   யாரும் இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக தங்கள் நாவை அசைக்கவில்லை.  

பிரியமானவர்களே நமக்கு விரோதமாக பலரும் பலதும் பேசுவார்கள், அது நம்மில் இருக்கிற சத்துருக்களின் கிரியைகள் என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.  அதனால் நம்முடைய சமாதானத்திற்கு விரோதமாக போராடுகிறது.    அதனின்று நாம் விடுதலை பெற்றுக்கொள்ள அவருடைய வசனத்தால் நாம் அவற்றை சங்கரிக்க வேண்டும்.  இல்லை என்றால் அதன் காரணமாக கர்த்தர் நம்மை மற்றவர்களை வைத்து நெருக்கம் உண்டாக்குவார்.  ஏனென்றால் அப்படியிருந்தால் நாம் சமாதானத்தின் தேவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவருக்கு இடம் கொடுப்போம் என்ற காரணத்தால் கர்த்தர் அவற்றை செய்து, கிறிஸ்து சூரியனாகவும், பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் சந்திரனாகவும் நம்மில் சேனையுமாக நின்று யுத்தம் செய்து சத்தருக்களை ஜெயித்து, எருசலேம் பட்டணத்தில் அவர்கள் பிரவேசிக்காதபடி தடுக்கிறார். 

ஆனால் அந்த சங்காரத்தால் விழாதவர்கள் அரணான பட்டணத்தில் புகுந்தார்கள்;  ஆனால் இஸ்ரவேலருக்கு விரோதமாக யாரும் நாவை அசைக்கவில்லை.  இவ்விதமாக நமக்கு விரோதமாக பேசுகிறவர்களின் நாவை கர்த்தர் நிறுத்துகிறார்.  இவ்விதமாக நம் உள்ளம் தூய்மைப்பட ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.