தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 37:40

கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை சத்துருவின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கிற விதம்- திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை புற ஜாதிகளின் கிரியைகளால் கலக்காதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 10:1-2  

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது யோசுவா ஆயியை பிடித்து அதை சங்காரம் பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி ஆயியிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம் பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விபட்டபோது, கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றை போல பெரிய பட்டணமும், ஆயியை போல பெரிதுமாயிருந்த படியினாலும், அதின் மனுஷர்களெல்லாம் பலசாலிகளாயிருந்த படியினாலும் மிகவும் பயந்தார்கள்.  

அப்போது எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் செய்தது 

யோசுவா 10: 3, 4 

ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

மேற்க்கூறப்பட்ட  வசனங்களில் எழுதப்பட்ட ராஜாக்கள் எல்லாருமாகிய ஐந்து ராஜாக்களும் கிபியோனுக்கு முன்பாக பாளயமிறங்கி அதின் மேல் யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற யோசுவாவினிடத்திற்கு  ஆள் அனுப்பி, உமது அடியாரை கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்கு துணைசெய்யும்.  பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாக கூடினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.  அப்போது யோசுவாவும், யுத்த மனுஷர் யாவரும் கில்காலிலிருந்து போனார்கள்.  அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி அவர்களுக்கு பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவனும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.  யோசுவா கில்காலிலிருந்து நாள் முழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள் மேல் வந்து விட்டான்.  

மேலும் யோசுவா 10:10,11 

கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது கர்த்தர் அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாக கலங்கப்பண்ணினார். கிபியோனிலே மகா சங்காரமாய் மடங்கடித்து , பெத்தெரோனுக்கு போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.  அப்படி அவர்கள் ஓடிப்போகையில் கர்த்தர் வானத்திலிருந்து அவர்கள் மேல் பெரிய கற்களை விழப்பண்ணினதினால் அவர்கள் செத்தார்கள்.   இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களை காட்டிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.  

பிரியாமானவர்களே கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை சத்துருவின் கையிலிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் விடுவித்து இரட்சிக்கிறார் என்பதின் கருத்தை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  நாம் தேவனோடு எப்படி ஐக்கியமுள்ளவர்களாக இருக்கிறோமோ, அதற்கு தக்கதாக நம்மை விடுவிப்பார் என்பதில் சந்தேக மில்லை.  இதன் பொருள் என்னவென்றால் உள்ளான மனுஷனை பரிசுத்த குலைச்சலாக்கும் படியாக, இவ்வித ராஜாக்களாகிய இராட்சதர்கள் எழும்புவார்கள்.  அதனை நாம் எச்சரிப்போடே இருந்து  கிபியோனின் மனுஷர் எவ்விதம் யோசுவாவின் துணையை நாடினார்களோ அதே போல் நாம் நம்முடைய விசுவாச வாழ்க்கையில் எப்போதும் கர்த்தரின் கரம் விடுதலையாக இருக்கவேண்டும் என்று நினைத்து நாம் கர்த்தருக்கு கீழ்படிந்து அவரை நாட வேண்டும்.  அப்போது கர்த்தர் நமக்கு உதவி செய்து நம்மை விடுவிப்பார்.  நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து தப்புவிக்கப்படும். அதற்காக தான் அவர்கள் யோசுவாவை நாடினதை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நம்மையும் கர்த்தர் எல்லா ஜாதிகளின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கும்படியாக நாம் கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.