தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 14:20

போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் போஜனபதார்த்தங்களை புசிப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தரோடு உடன்படிக்கை எடுக்கும் போது சாத்தானுடைய செயல்களுக்கு உடன்படாமல், ஜாக்கிரதையோடு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதை நாம் திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 9: 12- 15 

 உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.

நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.

யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது கர்த்தருடைய செயல்களை அறிந்து இஸ்ரவேல் சபையோடு உடன்படிக்கை பண்ணிக்கொள்ள தூரதேசத்திலிருந்து கடந்து வந்த புறஜாதிகளுடைய ராஜாக்கள்,  இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணிக்கொள்ளுங்கள் என்ற போது,  இஸ்ரவேல் ஏவியரிடம், நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கிறவர்களாக்கும்;  எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றதற்கு, அவர்கள் யோசுவாவிடம் நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.  அதற்கு யோசுவா நீங்கள் யார்? எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.  

அதற்கு அவர்கள் கர்த்தரின் நாமத்தின் பிரஸ்தாபத்தை  பற்றி அறிந்ததையும், அவருடைய கீர்த்தியை கேட்டு அறிந்ததையும், எகிப்திலே செய்த யாவையும்  மற்றும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், அஸ்தரோத்திலிருக்கிற பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கிற எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப் பட்டோம்.  ஆகையால் எங்கள் மூப்பரும், எங்கள் தேசத்து குடிகளெல்லாம் எங்களை நோக்கி சொன்னது, உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டு போய், அவர்களிடத்தில் நாங்கள் உங்களுக்கு அடிமை, எங்களோடே உடன்படிக்கை பண்ண வேண்டும் என்று சொல்ல சொன்னார்கள்.  மேலும் அவர்கள் சொன்னது, நாங்கள் உங்களிடத்தில் வர புறப்படுகிற அன்றே, நாங்கள் வழி பிரயாணத்திற்கு அப்பத்தை சுடசுட வீட்டிலிருந்து எடுத்து வந்தோம்.  ஆனால் இப்போதே, உலர்ந்து, பூசணம் பூத்திருக்கிறது.  அல்லாமலும் திராட்ச ரசம் நிரப்புகையில் புதிதாயிருந்தது, ஆனாலும், இதோ கிழிந்து போயிற்று. நெடுந்தூர யாத்திரையிலே பாதரட்சைகளும் வஸ்திரங்களும் பழசாய் போயிற்று என்றார்கள்.  அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தருடைய வாக்கை கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தங்களில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.  மேலும் யோசுவா அவர்களோடே சமாதானம் பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள். 

பிரியமானவர்களே மேற்க்கூறிய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால் போஜனபதார்த்தங்களில் கர்த்தரோடு உடன் படிக்கை எடுக்கும் போது, நாம் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், கர்த்தர் நமக்கு சொன்னது, 

நீதிமொழிகள் 23:1-7  

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது போஜனபதார்த்தங்களை புசிப்பதில் கவனமாயிருக்க வேண்டும்.   எல்லாரிடத்திலுமிருந்து நாம் வாங்கி புசிக்கக்கூடாது என்பது கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற நியமம்.  காரணம் கிறிஸ்துவை தரித்தவர்கள் என்பது, புது உடன்படிக்கை பெற்றுக் கொண்டவர்கள்.  அப்படிபட்டவர்கள் தான் இஸ்ரவேலர்.  அவர்கள் எப்போதும் தேவனோடு ஐக்கியபட்டவர்களாக காணப்பட வேண்டும்.  இதனை முறிக்கவே சத்துரு தந்திரமாக நுழைவான் என்பதற்காகவே மேற்க்கூறப்பட்டவைகள் திருஷ்டாந்தம்.  

அவ்விதமாக பழைய பாரம்பரியமாக ஜாதியின் கிரியைகள் நமக்குள் வந்து வஞ்சித்து விடும் என்பதற்காகவே கர்த்தர் யோசுவாவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஏனென்றால் அவர்கள் (ஜாதிகள்) கொண்டு வந்தது எல்லாமே பழையது. அவற்றை இஸ்ரவேலர்கள் வாங்கி, கர்த்தரின் கட்டளைகளை மீறினார்கள்.  யோசுவா அவர்களோடு, உடன்படிக்கை பண்ணி்கொண்டான். பின்பு தானும், இஸ்ரவேலரும் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்துக்கொண்டார்கள்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஜாதிகளால் வஞ்சிக்கப்படாதபடி கவனமாய் ஆராய்ந்தறிந்து அனுதினம் கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.