தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 யோவான் 3:7

பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடு உடன்படிக்கை செய்யும் போது, சாத்தானுடைய செயல்களுக்கு உடன்படாமல் ஜாக்கிரதையாக ஒப்புக்கொடுப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சமூகத்திலிருந்து சாபத்தையல்ல ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும் என்று தியானித்தோம். அதெப்படியென்றால் இஸ்ரவேல் சபையாகிய பன்னிரண்டு கோத்திரங்களில் கழிந்த நாளில் எழுதிய பகுதியில் இரண்டு மலைகள் எழுதப்பட்டிருக்கிறது.  ஒன்று ஏபால் மலையும், இரண்டாவதாக கெர்சீம் மலையும். 

 இந்த மலைகளை குறித்து உபாகமம் 27:11-15  

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:

நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:

கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்காக இரண்டு மலைகள் கர்த்தர் எடுத்து காட்டுகிறார்.  என்னவென்றால்  ஆசீர்வதிக்கும் மலையும், சாபங்கூறும் மலையும்.   ஆனால் அவற்றில் கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும், வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டு பண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக.  அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லும்படி சொல்லப்படுகிறது. 

இதனை நாம் தியானிக்கும் போது அருவருப்பான விக்கிரகங்களை செய்து ஒளிப்பிடத்தில் வைக்கிறவன்  சபிக்கப்பட்டவன் என்கிறார். இதன் கருத்துக்கள் என்னவென்றால் சாபங்கூறும்பொருட்டு ஏபால் மலையை கர்த்தர் சொல்கிறார்.  ஆனால் ஆயிப்பட்டணத்தை பிடித்து பின்பு அங்கு கொள்ளையாடினப் பொருட்களையும் மிருக ஜீவன்களையும் இஸ்ரவேலர் கர்த்தரின் சொற்படி எடுத்துக்கொண்டு, ஆயி ராஜா உயிரோடே பிடித்து, மரத்தில் தொங்க விட்டு பின்பு அந்த உடலை பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை குவித்தார்கள்.  

பின்பு ஏபால் மலையில் பலிபீடம் கட்டபட்டது.  அதில் யோசுவா பலிசெலுத்தினான்.  இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஆயிப்பட்டணம்,  அதின் ராஜா சபிக்கபட்டதாக எழுதப்பட்டிருக்கிறது.  அதனால் கர்த்தர் சாபத்தீடானவைகளை நம்மை விட்டு மாற்றுகிறார்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 9: 1- 11  

யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,

அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.

எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,

ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து,

பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.

அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கைபண்ணலாம் என்றார்கள்.

அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,

அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.

ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள ஏழு தேசத்து ராஜாக்களும்  எரிகோவிலும், ஆயிக்கும் நடந்ததை கேள்விப்பட்டு, அவர்கள் ஒருமனப்பட்டு யோசுவாவோடும், இஸ்ரவேலோடும் யுத்தம் பண்ண ஏகமாய் கூடினார்கள்.   மேலும் எரிகோவுக்கும், ஆய்யிக்கும் செய்ததை  கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டு  தந்திரமான யோசனைப்பண்ணி  ஸ்தானாபதிகள் போல் காண்பித்து, பழைய இரட்டு பைகளையும், பீறலும், பொத்தலுமான பழைய திராட்ச ரச துருத்திகளையும், தங்கள் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு பழுது பார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளை தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.  

அவர்கள் கில்காலில் இருக்கிற யோசுவாவிடத்தில் பாளயத்திற்கு போய் அவனையும், இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி நாங்கள் தூர தேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கை பண்ணுங்கள் என்றார்கள்.  அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி; நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள்.  இவ்விதமாக அவர்கள் தந்திரமான யோசனை செய்து  இஸ்ரவேலரை வஞ்சிக்கும்படியாக திட்டம் பண்ணுகிறார்கள்.  

இவ்விதமாக அநேகம்  ஜனங்களில் சாத்தானுடைய செயல்கள் உள்ளத்தை வஞ்சிக்கும்.  எப்படியெனில் அவர்களின் கிரியைகள், ஏழ்மை கோலம் போல் வேஷம் தரித்து, அவர்களில் கெட்ட கிரியைகளாகிய கெட்ட கனிகள் உண்டாயிருக்கும்.  ஆனால் பழைய பாரம்பரிய வாழ்க்கைகளை விடாமல், சுவிசேஷ வேலையை செய்து வரும்போது, அநேகரால் அறிந்துக்கொள்ள முடியாது.  இவ்விதமாக அநேகர் இதுவும் தேவனுடைய செயல் என்று ஏமாந்தவர்களாக ஜாதிகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து வஞ்சிக்கப்பட்டுவிடுவார்கள்.  இதற்காகவே மேற்க்கூறிய பகுதியை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   

ஆதலால் நாம் கர்த்தரோடு எடுக்கிற உடன்படிக்கையில் பிசாசின் கிரியைகளுக்கு உடன்படாமல் ஜாக்கிரதையோடு கர்த்தருக்காய் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.