தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 8: 13

சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சமூகத்தில் சாபத்தையல்ல ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் இருக்கிற புறஜாதிகளின் கிரியைகளை அதிகாலையில் கர்த்தருடைய வசனமாகிய அக்கினியால் சுட்டெரித்து சுத்திகரிப்பது குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 8:22- 33 

பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.

இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.

ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.

யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,

ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

அதின்மேல் கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.

இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.

இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிப்போமானால் ஆயி பட்டணத்தை பிடித்து கொண்டு, ஆயியின் மனுஷர்களை இஸ்ரவேலர் பட்டயகருக்கினால் வெட்டி தீர்ந்த போதும்,  அவர்கள் பட்டயத்தினால் விழுந்து இறந்த போதும் இஸ்ரவேலர் திரும்ப ஆயிக்குள்ளாக வந்து அவர்களை சங்கரித்தார்கள்.  இதன் காரணம் என்னவென்றால் நம்மில் இருக்கிற செத்த கிரியைகளை, தேவனுடைய வசனத்தால் அழித்தாலும், மீண்டும் நம்மில் அது கிரியை செய்யாத படி முழுமையாக நாம் அதனை சங்கரிக்க வேண்டும்.  

இதன் விளக்கத்திற்காக நம்முடைய அக்கிரம செயல்கள் யாவையும் சங்கரிக்கும்படியாக கர்த்தராகிய இயேசுவைக்குறித்து மேசியா சங்கரிக்கப்படுவார் என்று எழுதப்பட்டிருப்பது, நம்முடைய பாவம், அக்கிரமம் என்பவைகளுக்காக மேசியா சங்கரிக்கப்பட்டு, புதிய எருசலேமாக திரும்ப நாம் கட்டப்படுவதற்காக, செத்த புறஜாதிகளின் கிரியைகள் நம்மை விட்டு முழுமையும் மாற்றபட்டு மீண்டும் அந்த கிரியைகள் உயிர்பெறாதபடி, கிறிஸ்துவின் ஆவியால் உள்ளான சாயல் உயிர்ப்பிக்கபடுகிறது.  

இதனை குறித்து தானியேல் 9:22-27 

அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.

நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

மேற்கூறிய வார்த்தைகள் தானியேல் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் வெளிப்படுத்தி, கிறிஸ்துவினால் எல்லாம் செய்து எடுக்கிறார்.  ஆதலால் நாம் யாவரும்  கிறிஸ்துவை விசுவாசித்து அவர் பாதையில் நடப்போமானால் இரட்சிக்கப்படுவோம்.  அவ்விதம் ஆயியின் மனுஷர் ஆணும், பெண்ணுமாக பன்னீராயிரம் பேர் விழுந்தார்கள்.  ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரிக்கும் மட்டும் யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்தான்.  

அல்லாமலும் இஸ்ரவேலர் கர்த்தரின் வார்த்தையின் படியே ஆயி பட்டணத்தின் கொள்ளையையும், மிருக ஜீவன்களையும் எடுத்துக்கொண்டார்கள்.  பின்பு யோசுவா ஆயியை சுட்டெரித்து, அதை இந்நாள் இருக்கிறபடி என்றன்றைக்கும் பாழாய் கிடக்கும் மண்மேடாக்கினார்கள்.    ஆயியின் ராஜாவை ஒருமரத்தில் தூக்கிப்போட்டு, சாயங்காலம் மட்டும் தொங்க விட்டு பின்பு மரத்திலிருந்து இறக்கவைத்து, அதை பட்டண வாசலில் போட்டு, இந்நாள் வரைக்கும் இருக்கிற  பெரிய கற்குவியலை அதன் மேல் குவித்தார்கள். 

பின்பு யோசுவா கர்த்தரின் தாசனாகிய மோசே, இஸ்ரவேல் புத்திரருக்கு கட்டளையிட்ட படியும், நியாயபிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற படியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம் படாத முழு கற்களால் ஒரு பலிபீடம் கட்டி, கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளையும் இட்டார்கள்.  அதன்பின்பு 

யோசுவா 8:32-33 

இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.

இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் யோசுவா ஒன்றும் விடாமல் செய்தான், அதன் பின்பு 

யோசுவா 8:34,35 

அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.

மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.

வார்த்தைகளை  எல்லாருக்கு முன்பாக வாசித்தான். 

இவ்விதமாக பிரியமானவர்களே மேற்க்கூறியவைகளை நாம் தியானிப்போமாகில் நம் துர்கிரியைகளையெல்லாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் அழித்து விட்டு, கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு கற்ப்பித்தபடி அவருடைய கட்டளைகளின் படி நடந்து, சாபத்தை பெற்றுக்கொள்ளாதபடி எச்சரிக்கையாக இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.