தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 63:9

என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாச யாத்திரை கர்த்தரின் சித்தம்  செய்தால் வெற்றிப்பெறுவோம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைவதை குறித்து தியானித்தோம்.  எப்படியெனில் ஆவிக்குரிய வளர்ச்சியடைவது எப்படியென்றால் நம் உள்ளமானது அனுதினம் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.  அதெப்படியென்றால் நம்மில் அநேக ஜாதிகளின் கிரியைகள் செயல்பட்டு கிறிஸ்துவின் சத்திய உபதேசத்திற்கு மாறாக நடக்க தூண்டிக்கொண்டிருக்கும்.  அப்போது நாம் பாவம் செய்து அக்கிரமத்தால் கறைப்பட்டு மீறுதலுக்குட்பட்டு விடுவோம்.  அவ்விதம் நம் வாழ்வில் கிடைத்த வெளிச்சம் நஷ்டப்பட்டு போகும்.  

ஆதலால் வேத சத்தியத்தின் படி கேட்டறிந்து ஆராய்ந்து நம்மில் இருக்கிற குறைகளை அறிக்கை செய்து, தேவனிடத்தில் இருந்து இரக்கம் பெற்று கொள்வோமானால், நம் சத்துருக்களிடத்தினின்று  விடுதலை பெற்றுப்கொள்வோம்.  அவ்விதம் அனுதினம் நம்முடைய உள்ளத்தை புதிதாக்கி கொண்டு, சத்தியத்தின் பிரகாரம் நடப்போமானல் ஆவிக்குரிய வளர்ச்சியில் அன்றாடம் வளர முடியும்.  இதனைக்குறித்து சில காரியங்கள் கழிந்த நாளில் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 8:1- 3 

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.

அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி,

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் ஒரு தடவை ஆயியை எதிர்த்து ஜெயம் பெற்றுக்கொள்ளாமல் போனது காரணம் ஆகான் ஆனதால்,  யோசுவா கர்த்தருடைய வார்த்தையின் படியே அக்கினியால் சுட்டெரித்து புதைக்கிறதை நாம் வாசிக்கமுடிகிறது.  பின்பு கர்த்தர் யோசுவாவிடம், நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு, நீ யுத்த ஜனங்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு போ.  ஆயியின் ராஜாவையும், அவன் ஜனத்தையும், அவன் நாட்டையும், பட்டணத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்றார்.  

அதன் காரணம் ஆகான் தனக்கென்று மறைத்து வைத்திருந்த பொருளாகிய ஒரு பாபிலோனிய சால்வை,  இருநூறு வெள்ளி சேக்கலையும்,  ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும், ஆகானிடத்திலிருந்து அறிந்து அதனை ஆட்களை அனுப்பி அதனை எடுத்து அழித்து விடுகிறான்.  ஆதலால் கர்த்தர் ஆயியை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்கிறார்.  பின்பு யோசுவா யுத்த ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு ஆயிக்கு புறப்பட்டான்  

பிரியமானவர்களே, நம்முடைய புறப்படுதல் தேவ சித்தம் செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.