தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 4:11-13

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைதல்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆவிக்குரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை இஸ்ரவேல் சபையை வைத்து கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  என்னவென்றால் சாபத்தீடான எதையாகிலும் நாம் வைத்துக்கொண்டால், அவர்கள் சாபத்தீடானவர்கள் என்றும், அதற்கு உதாரணமாக கர்த்தர் எரிகோ பட்டணத்தின் வாசல்கள் யாரும் போக்கும், வரத்தும் இல்லாமல் அடைக்கப்பட்டிருக்கிறதும், அதின் அலங்கம் இடிந்தால் மட்டுமே அதற்குள் பிரவேசித்து, கானானை நோக்கி யாத்திரை தொடர முடியும் என்பதையும் நமக்கு விளக்கிக்காட்டியிருக்கிறார்.  

அதெப்படி இடிந்து விழுந்தது என்றால் ஆசாரியர்கள் எக்காளம் ஊதுகையிலும், ஏழு நாளில் முதல் ஆறு நாளும் ஒரு முறையும்,ஏழாம் நாளில் ஏழுமுறை ஆசாரியர்கள் எக்காளம் ஊதவும், ஜனங்கள் கர்த்தரை மகா சத்தமாய் ஆர்ப்பரிக்கும் போதும் அலங்கம் இடிந்தது.  இவ்விதமாக கர்த்தர் பாரம்பரியமான சாபங்களை துதியின் சத்தத்தால் உடைக்கிறார்.  ஆனால் அவர் சொன்னது அதில் சாபதீடானதை யாரும்எடுத்து சாபத்தீடாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.  

ஆனால் ஆகான் என்பவன் சாபதீடானதில் சிலதை எடுத்துக்கொண்டான் என்பது ஆயீ பட்டணம் பிடிக்கும் படி இஸ்ரவேல் சபை புறப்பட்டபொழுது தெரியவருகிறது. ஆனால் எமோரியருக்கு முன்பாக புறமுதுகு காட்டினார்கள்.  அப்போது அதன் காரணம் என்ன என்று யோசுவா கர்த்தரிடத்தில் விசாரித்த போது கர்த்தர் இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்.  நான் அவர்களுக்கு இட்ட உடன்படிக்கையை மீறினார்கள்.  சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவு செய்ததும் வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. அதனால் இஸ்ரவேல் புத்திரர் சத்துருக்களுக்கு முன்பாக நிற்க கூடாமல்  முதுகு காட்டினார்கள் என்று கர்த்தர் சொன்னார்.  

அதனை திருஷ்டாந்தபடுத்தினது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் சபிக்கப்பட்ட பொருளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு  இவைகளாகிய பாரம்பரிய அலங்கரிப்பை தங்கள் சரீரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும், அவ்விதம் அகற்றின காரியங்களை எந்த ஒரு நிலைமையிலும் மற்றவர்கள் எடுக்கக்கூடாது என்றும், அவ்விதம் எடுத்து எங்கு மறைத்து வைத்திருந்தாலும், கர்த்தரின் கண்களுக்கு முன்பாக அதனை மறைக்க முடியாது என்பது நமக்கு புரியவேண்டும்.  அவ்விதம் செய்தால் அது உள்ளான மனுஷன் பரிசுத்தபடவில்லை என்று உணர்ந்து அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.  

அதனால் கர்த்தர் யோசுவாவிடம் சொல்கிறார்; நாளைய தினத்துக்காக ஜனங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்.  சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது.  சாபதீடானது உங்கள் நடுவிலிருந்து விலக்குமட்டும் நீங்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்க கூடாது என்று கர்த்தர் சொல்கிறார்.  மேலும் கர்த்தர் சொல்வது நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்.  அப்போது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்.  கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்.  கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல் என்ற போது யோசுவா அப்படியே செய்தான். 

அவ்விதம் கர்த்தர் சொன்னது போல் செய்த போது ஆகான் குறிக்கப்பட்டான்.  ஆனால் 

யோசுவா 7:19-24  

அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.

அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்.

கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.

உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.

அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.

அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது ஆகானையும், அவன் குடும்பம் அனைத்தையும், அவனுக்குள்ள யாவற்றையும் கர்த்தர் சொன்னது போல் சுட்டெரிக்கும்படியாக ஆகோர் பள்ளதாக்குக்கு கொண்டு போனார்கள்.  பின்பு யோசுவா ஆகானிடம் நீ எங்களை கலங்க பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னை கலங்கப்பண்ணுவார் என்று சொன்னபோது இஸ்ரவேலரெல்லாம் அவன் மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து கற்களினால் மூடி இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்குவியலை குவித்தார்கள். அப்போது கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்.  ஆகையால் அந்த இடம் இந்நாள் வரைக்கும் ஆகோர் பள்ளதாக்கு எனப்படும்.  

பிரியமானவர்களே  கர்த்தர் நம்மிடம் உள்ள கோபத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானால், நம்முடைய உள்ளான பாரம்பரிய கிரியைகள் எல்லாம் கர்த்தருடைய அக்கினியால் சுட்டெரித்து சுத்தம் செய்யும் போது, அவர் தம்முடைய கோபத்தை நம்மை விட்டு மாற்றுவார்.  பின்பு நாம் ஆவிக்குரிய வளர்ச்சியில் விழாதபடி வளரமுடியும், சத்துருக்களோடு எதிர்த்து நிற்க முடியும்.  கர்த்தர் நமக்கு துணை நின்று யுத்தம் மேற்கொள்வார்.  நாம் தேவ ஆவியில் வளருவோம்.  இவ்விதம் வளரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.