தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 31:7

உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ச்சைக்கு காரணம் ?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சாபத்தீடானவைகளை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோமானால் நம்முடைய ஆத்துமா சாகும் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.   

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 7:1- 10 

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை வேவுபார்த்து,

யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.

அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.

அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.

யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.

கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரை பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதில் துரோகம் பண்ணினார்கள்.  எப்படியெனில் சாபத்தீடானதில் எதையும் உள்ளத்திலோ, வீட்டிலோ ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கர்த்தர் யோசுவா மூலம் இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னார்.  ஆனால் யூதா கோத்திரத்துச் சோராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்கு பிறந்த ஆகான் என்பவன் சாபத்தீடானதில் சிலதை எடுத்துக்கொண்டான்.  ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தரின் கோபம் மூண்டது.  

மேலும் யோசுவா ஆயிப்பட்டணத்தை வேவுபார்க்கும் படி ஆட்களை அனுப்பினான்.  அவர்கள் போய் ஆயியை வேவு பார்த்து விட்டு, யோசுவாவிடத்தில் வந்து, அவனை நோக்கி ஜனங்கள் எல்லாரும் போக வேண்டுவதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம், மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும்  அங்கு போகும் படி கட்டாயப்படுத்த வேண்டியதில்லை, அவர்கள் கொஞ்சம் பேர் தான் என்றார்கள்.   அப்படியே மூவாயிரம் பேர் அவ்விடத்திற்கு போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷர்களுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். ஆயியின் மனுஷர் அவர்களில் முப்பத்தாறுபேரை வெட்டிப் போட்டார்கள்.  அவர்களை பட்டண வாசல் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களை துரத்தி, மலையிறக்கத்திலே  அவர்களை வெட்டினார்கள்.  ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய் போயிற்று.  

அப்போது யோசுவா தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலம் மட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளில் புழுதியை போட்டுக்கொண்டே கிடந்தார்கள். அப்பொழுது யோசுவா கர்த்தரிடம், ஆ எங்கள் கர்த்தராகிய ஆண்டவரே எங்களை அழிக்கும்படிக்கு  எமோரியர் கையில் ஒப்புக்கொடுக்கவா இந்த ஜனங்களை யோர்தானை கடக்கப்பண்ணினீர், யோர்தானுக்கு அப்புறத்தில்  மனதிருப்தியாக இருந்து விட்டோமானால் நலமாயிருக்கும் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் சத்தருக்களுக்கு புறமுதுகு காட்டினார்கள், ஆனால் கானானியரும், தேசத்து குடிகள் யாவரும் இதனை அறிந்து எங்களை வளைந்துக்கொண்டு, எங்கள் பேரை பூமியில் இராதபடிக்கு அற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்போது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்று கர்த்தரிடத்தில் கேட்க, கர்த்தர் அவனிடம், நீ எழுந்திரு, இப்படி விழுந்து கிடக்கிறது என்ன?  

யோசுவா 7:11-14  

இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.

மேற்க்கூறிய வார்த்தைகள் கர்த்தர் யோசுவாவிடம்; இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல சொல்கிறார்.  

பிரியமானவர்களே அவர்கள் நடுவில் ஒருவன் சாபத்தீடானதில் எடுத்து பண்டம் பாடிகளுக்குள்ளே வைத்ததினால் இஸ்ரவேல் சபை சத்துருக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியவில்லை.  நாமும் அப்படியிருப்போமானால் ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ந்து போவதற்கு காரணமாகும்.  இதனை குறித்த விளக்கம் நாளை கர்த்தருக்கு சித்தமானால் கிருபையால் தியானிப்போம்.  

ஆதலால் கர்த்தர் சொன்னது போல் சாபத்தீடானதில் ஒன்றும் நம்முடைய வாழ்வில் வைக்காதபடி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.