தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 109: 30

கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சாபதீடானதை ஏற்றுக் கொள்வோமானால் நம் ஆத்துமா சாகும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சாபத்தீடானதை நம்மளில் இருந்து அகற்ற வேண்டுமென்றும், அழிவுள்ள வஸ்துக்களாகிய, பொன், வெள்ளி, வெண்கலம் இரும்பு இவைகளால் யாரும் தங்கள் சரிரத்தின் அவயவங்களில் அணிந்து அலங்கரிக்கக்கூடாது என்றும், அதனை மீறி யாராவது அதனை ஒரு பொருட்டாக எண்ணி, தங்கள் சரீரங்களில் அலங்கரித்தால் அவா்கள் சாபத்தீடானவா்கள் என்றும், தியானித்தோம். அவா்கள் ஆத்துமாவை அழிந்து போகிற எரிகோ பட்டண மென்று கா்த்தா்  திருஷ்டாந்தப்படுத்துகிறார் அதனால் கா்த்தா் எரிகோ பட்டணத்தை ஆர்ப்பரிப்பின் சத்தம் மூலம் இடிந்து விழப்பண்ணுகிறார். 

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 6: 18 - 25 

சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.

சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.

யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளேபோய், ராகாபையும் அவள் தகப்பனையும் அவள் தாயையும் சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.

பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.

எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.

சாபத்தீடானதில் ஏதாகிலும் யாராவது எடுத்துக் கொண்டால் அவா்கள் சாபத்தீடானவர்கள் என்றும், அதனால் சாபத்தீடானதை யாரும் எடுத்துக் கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் கா்த்தருக்கு பரிசுத்தமானவைகள். அவைகள் கா்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

பின்னும் எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரிக்கும் போது, எக்காள சத்தங்களை ஜனங்கள் கேட்டு மகா ஆரவாரமாய் முழங்குகையில் அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே கா்த்தா் சொன்னது போல் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தை ஏறிப்பிடித்து, அங்குள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயகருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

பிரியமானவர்களே இதின் கருத்துகள் என்னவென்றால், நாம் தான் அந்த எரிகோ பட்டணம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார் அல்லாமலும் சங்கரிக்கபட்டவர்கள் யாருக்கு கா்த்தா் திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால் வேசித்தனத்தை அழிக்கும்படியாக காட்டுகிறார். என்னவென்றால் கண்ணுக்கு இச்சை மாம்சஇச்சை இவையெல்லாம் வேசித்தனத்தின் கிரியையாயிருக்கிறது. மேலும் யோசுவா அனுப்பின வேவுக்காரரை நோக்கி, அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என்றான்.

அப்போது வேவுக்காரா்கள் வேசியின் வீட்டாரை வெளியே கொண்டு வந்து இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். நாம் ஒரு போதும் வேசித்தன ஆவிக்கு பாளயத்திற்கு உள்ளே இடம் கொடாதபடி புறம்பே துரத்தவேண்டும். அவள் தந்திரமாய் விசுவாச ஜீவிதம் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரவேல் நடுவிலே குடும்பமாக குடியிருக்கிறாள்.

 அதனால் யோசுவா 6: 26, 27 

அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.

இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது ஒரு போதும் ஒரு முறை இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை தரித்தபிறகு, நம்முடைய சரீரம் எரிகோ பட்டணமாக கட்டும்படி எழும்பக்கூடாது,அப்படி நம் சரீரம் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும் அலங்கரித்தால் அந்த  சரீரம் சபிக்கப்பட்டிருக்கும். அல்லாமலும் அதின் அஸ்திபாரம் போடும் போதும் மூத்த குமாரனையும் என்று எழுதப்பட்டிருப்பது நம் சரீரம் தேவனுடைய ஆலயமாக கட்டப்படும்போது 

1கொரி 3: 12

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

மேற்க்கூறிய வசனபிரகாரம் இவைகள் நம் சரீரத்தை ஆளக்கூடாது, அப்படி இருக்குமானால் மூத்த குமாரனையும்,  அதின் வாசல்களை காக்கும் போது இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன். இதன் விளக்கம் புற சரீரம், அக சரீரம் இரண்டும் சாகும். இவையெல்லாவற்றிலும் கா்த்தா் யோசுவாவோடே இருந்தார். ஆதலால் நம் வாழ்வை சாகாதபடி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.