தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1பேதுரு 3: 3,4

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சாபத்தீடானதை நம்மில் இருந்து விலக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு ஒரே ஒரு ஆசாரியர், பூரண கிருபையுள்ளவராக என்றென்றைக்கும் மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார் என்று தியானித்தோம்.  மற்றும் ஆசாரியர்கள் எக்காளம் ஊதும் போது தான் ஜனங்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.  ஜனங்கள் ஆர்ப்பரிக்கும் போது எரிகோ பட்டணம் கர்த்தர் உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று யோசுவா  ஜனங்களிடம் சொல்லும் போது 

அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 6:17-19  

ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.

சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.

சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

இந்த பட்டணமும், இதிலுள்ள யாவும் கர்த்தருக்கு சாபத்தீடாயிருக்கும்.  மற்றும் யோசுவா சொல்வது நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்து வைத்தபடியால் அவளும், அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கக்கடவர்கள்.  

பிரியமானவர்களே, கழிந்த சில நாட்களுக்கு முன்பாக ராகாப் என்ற வேசியை குறித்து ஆவியானவர் சில காரியங்களை நமக்கு வெளிப்படுத்தி தந்தார் . அவள் எப்படி இஸ்ரவேல் சபைகளுக்குள் பங்கு வகிக்கிறாள் என்பதை நாம் சிந்தித்து அவளோடு உள்ள ஐக்கியத்தை விட்டு விட வேண்டும்.  என்னவெனில் இந்த சாப பட்டணமும், அதிலுள்ள யாவும், கர்த்தருக்கு சாபத்தீடாயிருக்கும்.  இவற்றை நமக்காக திருஷ்டாந்தத்தோடு  கர்த்தர் சொல்வது என்னவென்றால் சாபதீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தை சாபத்தீடாக்கி அதைக் கலங்கபண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.  

சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்.  அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.  இவ்விதம் யோசுவா கர்த்தரின் வார்த்தைகளை சொல்வது திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார்.  என்னவென்றால்  பாத்திரங்கள் என்று எழுதப்பட்டிருப்பது நம்மைக்குறித்து.  நம்மில் கிறிஸ்துவாகிய தேவனுடைய  வார்த்தையானது கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வந்து வாசம் பண்ணுகிறார் யோவான் 1:14 ல் எழுதப்பட்டிருக்கிறது.  

மேலும் சங்கீதம் 85:9-13 

நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

மேற்கூறப்படடப்பிரகாரம் கர்த்தரின் நன்மை நம்மில் வாசமாயிருக்கும்.  ஆனால் ஜனங்கள் இதன் அர்த்தத்தை ஆவிக்குரிய பாதையில்  அறியாமல் அழிந்து போகிற பொருட்களாகிய பொன், வெள்ளி வெண்கலம், இரும்பு என்று நினைத்து, அதனை பரிசுத்தமாக தவறாக எண்ணிக்கொள்வார்கள்.  அவ்விதம் எண்ணிக்கொண்டு தாங்கள் அவ்விதம் அழிந்து போகிற பொருட்களால் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.  அவ்விதம் அலங்கரிப்பது தான் இஸ்ரவேலின் நடுவே ராகாப் என்ற  வேசியும், அவள் குடும்பவும் அழியாமல் யோசுவா மூலம் பாதுகாக்கப்பட்டார்கள்.  அவள் குடும்பம் எப்படி நுணுக்கமாக இஸ்ரவேலர் நடுவில் இடம் பெற்றாள் என்பதை அறிந்துக்கொண்டு, நாம் யாரும் அவள் வீட்டின் வாசலை கிட்ட சேரக்கூடாது என்பதை நாம் யாவரும் உணர்ந்துக்கொண்டு மிகவும் எச்சரிப்போடு இருக்கவேண்டும்.  

ஏனென்றால் சகல பொன்னும், வெள்ளியும் வெண்கலமும், இரும்பும்  ஆகிய அழிந்து போகிற பொருட்கள் அழியாத நித்திய ராஜ்யத்தை சுதந்தரிக்காது.  ஆதலால் அது சபிக்கப்பட்டது.  அதனை நம்புகிறவர்களும், அதனை விசுவாசிக்கிறவர்களும் சாபத்திற்குரியவர்கள்.  ஆதலால் கர்த்தர் சொல்வது சபிக்கப்பட்ட பொருள் ஒன்றும் நம்மிடத்திலோ, நம்முடைய வீடுகளிலோ இருக்கக்கூடாது.  அது இஸ்ரவேலாகிய நம்முடைய ஆத்துமா அதனை வாஞ்சித்தால், அது இஸ்ரவேலை கலங்க பண்ணும்.  இன்னும் அநேகர் இதன் சத்தியம் தெரியாமல் பாதாளத்தில் கிடத்தப்பட்டு வேதனை அனுபவிக்கிறார்கள். 

ஆதலால் பிரியமானவர்களே இவ்வித காரியங்களை நம்முடைய வீடுகளிலோ, அல்லது நம்முடைய சரீரத்தின் அவயவங்களில் இருந்தாலும், நாம் சாபத்துக்குரியவர்கள்.  அதற்கு தான் எரிகோ கோட்டையை திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் கானானுக்கு விசுவாச யாத்திரையில் கிறிஸ்துவை மட்டும் தரித்திருக்க வேண்டுமேயல்லாமல், இவைகள் ஒன்றும் நம் சரீரத்தின் அவயவங்களில் தரிக்கலாகாது.  

ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே இப்படிபட்டவைகளெல்லாம் விட்டு விட்டு தங்களை வெறுமையாக்கிக்கொண்டால் கானானாகிய நித்திய ஜீவனை சுதந்தரிக்கலாம்.  இவ்விதம் தேவ வசனத்திற்கு கீழ்படிந்து ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.