தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 3: 13

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பாவசாப கட்டுகளிலிருந்து விடுதலையாகிற விதம்-விளக்கம் திருஷ்டாந்தத்தோடு.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய பாரம்பரிய நடத்தைகள் எல்லாவறையும் களைந்து விட வெண்டும் என்றும் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 6:1- 5  

எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.

ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.

மேற்க்கூறிய வசனங்ளை தியானிக்கும் போது, எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, உள்ளே வரவுமில்லை.  கர்த்தர் யோசுவாவிடம், இதோ எரிகோவையும், அதின் ராஜாவையும், யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.  யுத்த புருஷர்  அனைவரும்  பட்டணத்தை சூழ்ந்து ஒருதரம்  சுற்றி வரவேண்டும் என்றும், இவ்விதம் ஆறு நாள் செய்ய வேண்டும். 

ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களை பிடித்துக்கொண்டு போக வேண்டும்.  ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரவேண்டும்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.  அவர்கள் அந்த கொம்புகளினால் நெடுந்தொனி இடும் போதும், நீங்கள் எக்காள சத்தத்தை கேட்கும் போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க கடவர்கள்.  அப்போது அலங்கம் இடிந்து விழும்.  அப்போது ஜனங்கள் தங்கள் தங்கள் நேராக ஏறக்கடவர்கள் என்றார். 

இவற்றை எதற்காக திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால். நாம் பாவமன்னிப்புக்கென்று ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று கரையேறும் போது, ஆவியானவர் நம்மேல் இறங்கி, நம்மை சோதித்து, நம்மை நியாயந்தீர்க்கிறார்.  அதனால் தான் தேவ வசனம் கோடரியானது மரங்களின் வேர் அருகே  வைக்கப்பட்டிருக்கிறது.  நல்ல கனிக்கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று மத்தேயு 3:10-ல் எழுதப்பட்டிருக்கிறது.  

அல்லாமலும் திருஷ்டாந்தத்தில்  யோசுவா எரிகோவின் சமனான வெளியிலே பஸ்கா ஆசரித்ததையும், அவன் கண்களை ஏறெடுத்து பார்க்கும் போது கர்த்தருடைய சேனையின் அதிபதி உருவினபட்டயமாக நிற்கிறதையும் பார்க்கிறோம். இவை எதற்காகவென்றால் நாம் பரிசுத்த பாதையில் நடக்காவிட்டால் பட்டயம் நமக்கு எதிராக வரும்.  அது மட்டுமல்லாமல் நம்முடைய விசுவாச யாத்திரையில் நம்மை முன்னோட்டு போகவிடாமல் சாபகட்டுகள் பெரிய அலங்கமாக இருக்கிது.  இதனை உடைப்பது என்னவென்றால், நாம் கர்த்தரை துதிப்பதும், உன்னதமானவரை கீர்த்தனம் பண்ணுவதும், தேவ வசனமாகிய எக்காளம் ஊதுகிறதும், அதனை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு கர்த்தரை உரத்த சத்தத்தோடு ஆர்ப்பரித்தால் நம்முடைய ஆத்துமா சாபத்தின் கட்டிலிருந்து விடுதலையாகிறது என்பது புரிகிறது.  

ஆதலால் அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து வைத்து அவ்விதம் கர்த்தருடைய வார்த்தைபிரகாரம் செய்ய சொல்கிறான்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நாம் சாபத்திலிருந்து விடுதலையாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.இதன் விளக்கங்கள் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் கிருபையால் தியானிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.