தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6: 55

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய பாரம்பரிய நடத்தைகள் எல்லாம் களைந்துவிட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பஸ்காவை ஆசரிக்கும்யடியாக சாயங்காலத்தில் அதனை நமக்கு விளம்பி மாதிரி காட்டுகிறதையும்,  நாம் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற பிறகு தான் பஸ்கா ஆசரிக்க வேண்டும் என்பதற்காக அவர் தம்முடைய மாம்சத்திற்கு பதிலாக அப்பத்தையும்,  அவருடைய இரத்தத்திற்கு பதிலாக திராட்சை ரசத்தையும் ஆசீர்வதித்து நமக்கு மாதிரி காட்டினார் என்று தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் பஸ்கா புசித்த மறுநாளிலே அவர்கள் புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்த பின்பு மறு நாளிலே  மன்னா பெய்யாமல் ஓய்ந்தது. அது முதல் இஸ்ரவேல் சபையார் மன்னா இல்லாமற் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில் தானேபுசித்தார்கள்.

அதன் பின்பு யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து  தன் கண்களை ஏறெடுத்து பார்க்கும் போது, இதோ ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்:  உருவின  பட்டயம்  அவர் கையில் இருந்தது. அப்போது யோசுவா அவரிடம் நீர் எங்களை சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களை சேர்ந்தவரோ என்று கேட்கும் போது, கர்த்தர் சொன்னது,  நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்.  அப்போது யோசுவா முகங்குப்புற விழுந்து பணிந்துக்கொண்டு தமது அடியேனுக்கு சொல்லுகிறது என்னவென்று கேட்டதற்கு கர்த்தர் சொன்னது என்னவென்றால் 

யோசுவா 5:15   

அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது நாம் ஞானஸ்நானத்திற்கு பின் அனுதினம் அவருடைய சத்திய வசனத்தின் பிரகாரம் நடக்கா விட்டால் நமக்கு நியாயதீர்ப்பு உண்டு என்பதனை விளக்கி காட்டுகிறார்.  என்னவென்றால் உன் கால்களில் இருக்கிற பாதரட்சையை கழற்றி போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்று சொல்கிறாரென்றால் நாம் நடந்து வந்த பழைய பாரம்பரிய நடத்தைகள் எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்துவின் உபதேசத்தில் அனுதினம் வளர வேண்டும்.  அல்லாமலும் நம்மை முழுமையாக தரைமட்டும் தாழ்ந்து கர்த்தரை பணிந்துக் கொள்ள வேண்டும். 

இவ்விதமாக நம்மை கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.