தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 26:19,20

இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகினால் அந்தி சந்தியில் தான் பஸ்கா புசிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை, எப்படி கர்த்தர் மணவாட்டி சபையாக்குகிறார் என்பதனை, யோர்தானை இஸ்ரவேல் புத்திரர் கடக்கும் போது. அங்கிருந்து பன்னிரண்டு கற்கள் எடுத்து, கில்காலிலே நாட்டப்பட்டதை நமக்கு திருஷ்டாந்தபடுத்தி புதிய எருசலேமாக கிறிஸ்து உள்ளத்தில் மகிமை படுகிறார் என்பது குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 5:1-15  

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார்.

அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்.

யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்படாதிருந்தார்கள்.

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள்.

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.

பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.

அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.

அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.

அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் யோசுவாவைக்கொண்டு இஸ்ரவேல் சபை யோர்தானை வற்றபண்ணி கரைசேர்ந்ததை அறிந்த மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், மற்றும் சமுத்திரகரையில் குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும், அதனை கேட்டது முதற்க்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக சோர்ந்து போனார்கள்.  

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி நீ கருக்கான ஒரு கத்தியை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை இரண்டாம் விசை விருத்தசேதனம் பண்ணு என்றார்.  அவன் அவர்களை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.  யோசுவா இவ்விதம் விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால் எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் வழியிலே வனாந்தரத்திலே மாண்டு போனார்கள்.  ஆனால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணபட்டிருந்தார்கள்.  ஆனால் வழியில் வனாந்தரத்தில் பிறந்தவர்கள் விருத்தசேதனம் பண்ணபடாதிருந்தார்கள்.  

பிரியமானவர்களே கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற் இருந்தவர்கள் எல்லாரும் அழியுமட்டும் அவர்கள் நாற்பது வருஷம் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்.  அவ்விதம் நடந்து திரிந்தார்கள் என்றால், அவர்கள் கீழ்படியாமல் இருந்ததினால் அவர்களுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் கொடுக்கவில்லை என்பது தெரியவருகிறது.  அதனைக் குறித்து 

எபிரெயர் 3:17-19 

மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.

பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?

ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் இதன் கருத்துகளை தெளிவுப்படுத்துகிறது.  ஏனென்றால் கிறிஸ்து சொல்கிறார் 

மத்தேயு 11:28  

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

இதன் கருத்துகளை நாம் தியானிக்கும் போது இளைப்பாறுதல் தரும்படியாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, பிதாவாகிய தேவன் நம்க்கு அனுப்பி தந்தார் என்பது நிச்சயம்.  ஆதலால் அவர் சத்தத்திற்கு கிழ்படிந்தால் நிச்சயம் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். அவர்கள் கீழ்படியாத காரணத்தால் கர்த்தர் ஆணையிட்டிருந்தபடி  அவர்கள் பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை காணவில்லை.  ஆனால் அவர்களுக்கு பதிலாக அவர்கள் பிள்ளைகள் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.  பின்பு அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே பாளயத்திலே தரித்திருந்தார்கள்.  அன்று கர்த்தர் யோசுவாவை நோக்கி இன்று எகிப்தின் நிந்தையை உங்கள் மேல் இராதபடி நீக்கிப்போட்டேன் என்றார்.  அதென்னவென்றால் எல்லாரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.  அந்த இடம் இந்நாள் வரைக்கும் கில்கால் எனப்படுகிறது.  

இந்த விருத்தசேதனம்  மாம்சம் மாற்றப்படுகிறதற்கு திருஷ்டாந்தம்.  இதனைக்குறித்து 

பிலிப்பியர் 3:3 

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில்  நம்முடைய இருதயம் விருத்தசேதனம் பெற்று, மாம்ச இச்சைகள் யாவையும் நம்மை விட்டு அகற்றி, ஆவியில் தேவனுக்கு ஆராதனை செய்யும் போது, நம்முடைய நிந்தைகள் நீக்கப்படுகிறது.  அந்த ஸ்தலம் கில்கால் எனப்படுகிறது.  அன்றைக்குதான் பஸ்காவை ஆசரிக்கும் நாளாக இருக்கிறது.  ஏனென்றால்  நாம் நம்முடைய பாவங்களுக்காக  கிறிஸ்து வோடு கூட மரித்து, அவரோடு ஆவியில் உயிர்தெழுந்து (ஜலத்தினால் ஞானஸ்நானம்) பின்பு கிறிஸ்துவின் ஆவியினால் தேவனுக்கு ஆராதனை செய்தால் கர்த்தர் நம் எல்லாரிலும் இருந்த நிந்தையை மாற்றுகிறார்.  

பின்பு அன்று அந்தி நேரத்திலே கிறிஸ்துவின் மாம்சமும், இரத்தமும் கர்த்தர் நமக்கு கற்றுதந்த பிரகாரம் புசிக்கவேண்டும்.  அவைதான்  பஸ்கா ஆசரிப்பு.  பஸ்கா ஆசரிப்பு என்பது பஸ்கா ஆட்டுகுட்டி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  அவர் நமக்காக அடிக்கப்பட்டு, இரத்தம் சிந்த பட்டு, அவருடைய மாம்சம்  கிழிக்கப்பட்டு இவ்விதமாக நமக்காக பாடுபட்டு பலியானார்.  அந்த நாள் பஸ்கா ஆட்டுகுட்டி அடிக்கப்படுகிறார். 

இவ்விதம் அதனை நாம் விசுவாசித்து, நம்முடைய சகல பாவ மோகங்களுக்காக நம்முடைய ஆத்துமா அவரோடு சிலுவையில் அறையப்பட்டு, நாம் சகல பாவங்களுக்காக மரித்து பின் அவருடைய ஆவியில் எழும்ப வேண்டும், இவ்விதம் நம்மை கிறிஸ்துவுக்கு முன்பாக காணிக்கையாக ஒப்படைக்க வேண்டும்.  அவ்விதம் பஸ்கா ஆசரிக்க கர்த்தர் நமக்கு இஸ்ரவேலரை வைத்து திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்.  அதன் பின்பு அவர்கள் தேசத்தினுடைய தானியத்தினாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும்,சுட்ட கதிர்களையும்,புசித்தார்கள்.  

இதனுடைய விளக்கம் கர்த்தருக்கு சித்தமானால் கிருபையால் அடுத்த நாளில் தியானிப்போம்.  இவ்விதம் நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.