தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 22: 14

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்தும அறுவடையின் திருஷ்டாந்தம் தான் யோர்தானை கடப்பது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய முழு உள்ளமும் கர்த்தருக்கு மட்டும் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுப்பற்றியும், நம்முடைய உள்ளத்தில் வேசிதன ஆவிக்கு இடம் கொடுக்காதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தியானித்தோம்.  

மேலும் யோசுவா அனுப்பிய வேவுக்காரர்கள் அவனிடம் போய் கர்த்தர் தேசத்தை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்து விட்டார் என்றும், தேசத்து குடிகள் எல்லாம் சோர்ந்து போனார்கள் என்றும் அவனிடம் சொன்னப் பிறகு  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 3:1-17  

அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக்கடந்து போகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள்.

மூன்று நாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,

ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.

உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.

பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.

கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.

யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.

பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:

இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.

இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.

சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்.

சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, கழிந்த சில நாட்களுக்கு முன்பாக தியானித்தோம், நல்ல தேசமாகிய  பரம தேசமாகிய கிறிஸ்துவை சுதந்தரிப்பதற்கு திருஷ்டாந்தமாக  இஸ்ரவேல் புத்திரரை பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை உனக்கு தருவேன் என்று வாக்குறுதி தந்ததின் பேரில், யோர்தானை கடந்து தான் அந்த தேசத்தை சுதந்தரிக்க முடியும்.  ஆதலால் கர்த்தர் யோசுவாவைக்கொண்டு யோர்தானை கடக்கும் முன்பாக அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும், சித்தீமிலிருந்து புறப்பட்டு  யோர்தான் மட்டும் வந்து அதை கடந்து போகு முன்னே மூன்று நாள் அங்கே இராதங்கினார்கள்.   

அதன் பின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய் , ஜனங்களை நோக்கி நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைபெட்டியையும், அதை சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்க்ள் உங்கள் இடத்தை விட்டு, பிரயாணப்பட்டு அதற்கு பின் சென்றார்கள்.  அப்போது கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கும் உடன்படிக்கை பெட்டிக்கும் இடையில் இரண்டாயிரம் முழத் தூரம் உண்டாயிருக்க வேண்டும்.  நீங்கள் நடக்க வேண்டிய வழியை அறியும் படிக்கு அதற்கு சமீபத்தில் வரலாகாது என்றும், இதற்கு முன்னே நீங்கள் இந்த வழியை நடந்து போகவில்லை  என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.  

பின்பு யோசுவா ஜனங்களை நோக்கி உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்;  நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார் என்றான்.    பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான், அப்படியே அதனை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போனார்கள்.  பின்பு கர்த்தர் யோசுவாவிடம், நான் மோசேயோடே இருந்தது போலவே உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர் அறியும்படியாக இன்று, அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்றார்.  

பின்பு யோசுவா உடன்படிக்கைப் பெட்டி சுமக்கிற ஆசாரியரைப்பார்த்து, நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும் போது யோர்தானின் ஓரத்தில் நில்கவும், அங்கு நின்று தேவனுடைய வார்த்தையை கேட்கவும், அல்லாமலும் ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார் என்பதையும், கானானியரையும், ஏத்தியரையும், எமோரியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எபூசியரையும் துரத்தி விடுவார் என்பதையுத் அறிந்து கொள்வதற்கு அடையாளமாக, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.  

அதனால் இப்பொழுதே இஸ்ரவேல் கோத்திரங்களில் பன்னிரண்டு பேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டியை  சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் தண்ணீரில் பட்ட மாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணிர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.  

ஜனங்கள் யோர்தானை கடக்கும்படியாக வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்.  ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துக்கொண்டு போய் யோர்தான் மட்டும் வந்தார்கள்.  யோர்தான் அறுப்புக்காலம் மட்டும் கரைபுரண்டு போம். அறுவடை காலம் என்று சொல்வது, ஆத்தும ஆதாயம் செய்ய நாள் நெருங்கும் போது ,  ஆனால் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரில் பட்ட மாத்திரத்தில், மேலேயிருந்து ஓடி வருகிற யோர்தான் தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் என்னும் ஊர் வரைக்கும் ஒரு குவியலாக குவித்தது.  ஆனால் உப்பு கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடி வருகிற தண்ணீர் பிரிந்து ஓடியது.  அப்போது ஜனங்கள் எல்லாரும் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.  மேலும் சகல ஜனங்களும் கடந்து தீருமளவும், ஆசாரியர்கள், யோர்தானின் நடுவில் தண்ணீரில்லாத  தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாய் கடந்நு போனார்கள்.  

பிரியமானவர்களே கர்த்தர் இதனை திருஷ்டாந்தத்துக்காக காட்டுகிறார்.  கிறிஸ்துவாகிய பரம தேசத்தை நாம் சுதந்தரிக்க நமக்கு வருகிற பெரிய சோதனை நேரமும், அந்த சோதனை நேரத்தை ஜெயிக்க நாம் கழிந்த சில நாட்களுக்கு முன் தியானித்த பன்னிரண்டு கோத்திரங்களின் அனுபவம், எல்லாமே கிறிஸ்து தான்  என்பதையும், ஆனால் மூழ்கி ஞானஸ்நானத்திற்காக தேவன் நம்மை அழைத்து கொண்டு வரும் போது, நமக்கு எதிராக நம்மை காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று நாம் எண்ணிக்கொள்கிறவர்களிடத்தில் இருந்து நமக்கு பலமான போராட்டம் வருகிறது என்பதை, யோர்தான் பிரவாகித்து வருகிறதாகவும், 

ஆனால் வசனத்தை ஏந்தி நிற்கிற ஆசாரியர்கள், எல்லாரும் பன்னிரண்டு பேர் என்பது, எல்லா இடத்திலும் கிறிஸ்து தான் ஆசாரியராக காணப்படுகிறார் என்பதும் , அவர்கள் கால் பட்ட உடன் மேலேயிருந்து வந்த தண்ணீர் குவியலாக நின்றது என்பது கர்த்தர் நம் நடுவில் உண்டானால் எத்தனை பெரிய போராட்டமும் நம்மை தொடாது என்பதும், அவர்கள் கால்கள் நின்ற இடம் உலரந்த தரையாக காணப்பட்டதும், அதுபோல் நாமும் அவர் பின் அவருடைய வாரத்தைகளை  கேட்டு கிழ்படிவோமானால் நம்மையும் எவ்வித போராட்டம் தொடாது என்பதற்காக, ஜனங்களை தண்ணீரின் ஓரத்தில் வந்தவுடனே அங்கு நிற்க சொல்லி தேவ வசனம் உபதேசித்து யோர்தானில் இறங்க வைக்கிறார்கள் என்றால்,  நாமும் நம்மையும் அவ்விதம் மாற்றி, பரிசுத்தபடுத்தி  ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது, நம் உள்ளத்தில் குடியிருந்த ஏழு வித ஜாதிகளை கர்த்தர் துரத்துகிறார் நாம் விடுதலையோடு கிறிஸ்துவை சுதந்தரிக்கலாம்.   

இவ்விதம் நம்மை ஒப்புக்கொடுப்போமா.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.