தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மாற்கு 12: 29

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில் வேசித்தன  ஆவிக்கு இடம் கொடாதபடி  கிறிஸ்துவின் ஆவியால் நம்மை காக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் வேசிதன ஆவிக்கு இடம் கொடாதபடி கிறிஸ்துவின் ஆவியால் நம்மை காக்க வேண்டும்.  என்னவென்றால் ராகாப் என்ற வேசி வேவுக்காரர்கள் அவள் வீட்டிற்கு போனபடியால், அங்கு அவர்களை ஒழித்து வைத்து காப்பாற்றுகிறாள் என்று தியானித்தோம். அதென்னவெனில் அவளுக்கு கர்த்தரிடத்தில் விசுவாசம் உள்ளதால் அப்படி செய்தாள் என்பது புரிகிறது.   ஆனால் அவள் வேசி என்பது அவளில் கர்த்தரின் சத்திய வார்த்தைகள் படி கிரியைகள் இல்லாதிருக்கும்.  இதனைக் குறித்து வேதப்புஸ்தகத்தில் அநேக இடங்களில் இடம் பெற்றுள்ளது.  

வேசிதன ஆவி என்பது வலுசர்ப்பத்தின் கிரியைகள் உண்டாயிருக்கும்.  உள்ளத்தை பல வித இச்சைமோகங்குள்ளாக இழுத்துக் கொள்வாள்.  அதில் சிக்கிக்கொள்கிறவர்கள் மரண பாதையில் போய் விடுவார்கள்.  இதனை குறித்து 

நீதிமொழிகள் 7:10-27  

அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.

அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.

வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.

பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,

தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும்,

ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.

அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.

அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானித்து அவளிடத்தில் சிக்கிக்கொள்ளாதபடி நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

யோசுவா 2:14-24  

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.

அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள்.

அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள்.

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.

இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம்.

எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும்.

நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.

அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்று நாள் அங்கே தரித்திருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழியிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள்.

அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;

கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

மேற்கூறிய வசனங்களில்  அந்த வேவுகாரர், அந்த ஸ்திரீ தானும் தன் குடும்பமும் காக்கபட வேண்டும் என்று கேட்டதற்கு மறுபடியாக  அவர்கள் கர்த்தர் எங்களுக்கு   தேசத்தைக்கொடுக்கும் போது, நாங்கள் தயையும், சத்தியமும் பாராட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.  அதன் பின்பு அவள் அவர்களை கயிற்றினாலே ஜன்னல் வழியாய் இறக்கி விட்டாள். அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது.  அலங்கத்திலே குடியிருந்தாள்.  பின்பு அவள், அவர்களிடம் தேடுகிறவர்கள் உங்களை காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பி வருமட்டும் அங்கே மூன்று நாள் ஒழித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள். 

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும் போது, நீ இந்த சிவப்பு நூலை எங்களை இறக்கி விட்ட ஜன்னலில் கட்டி, உன் தகப்பனையும், உன் தாயையும், உன் சகோதரர்களையும்,  உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிற்குள் சேர்த்துக்கொள், இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம்.  மேலும் அவர்கள் செல்வது 

யோசுவா 2:19,20  

எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும்.

நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் அவர்கள் சொன்னதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டாள்.  பின்பு அவர்கள் சொன்னது போல் சிவப்பு  நூலை ஜன்னலில் கட்டி வைத்தாள்.  

பிரியமானவர்களே இவைகளை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், சிவப்பு நூல் கயிறு என்று எழுதப்பட்டிருப்பது, வேசியின் வீடு என்ற  அடையாளத்தைக் காட்டுகிறது.  மற்றும் அவளுடைய வீட்டாரை அந்த சிவப்பு நூல் கயிற்றால் வீட்டுக்குள் ஏற்றுகிறாள் என்பதும் குறிப்படதக்கது.  ஆதலால் அநேகர் சிவப்பு நூல் தங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ பிரயோஜனப்படுத்துகிறார்கள்.  மேலும் பாபிலோன் வேசி சிவப்பு நிறமுள்ள ஒரு மிருகத்தின் மேல் ஏறி உட்கார்ந்து இருக்கிறாள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் 

வெளி 17:1-5  

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.

அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

மேலும் கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிப்பது சிவப்பு நிறம் பாபிலோன் வேசியின் கிரியை என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.  ஆனால்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெண்மை வஸ்திரம் தரித்தவராய் காணப்படுகிறார்.  மேலும் தாமாருக்கு, அவள் மாமனாகிய யூதாவால் அவள் கர்ப்பத்தில் இரட்டை பிள்ளைகள் இருந்தன.  அவளுடைய பிரசவ காலம் நெருங்கிய போது 

ஆதியாகமம் 38:28-30 

அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

மேற்கூறிய வசனத்தில் முதலில் கையை வெளியே நீட்டின பிள்ளையின் கையில் மருத்துவச்சி சிவப்பு நூல் கட்டினாள், பின்பு கையை    உள்ளே எடுத்து அவன் இரண்டாவதாக வெளிப்பட்டான்,  அவன் பெயர் சேரா.  இதிலிருந்து நமக்கு தெரிய வருவது தவறான அனுபவத்தில் வருவது சிவப்பு நூல் அடையாளம் காட்டுகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் எச்சரிப்போடு காணப்பட வேண்டும். ஆனால் எரிகோவின் ஆட்களால் யோசுவா அனுப்பிய வேவுக்காரர்களை கண்டுபிடிக்கவில்லை.  பின்பு அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றை கடந்து, யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்கு சம்பவித்த யாவையும் அவனுக்கு தெரிவித்து, கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.  தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாக சோர்ந்து போனார்கள் என்று யோசுவாவோடே சொன்னார்கள். 

பிரியமானவர்களே இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம்முடைய முழு உள்ளத்தின் செயல்களெல்லாம் கர்த்தருடையதாய் இருக்க வேண்டும்.  இனி ஒரு பட்டணத்தின் ராஜாவாகிய எந்த இராட்சதர்களுக்கும் உள்ளத்தில் இடம் கொடுக்காதபடி மற்ற எல்லா துர்கிரியைகளையும் கர்த்தருடைய வசனமாகிய அக்கினியால் சுட்டெரித்து, முழுமையும் கிறிஸ்துவுக்கு சொந்தமாக்க வேண்டும்.   இவ்விதமாக நாம் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.