தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 51: 9

எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில் வேசித்தன  ஆவிக்கு இடம் கொடாதபடி  கிறிஸ்துவின் ஆவியால் நம்மை காக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய இளைப்பாறுதல் பரம தேசமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை குறித்து சில திருஷ்டாங்களோடு தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 2:1- 8 

நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.

அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.

அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.

வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள்.

அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.

அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.

அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்,

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது நூனின் குமாரனாகிய யோசுவா அந்த தேசத்தையும், எரிகோவையும் இரகசியமாய் வேவு பார்க்கும்படி சித்தீமிலிருந்து இரண்டு வேவுக்காரரை அங்கு அனுப்பினான்.  அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.  அவர்கள் அங்கே தங்கினதை அறிந்த எரிகோவின் ராஜா கேள்விப்பட்டு ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி, உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா, அவர்கள் தேசத்தை வேவுப்பார்க்கும் படி வந்தார்கள் என்று சொல்ல சொன்னான். 

அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரை ஒளித்து வைத்து: என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்;  ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ என்று எனக்கு தெரியாது.  ஆனால் வாசல் அடைக்கும் நேரத்தில் இருட்டு வேளையிலே அந்த மனுஷர்கள் போய் விட்டார்கள்.  அவர்கள் எங்கு போனார்களோ எனக்கு  தெரியாது.  அவர்களை சீக்கிரமாய் போய் தேடுங்கள்;  நீங்கள் அவர்களை பிடித்து கொள்ளலாம் என்றாள்.  ஆனால் அவள் அவர்கள் இரண்டு பேரையும் வீட்டின் மேல் ஏறப்பண்ணி அங்கு பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள் என்று பார்க்கிறோம்.  ஆனால் வேவு பார்க்க சென்ற மனுஷரோவென்றால் யோர்தானுக்கு போகிற துறைகள் மட்டும் அவர்களை பார்க்க போனார்கள்.  அவர்களை தேட போனவுடனே வாசல் அடைக்கப்பட்டு விட்டது.  

இதனை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நாம் சுதந்தரிக்கும் தேசத்தின் கிரியைகள், எப்படி பட்டதாக இருக்கிறது என்பதும், அது நம்முடைய உள்ளான மனுஷனின் சாயல் தேவ சாயலாகதானா இருக்கிறது என்பதும், அதில் சாபம் உண்டா என்பதையும், கர்த்தர் நம்மை நன்றாக விசாரிப்பார்.  

ஆனால் அந்த பட்டணத்தில் போகும் போது வேசியின் வீடு இருக்கிறது.  வேசியின் வீடு என்றால் விக்கிரக ஆராதனை.  அது நம்மில் இருக்குமானால் கர்த்தர் அந்த வீட்டுக்குள் வேசியின் மூலம் வேவுகாரரை அனுப்பி வேவு பார்க்கிறார்.  ஆனால் அந்த வேசி அவர்களை வீட்டுக்குள் மறைத்து எரிகோ ராஜாவுக்கு தெரியாதபடி வைக்கிறாள்.  இதன் விளக்கம் என்னவெனில் நம் உள்ளம் விக்கிரகாராதனையும், உலக உல்லாசங்களில் வாழ்ந்தும், தேவனுடைய வசனங்களை கேட்டும் அந்த வீட்டுக்குள்ளும் பரப்பப்பட்ட சணல் தட்டை இருக்கிறது.  அது துர் உபதேசத்தைக்காட்டுகிறது.   இவ்விதமாக அநேகர் தேவனை தேடியும் அந்த ஸ்திரீயைப் போல் காணப்படுகிறார்கள்.   ஆனால்  தேட வந்தவர்களை அவள் தேடுவதற்காக அனுப்பி விட்ட பிறகு, அவள் அவர்கள் படுத்துக்கொள்ளும் முன்பாக சொல்வது என்னவென்றால் 

யோசுவா 2:9 

கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.

மேற்க்கூறப்படுகிறது என்னவென்றால் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களை பற்றி எங்களுக்கு பயமும் திகிலும் பிடித்திருக்கிறதென்றும், உங்களை குறித்து தேசத்து குடிகள் எல்லாரும் சோர்ந்து போனார்களென்றும் அறிவேன்  பின்பு அவள் அவர்களிடம் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டு வரும் போது அந்நாள் வரையிலும் கர்த்தர் செய்ததை அவள் சொல்லவும், அவற்றை எல்லாம் கேள்விப்பட்டு எங்கள் இருதயம் கரைந்து போயிற்று என்றும், எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று: இப்போதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியால், நீங்களும் என் தகப்பன் குடுப்பத்துக்கு தயவு செய்ய வேண்டும் என்று கர்த்தர் பேரில் ஆணையிட்டுக் கேட்டுக்கொண்ட விதமாவது 

யோசுவா 2:13  

நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.

மேறக்கூறியபிரகாரம் அவள் கேட்க அவர்கள் 

யோசுவா 2:14 

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.

இந்த வார்த்தைகளை மறுமொழி கொடுத்தார்கள்.  அது தான் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேல் புத்திரரில் அநேகர் சத்தியத்திற்கு மாறாக நடத்து வேசியின் ஆவிக்கு அடிமையாகி விடுகிறார்கள்.  அவ்விதம் நம்மிடமும் நுணுக்கத்தோடு வருவாள்.  ஆதலால் அவள் வழியிலே சாய வேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஏனென்றால் தேவனுடைய ஆவியினால் அவள் கரைந்து போவாள்.  அவ்வித மாம்ச கிரியைகளை கர்த்தரின் ஆவியினால் நாம் அழித்து, நாம் எப்போதும் தேவனுடைய வீட்டுக்குள் வசிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். இதன் விளக்கங்கள் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் தியானிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.