தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 4:11

ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு இளைப்பாறுகிற இடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கானானாகிய பரம தேசத்தை சுதந்தரிக்க வேண்டுமானால் யோர்தானை கடக்க வேண்டும், என்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தினதை பார்க்கிறோம்.  என்னவெனில் பரமதேசம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடத்தில் நாம் செல்வோமானால் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்  

யோசுவா  1:14-18 

உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய்,

கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் நம்முடைய ஆத்துமா இளைப்பாறுதல் அடையாதபடி இருக்க காரணம், நம் உள்ளத்தில் பாவம் பெருகி, மாம்சத்தின் கிரியைகளும், உலக சிற்றின்பத்தின் மயக்கத்தினால் இருக்கும் போது, நமக்கு இளைப்பாறுதல் இருக்காது என்பதும், அதற்கு காரணம் உள்ளத்திலுள்ள புறஜாதிகளின் கிரியைகளினால் நம்மை கலங்கப்பண்ணும்.  அதனால் நம்முடைய கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து, அதனை ஜெயிக்கிறவராக நம் நடுவில் யுத்தம் செய்து, புறஜாதிகளின் கிரியைகளை அழித்து, நம்மை ஜாதிகளினின்று விடுதலை செய்து இளைப்பாறப்பண்ணுவார்.  

இதனைக்குறித்து வெளி 19:11-21  

பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் எல்லாம் நம்மை புற ஜாதிகளினின்றும் கர்த்தர் விடுதலை பண்ணி, அவரே எல்லாவற்றையும் ஜெயிக்கிறவராக வெளிப்படுவார். இவை யோர்தானை கடப்பதற்குள்ள திருஷ்டாந்தம்.  அவ்விதம் கர்த்தராகிய கிறிஸ்து செய்வது மாத்திரமல்ல, நம்மைப்போன்ற சகோதரர்களும் அவ்விதமான இளைப்பாறுதலை அடையும் படியாக, நாம் சுதந்தரிக்கும் தேசத்தை அவர்களும் சுதந்தரிக்கும்படி அவர்களுக்கு உதவி செய்யக்கடவீர்கள் என்று சொல்கிறார்.  

என்னவென்றால் நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பாகிய கிறிஸ்துவின் சுதந்தரத்தை நம்முடைய சகோதரர்களும் பெற்றுக்கொள்ளும்படியாக, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களுக்கும் நாம் சொல்லி, அவர்களும் அதனை சுதந்தரிக்கிறவர்களாக செய்ய வேண்டும்.   அவ்விதம் செய்து நமக்கு கர்த்தர் சுதந்தரிக்கும்படி சொன்னதை நாம் சுதந்தரிக்க வேண்டும்.  இவ்விதமான காரியங்களை செய்வதே கர்த்தருக்கு சித்தமாயிருக்கிறது.   இப்படியாக அவர்களோடு  யோசுவா சொன்னதற்கு அவர்கள் நீர் கட்டளையிடுகிறபடியெல்லாம் செய்வோம் என்றார்கள்.  அல்லாமலும் நாங்கள் மோசேக்கு செவிக்கொடுத்தது போல  உமக்கும் செவிக்கொடுப்போம்.  மற்றும் கர்த்தர் மோசேயோடே இருந்தது போல உம்மோடும் இருப்பாராக என்று சொல்லுகிறார்கள்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தரிடம் எவ்விதத்திலும் முரட்டாட்டம் பண்ணாமல், அவர் கட்டளையிட்ட வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்து, பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி கர்த்தரிடத்தில் நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.  அவருடைய வார்த்தைக்கு முரட்டாட்ம் பண்ணுகிறவனுடைய ஆத்துமா கொலைசெய்யப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

ஆதலால் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்படிவோம் என்று ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.