தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 29: 18

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்குள்ளாக கிறிஸ்து தீர்க்கதரிசியானவராக வெளிப்படுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் இரட்சிப்புக்கேதுவாக மேடுகளை மிதிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஒப்பானவர் யாரும் இவ்வுலகத்தில் இல்லை என்பதும்,  அவரே நமக்கு சகாயஞ் செய்யும் கேடகமும், மகிமை பொருந்திய பட்டயமும்.  அதனால் நம்முடைய சத்துருக்களோடு அவர் யுத்தம் பண்ணி ஜெயிப்பார் என்பதும்,  அதனால் சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்குவார்கள்.  அவர்கள் உயரந்து நின்ற இடங்களை எல்லாம் கிறிஸ்துவினால் மிதிப்போம் என்றெல்லாம் மோசே இவ்விதமாக இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்தான். 

அதற்கு அடுத்தபடியாக  நாம் தியானிப்பது என்னவென்றால்

உபாகமம் 34:1-12 

பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.

அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, மோசே, கர்த்தரால் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த பிறகு மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்.  அப்பொழுது கர்த்தர் அவனுக்கு தாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி சமுத்திரமுள்ள தேசம் யூத தேசம் அனைத்தையும், தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்க்கொண்டு எரிகோவின் பள்ளதாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். 

பின்பு கர்த்தர் மோசேயிடம் உங்கள் சந்ததிக்கு கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அதனிடத்திற்கு கடந்து போவதில்லை என்றார்.  அதென்னவென்றால் ஏற்கனவே மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியத்தில் கர்த்தர் மோசேயிடம் இந்த காரியத்தை கூறியிருந்தார். எப்படியென்றால் நீ இஸ்ரவேல் புத்திரரை நடத்திக்கொண்டு போகிற தேசத்திற்குள் நீ பிரவேசிக்கமாட்டாய்.  ஆனால் அதனை பார்ப்பாய் என்றார்.  அப்படியே அங்கு பார்க்க வைக்கிறார். 

இதனை எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் தேவனுடைய சபையை நடத்தி வருகிறவர்கள் கர்த்தரால் போதித்து நடத்தி வந்தாலும், அவர்களில் தப்பிதங்கள் இருந்தால், என்னவென்றால் பரிசுத்தபடுத்துபடி தங்களை ஒப்புக்கொடாமல் இருப்பார்களானால், கர்த்தர் யாரிடமும் முகதாட்சணியம் இல்லாமலும், பட்சபாதம் இல்லாமலும் தீர்க்கப்படுவார்கள் என்பதனை விளக்கி திருஷ்டாந்தப்படுத்துகிறார். 

அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். பின்பு அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளதாக்கிலே அடக்கம்பண்ணினார்.  இந்நாள்வரைக்கும் ஒருவரும் அவன் பிரேத குழியை அறியவில்லை.  மோசே மரிக்கும் போது நூற்றிருபது வயதாயிருந்தான்.  அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.  அங்கு இஸ்ரவேல் புத்திரர்மோவாபின் சமனான வெளிகளில் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள். 

மோசே கர்த்தரின் வார்த்தையின் படி நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்.  இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்கு கீழ்படிந்து, கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்தார்கள்.   ஆனால் எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய ஊழியகாரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கட்டளை கொடுத்து அவனை அனுப்பி செய்வித்த எல்லா அற்புதங்களையும், அடையாளங்களையும், அல்லாமலும் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், அவருடைய செய்கைகளையும் பார்த்தால் கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயை போல, ஒரு தீர்க்கதரிசியும் எழும்பினதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் மனுஷனில் யாரும் எழும்பினதில்லை. 

மேலும் உபாகமம் 18:15-18  

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது,  மோசே சொல்கிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம் நடுவில் தீர்க்கதரிசியாக எழும்ப போகிறார் என்பதனை வெளிப்படுத்தி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்கு கற்ப்பிப்பதை எல்லாம் அவர்களுக்கு சொல்லுவார் என்று மோசேயுடனே கர்த்தர் சொன்னதை நமக்கு சொல்கிறான்.

இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம் நடுவில் மோசேக்கு அடுத்ததாக உண்மையான தீர்த்ததரிசியாக வெளிப்படுகிறார்.  இவ்விதமான ஆசீர்வாதங்களுக்காக நாம் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.