தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 2: 4

அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இரட்சிப்புக்கேதுவாக மேடுகளை மிதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய அலங்காரம் கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பு என்பதனைக்குறித்து தியானித்தோம். 

அடுத்ததாக தியானிப்பது ஒன்பதாவது கோத்திரத்தை குறித்து,   இந்த இரட்சிப்பை குறித்து காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்தரிக்கபட்டவர்.  அவன் சிங்கத்தை போல தங்கியிருந்து, புயத்தையும், உச்சந்தலையையுத் பீறிப்போடுவான்.  அவன் தனக்காக முதல் இடத்தை பார்த்துக் கொண்டான்.  அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது.  ஆனாலும் அவன் தன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற  இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும், நியாயத்தையும் நடப்பிப்பான் என்றான்.  

இவற்றின் பொருள் என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் முதற்பேறுமானவர்.  எல்லாரிலும் முதல்வராயிருக்கிறவர். உள்ளத்தில் இருக்கிற எல்லா உயர்ந்த உலக நினைவுகளையும் பீறி அழிக்கிறார்.  மேலும் நமக்குள் நீதியையும், நியாயத்தையும் நடப்பிக்கிறவர். அல்லாமலும்  அவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், இதற்காக நம்மிடத்தில் அதிக விசாலதைப்படுத்துகிறார்.   இதனைக்குறித்து 

கொலோசெயர் 1:17-20

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

மற்றும் தாணைக்குறித்து, தாண் ஒரு பால சிங்கம்.  அவன் பாசனிலிருந்து பாய்வான் என்றும், நப்தலி கோத்திரத்தைக்குறித்து, கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்து இருப்பான் என்றும், மேற்றிசையையும், தென் திசையையும் சுதந்தரித்துக் கொள்வான் என்றார்.  ஆசேரைக்குறித்து, புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்கு பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.  இரும்பும், வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்.  உன் நாட்களுக்கு தக்கதாய் உன் பெலனும் இருக்கும். 

இவ்விதமாக இஸ்ரவேல் புத்திரரை மோசே ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது தேவனால் உண்டாகிய ஆசீர்வாதம்.  இந்த  இஸ்ரவேல் புத்திரராகிய சபை என்பது அவருடைய குமாரன். அந்த குமாரனின் அதிசயமான நாமம் ஒவ்வொர்வரிலும் விளங்கபண்ணுகிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  ஆனால் ஆசேரில் கலப்பு உபதேசம் உண்டு என்பதும், மனந்திரும்பி புதுப்பித்து சத்தியம் கைக்கொண்டு  தேவ பெலன் பெற்றுக்கொண்டால் அவன் நாட்களுக்கு தக்கதாய் அந்த பெலனும் இருக்கும் என்றார். அப்போது ஒரே கிறிஸ்துவின்  உபதேசம் உண்டாயிருக்கும். இவையெல்லாமே கிறிஸ்துவினால் உள்ள இரட்சிப்பு என்பது விளங்குகிறது.  

ஆதலால் உபாகமம் 33:26-29 வரையிலும் நாம் தியானித்தால் 

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒரு தேவன் இல்லை, அவர் நமக்கு சகாயமாய் வானங்களின் மேலும், தனது மாட்சிமையோடு ஆகாய  மண்டலங்களின் மேல் ஏறி வருகிறார்.  அநாதி தேவன் நமக்கு அடைக்கலமும், அவருடைய நித்திய புயங்கள் நமக்கு ஆதாரம்.  அவர் நம்முடைய எல்லா சத்துருக்களையும் கிறிஸ்துவினால் துரத்தி, அவர்களை அழித்து போடு என்று கட்டளையிடுவார்.  அப்போது நம்முடைய உள்ளமாகிய இஸ்ரவேல் சுகமாய் தனித்து வாசம் பண்ணுவான்.  யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுள்ள  தேசத்திலே இருக்கும்.  அப்போது அவருடைய வானம் பனியைப்பெய்யும் என்பது கர்த்தரின் சபையில் கிறிஸ்துவின் உபதேசம் பொழியும்.  

இவ்விதம் இரட்சிக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.  அவர்களுக்கு ஒப்பானவர் யாரும் கிடையாது.  கர்த்தரே அவர்களுக்கு கேடகமும், மகிமை பொருந்திய பட்டயமும் அவரே:  அப்படியானால் கடைசியில் சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்குவார்கள். அவர்கள் இருந்த மேடுகள் மிதிக்கப்படும்.  

இவ்விதமாக கர்த்தரின் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.  நாம் யாவரும் கிறிஸ்துவினால் உண்டாகும் ஒவ்வொரு இரட்சிப்பையும் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.