தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 தீமோத்தேயு 2: 10

ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய அலங்காரம் கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படும்படியாக, கர்த்தர் நமக்கு இஸ்ரவேல் கோத்திரங்களை வைத்து திருஷ்டாந்தப்படுகிறது குறித்து தியானித்தோம்.  அல்லாமலும் மூன்று கோத்திரங்களில் தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை குறித்தும் தியானித்தோம்.  

அடுத்தப்படியாக பென்யமீன் கோத்திரம், இவன் கர்த்தருக்கு பிரியமானவன், அவரோடே சுகமாய் தங்கியிருப்பான்.  அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, எல்லைக்குள்ளே வாசமாயிருப்பான். என்னவென்றால் ஆதியாகமத்தில் தேவன் தெளிவாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் யோசேப்பு, தன் சகோதரர்களுக்கு கர்த்தரால் தானியம் கொடுத்தனுப்பும் போது, தன் சகோதரனாகிய பென்யமீனின் சாக்கில்  கர்த்தரால் வெள்ளிப்பானபாத்திரம் வைத்து அனுப்புகிறான்.  அது கர்த்தர் பென்யமீனின் எல்லைக்குள் வாசமாயிருப்பார் என்பதன் திருஷ்டாந்தம். 

அல்லாமலும் அதன் கருத்துக்களை நாம் பார்க்கும் போது, பானபாத்திரம் என்பது கர்த்தரின் பானம் வைக்கிற பாத்திரம்.  மேலும் திராட்ச ரசமாகிய கிறிஸ்துவின் இரத்தம் ஆசீர்வதிக்கிற பாத்திரம்.  அதனை நாம் குடிக்கும் நாளில் கிறிஸ்து நம்மளில் வந்து வசிக்கிறவராக காணப்படுகிறார்.  அதனை பென்யமீனை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   

அல்லாமலும் யோசேப்பைக்குறித்து கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீ்ர்வதிக்கப்படும் என்றும்; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும்,ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், சூரியன் பக்குவபடுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவபடுத்தும் அருமையான பலன்களினாலும், ஆதி பர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருட்களினாலும், நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக.  அல்லாமலும் முட்செடியில் எழுந்தருளினவருடைய தயை யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரனில் விசேஷித்தவனின் உச்சந்தலையின் மேலும் வருவதாக.  அவன் அலங்காரம் அவன் தலையீற்று காளையினுடைய அலங்காரத்தை போலவும், அவன் கொம்புகள் காண்டா மிருகத்தின் கொம்புகளை போலவும் இருக்கும்.  அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்திரங்கள் மட்டும் முட்டி துரத்துவான்.  அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும், மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.  

இவைகள் என்னவென்றால் ஆத்துமாக்களாலும், அவர்களை தேவனுடைய உபதேசத்திலும், கிறிஸ்துவின் வசனத்தின் ஊற்றுகளால் ஆழங்களை கண்டறிதலும், கிறிஸ்துவின் ஆவியினால் உண்டாகும் கனிகளும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலுண்டாகும் ஆவிக்குரிய வரங்களும், மேலும் தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள், நியாயபிரமாணங்கள், வேதப்பிரமாணங்கள், தீர்க்க தரிசனங்கள், வெளிப்பாடுகள். சொப்பனங்கள, பரலோக தரிசனங்கள், வேதவசனங்களாலும் ஆசீர்வதிக்கபடுவதும், அதின் அலங்காரம், பரிசுத்த அலங்காரமாகவும், அந்த அலங்காரம் கிறிஸ்துவாகவும்,  அவன் கொம்புகள் என்பது அவர் அதிகாரமுடையவராக இருந்தார் என்பதும், அந்த அதிகாரத்தினால் தனக்கு எதிராக வருகிற ஜனங்களை முட்டி துரத்துவான்  என்பதும், ஆனால் பெரும்பான்மையானோர் எப்பிராயீமாகவும், சிறுகூட்டம் மனாசேயும் என்றான்.  இவ்விதமாக உள்ள ஆசீர்வாதம் நம்முடைய உள்ளத்தில் எழுப்புதலை காட்டுகிறது. 

அல்லாமலும் செபுலோனைக்குறித்து நீ வெளியே புறப்பட்டு போவதும் என்றால் சுவிசேஷ பிரஸ்தாபத்திற்காகவும்,  இசக்கார் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு என்பது என்னவென்றால், கிறிஸ்துவின் சபைக்கூடார பணி செய்கிறவனாகவும் இருப்பான் என்பது, நம்மில் விளங்குகிறது. பின்னும் அவனைக்குறித்து, அவன் ஜனங்களை சபைக்கு வரவழைத்து நீதியின் பலிகளை கர்த்தருக்கு செலுத்துவான்.  அப்படி அவர்களை அழைத்து கடல்களில் மறைந்து கிடக்கிற சம்பூரணத்தையும் என்று சொல்வது, உள்ளமானது துன்மார்க்க இச்சையில் இருக்கும் போது அதன் அடியில் பிரகாசிக்கமுடியாத படி சம்பூரண கிருபை மறைந்து இருக்கும்.  இவன் அதனையும் மணலுக்குள்ளே மறைந்து இருக்கும் பொருட்களையும் அனுபவிப்பார்கள்.அப்படியென்றால் துர் உபதேசத்தினால்  சிக்குண்டு கிடக்கும் கர்த்தரின் ஜீவனை கண்டெடுப்பது கிறிஸ்துக்கு திருஷ்டாந்தம்.  

இவ்விதமாக இன்றைக்கு இஸ்ரவேலின் நான்கு கோத்திரங்களில், கிறிஸ்துவினால் பெற்றெடுக்கிற நன்மைகளை தியானித்தோம்.  ஆதலால் நாம் இதற்கு உடன்பட்டு நம்முடைய இரட்சிப்பை கிறிஸ்துவினால் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.