தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விசுவாச ஓட்டத்தில் நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பிதாக்கள் வைத்த சுதந்தரமாகிய தேவாராதனை, பிள்ளைகளாகிய நாம் பரிசுத்தமாக பாதுகாக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தமாக அதன் உதாரணங்களோடு தியானித்தோம்.  

அல்லாமலும் அடுத்ததாக நாம் தியானிக்கும் பகுதி 

உபாகமம் 1: 1, 2 

சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:

மேற்க்கூறப்பட்ட பகுதியில் இஸ்ரவேல் புத்திரர் அவர்களுடைய யாத்திரையில்  சேயீர் மலை வழியாய் ஓரேபுக்கு போகிறதை பார்க்கிறோம். ஆனால் அது காதேஸ்பர்னேயாவிலிருந்து பதினொரு நாள் பிரயாண தூரமாயிருக்கிறது. இதனை குறித்து கர்த்தர் சொல்வது 

எசேக்கியேல் 35:1-15  

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

நான் இரத்தப்பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.

நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

இரண்டு ஜாதிகளும் இரண்டு தேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,

நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

நீங்கள் உங்கள் வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன்.

பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

இதனை குறித்ததான விளக்கம் என்னவென்றால் சேயீர் மலை நம்முடைய உள்ளத்தில் இஸ்ரவேல் கோத்திரத்துக்கு விரோதமாக எழும்புகிற ஒரு வித பொல்லாத செயல் பாடுகளால் கர்த்தர் சேயீர் மலையோடு யுத்தம் செய்கிறவராக காணப்படுகிறார்.  எப்படியெனில், கர்த்தர் சொல்வது சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமாக எழும்பி, என் கையை நீட்டி, உன்னை பாழும் அவாந்தர வெளியாக்குவேன்.  நீ பாழாய் போவாய்.  என்னவெனில் இஸ்ரவேல் வளர விடாதபடி அதன் அக்கிரமம் நிறைவேறுகையில்   அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தை சிந்தினபடியினால், நான் இரத்தபழிக்கு உன்னை ஒப்புக்கொடுப்பேன், இரத்தபழி உன்னை பின் தொடரும் என்று நான் என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றும்,  நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் உன்னை பின் தொடரும் என்று கர்த்தர் சொல்கிறார். 

சேயீர் மலையை போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ் செய்து, அதின் மலைகளை கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; மேலும் மேடுகளிலும், பள்ளதாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.  அதனை என்றைக்கும் அவாந்தர வெளியாயிருக்கும் படி செய்வேன் என்றும், அதன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை என்று கர்த்தர் சொல்கிறார். 

இதனை கர்த்தர் நம் உள்ளத்தில் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை, வளர விடாதபடி, ஒருவிதமான துர்கிரியைகளுக்கு நம் உள்ளம் இணைகிறதை குறித்து சேயீர் மலை என்று கர்த்தர் சொல்கிறார்.  இதனோடு கர்த்தரின் யுத்தம் உண்டு. காரணம் இந்த செயல்கள் ஏதோமுடைய பர்வதம் என்பதும், இஸ்ரவேலருடைய ஆவிக்குரிய ஐக்கியத்தை பாழாக்கிக்கொண்டிருக்கும் என்பதைகுறித்து கர்த்தர் இரத்தத்தை சிந்துகிறது என்று சொல்கிறார். அதனால் கர்த்தர் அதனோடு யுத்தம் செய்து அது நமக்குள் குடியேற்றாதபடி கர்த்தர் செய்கிறார்.  

ஆனால் சேயீர் மலை சொல்வது இரண்டு தேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும் அவைகள் என்னுடையவைகளாகும், அதை சுதந்தரித்துக்கொள்வேன் என்று சொல்வது என்னவென்றால் இஸ்ரவேல் (கர்த்தரின் சபை) இரண்டு கூட்டத்தாரும் உண்டு.  மாமிசம், ஆவி, இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று போராடும்.  இவற்றின் விளக்கம் என்னவெனில் நம்முடைய உள்ளத்திலும், இந்த இரண்டு காரியங்களும் இடம் பெற்றுக்கொண்டிருக்கும்.   அதனால் தேவனுடைய வார்த்தை சொல்கிறது 

ரோமர் 8:12-14 

ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் மாம்சத்தின் படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்திற்கு கடனாளியல்ல.  ஆதலால் மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்.  ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். அதனால் தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம்.  ஆதலால் மாம்சத்தின்படி நடந்தால் நமக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.  ஆதலால் கர்த்தர் மாம்சத்தை அழிக்கும்படியாக மாம்சத்தோடு எப்போதும் யுத்தம் செய்கிறவராய் காணப்படுகிறார்.  

ஆதலால் நம்முடைய விசுவாச யாத்திரை சேயீர் மலை வழியாய் என்று திருஷ்டாந்தப்படுத்துவது  என்னவென்றால்  மேற்க்கூறப்பட்ட கருத்துக்களால் நம் வாழ்க்கையில் ஜெயம் எடுக்கவேண்டும் என்பதனை காட்டுகிறது.  அதனால் கர்த்தர் இஸ்ரவேலரை அவ்வழியாய் நடத்தி வந்தார்.  இவ்விதமாக நடத்தி யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்த போது மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி சொன்ன வசனங்கள் 

உபாகமம் 1: 3-8  

எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,

நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,

ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.

நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.

இதோ, இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.

மேற்க்கூறிய வசனங்கள் கானான் தேசத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.  இவை கிறிஸ்துவை சொந்தமாக்கும்படியான திருஷ்டாந்தம்.  ஆதலால் எந்த சூழ்நிலையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.