தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 13:22

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இஸ்ரவேலின் சுதந்தரமாகிய தேவாராதனையில் நிலைத்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமாக வாழ்ந்து, தேவன் வாசம் பண்ணுகிற வாசஸ்தலமாக மாற வேண்டும் என்பதனை குறித்தும், அவ்விதம் பரிசுத்தமான வாழ்க்கை எவ்விதம் வாழ வேண்டும் என்பதையும், நாம் நம்முடைய வாழ்க்கையில் தீட்டுபடாமல், நம்மை காத்துக்கொண்டாலும், கர்த்தரின் அடைக்கலத்துக்குள் மறைந்து வாழ்ந்தால் மட்டுமே பரிசுத்தமாக வாழமுடியும் என்பதனையும் தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது 

எண்ணாகமம் 36:1-13  

யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி:

சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.

இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.

இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.

அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.

கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.

இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.

சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.

செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால்,

அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.

எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய  மாகீருக்கு பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்கள் சேர்ந்து, மோசேக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவர்களாகிய பிரபுக்களிடத்தில் வந்து, சீட்டு போட்டு தேசத்தை சுதந்தரமாக இஸ்ரவேல் புத்திரருக்கு  கொடுக்கும் படி கர்த்தர் எங்கள் ஆண்டவனுக்கு கட்டளையிட்டாரே; அன்றியும் அவர்கள் சொல்வது எங்கள் சகோதரனாகிய  செலொப்பயாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்கு கொடுக்க வேண்டும்  எங்கள் ஆண்டவனுக்கு கர்த்தரால் கட்டளை வந்ததே, அதனால் இவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்த சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேரும்.  இப்படி எங்கள் சுதந்தரத்துக்கு சீட்டினால் விழுந்த பங்கு இராமல் அற்று போகும் என்றுமே, அல்லாமலும் யூபிலி வருஷம் வந்தாலும் அவர்கள் சுதந்தரம் அவர்கள் உட்பட்டு போன சுதந்தரத்தோடே சேர்ந்து போகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து நீங்கி போகுமே என்றார்கள்.    

அப்போது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கர்த்தர் கட்டளையிட்டது சரி தான். ஆனால் செலொப்பியாத்தின் குமாரத்திகளை குறித்த காரியத்தில், கர்த்தருடைய கட்டளை என்னவென்றால் தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகம் பண்ண வேண்டும்.  இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரம் ஒரு கோத்திரத்தை விட்டு வேறு கோத்திரத்துக்கு போகாதிருக்கும். மேலும் இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் பிதாக்கள் கோத்திரத்திலே நிலைக்கொண்டிருக்க வேண்டும். ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்த குமாரத்திகள், அந்த கோத்திரத்தில் தானே ஒருவனுக்கு மனைவியாக வேண்டும்.  சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு மறு கோத்திரத்துக்கு சேரக்கூடாது. இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைத்திருக்க வேண்டும்.  

இவ்விதமாக கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.  செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், திர்சாள்,ஒக்லாள், மில்காள், நோவாள் என்பவர்கள், தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகத் பண்ணினார்கள்.  அதனால் அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.இந்த கட்டளைகள் கர்த்தர்  எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும், நியாயங்கள் என்பவைகள்.  

இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தர் மோசேயைக்கொண்டு  இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தர பாகம் பிள்ளைகளுக்கென்று வைத்திருக்கிறார்கள்.  இந்த சுதந்தரபாகம் தேவாராதனை என்பதும், ஒவ்வொருவரும் அவரவர் கோத்திரங்களில் பிதாக்கள் வைத்த சுதந்தரம் அவரவர் தலைமுறைகளும் பரிசுத்த சந்ததியாக விளங்க வேண்டும் என்றும், தேவாராதனையில் கலப்பு உபதேசம் இருக்கக்கூடாது என்பதும், இதிலிருந்து நமக்கு புரிகிறது. அதனால் கர்த்தர் 

நீதி 19:14  

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நாம் தியானிக்கையில் தேவனுடைய வீடும்,  நம்முடைய ஆஸ்தி நித்திய ஜீவனும் (கிறிஸ்து) பத்தியுள்ள மனைவி பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர், கர்த்தர் அருளும் ஈவு என்பதும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.  அல்லாமலும் கர்த்தர் சொல்வது 

நீதிமொழிகள் 22:28 

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைகுறியை மாற்றாதே என்று கூறுகிறார்.  

ஆதலால் நாம் சத்திய தேவனை ஒரே சத்தியத்தில் ஆராதனை செய்ய வேண்டும்.  இப்படியாக தேவ கட்டளைகளுக்கு கீழ்படிந்து ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.