தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 யோவான் 4: 21

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சகோதரரை பகைத்தால் மனுஷ கொலைப்பாதகனாகிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் யாரையும் பழிவாங்கக்கூடாது என்பது குறித்தும், மேலும் அடைக்கலப்பட்டணம் குறித்தும், அடைக்கலபட்டணம் கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தியும், கர்த்தரே பழிக்கு பழி வாங்குகிறவர் என்பது குறித்தும் தியானித்தோம். 

ஆனால் இந்த நாளில் தியானிப்பது என்னவெனில் 

எண்ணாகமம்  35:15-34  

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.

ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம்.

ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும்,

அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம்.

ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும்,

அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக்காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால்,

அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.

கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.

சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது.

நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் கைபிசகாய் ஒருவனை கொன்றவன் ஓடி போயிருக்கும் படி, அந்த ஆறு பட்டணங்களும்,  இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணமாயிருக்கவேண்டும் என்றும், அல்லாமலும் கொலைப்பாதகர்களை குறித்துச் சொல்லப்படுவது என்னவென்றால் ஒருவன் இரும்பு ஆயுதத்தால் ஒருவனை வெட்டினால், அவன் செத்துப்போயிருக்க அவன் கொலை பாதகனாயிருக்கிறான் என்றும், ஒருவன் கல்லால் ஒருவனை எறிந்து கொன்றால், அவன் கொலைப்பாதகனாயிருக்கிறான் என்றும், ஒருவன் மர ஆயுதத்தினால், சாகத்தக்கதாக ஒருவனை அடித்தால் அவன் கொலைப்பாதகனாயிருக்கிறான் என்றும், 

இவ்விதமான கொலைபாதகர்கள் பழிவாங்க வேண்டியவனே கொலை பாதகனை கொல்ல வேண்டும். அவனை கண்ட மாத்திரத்தில் அவன் கொன்று போடலாம் என்று நியாயபிரமாணம் கூறும் போது, நாம் யாரும் பழிக்குபழிவாங்கக்கூடாது என்றும், நானே பதிற் செய்வேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறதைப் பார்க்கிறோம்.  

அல்லாமலும் ஒருவன் பகையினால் ஒருவனை விழதள்ளினதினாலும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் ஒருவனை எறிந்ததினாலும், அவனை பகைத்து கையினால் அடித்து அவன் செத்துப்போனானேயாகில் அவன் கொலைப்பாதகன்.  அவனை கண்ட மாத்திரத்தில் பழி வாங்குகிறவன் கொலைப்பாதகனை கொன்று போடலாம் என்ற கட்டளை பிரமாணம், மற்றும் மேற்க்கூறப்பட்ட பிரமாணத்தை எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆவியினால் நிறைவேற்றுகிறார்.  ஏனென்றால் பாவஞ்செய்த ஆத்துமா சாகும். எப்படியெனில் இவ்விதமாக பாவஞ்செய்தால் நம்முடைய ஆத்துமாவை வசனமாகிய பட்டயத்தினால் மடிய வைத்து கொலைச்செய்து விடுகிறார். இவ்விதமான தண்டனையிலிருந்து யாரும் தப்புவித்துக்கொள்ள முடியாது. அதனைக்குறித்து தேவனுடைய வசனம் 

மத்தேயு 10:21-28  

சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.

சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.

நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, எந்த மனுஷனானாலும் ஆத்துமாவை எந்த மனுஷனுக்கோ, கொல்லவோ, அழிக்கவோ முடியாது.  ஆனால் கொலைபாதகனை கொலை செய்தாலும் சரீரத்தை மாத்திரம் கொல்லுவார்களே தவிர ஆத்துமாவையும், சரீரத்தையும் கர்த்தராகிய கிறிஸ்து தான் கொல்ல முடியும். அல்லாமலும் நரகத்திலே தள்ளி அழிக்கிறார். அதனால் தான் பழிவாங்குதல் எனக்குரியது என்று சொல்கிறார்.  

மேலும் கொலைபாதகர்கள் யார் என்பதனைக் குறித்து 

1 யோவான் 3:14-18 

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் தன் சகோதரனை பகைக்கிற  எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்.  மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிகிறோம்.  அவர் தம்முடைய ஜீவனைக் நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்: நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்.  ஆதலால் நாம் சகோதரரிடத்தில் அன்புக்கூர்ந்தால்  நமக்குள் நித்திய ஜீவன் நிலைத்திருக்கும். 

ஆதலால் பிரியமானவர்களே நாம் சபையாம் சகோதரர்களை பகைக்காதபடி, அவர்களிடத்தில் மாயமற்ற  சகோதர   சிநேகம் உள்ளவர்களாயிருந்து, கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொண்டு நித்திய ஜீவனை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.