தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 11: 1

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்க்கையில் தேவனிடத்தில் முழுமையான விசுவாசம் காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் அவருக்கு உடன் சுதந்தரராயிருக்க வேண்டும் என்று தியானித்தோம்.   

மேலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 33:1- 5  

மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:

மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:

முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.

அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.

பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டு மோசே, ஆரோன் என்பவர்களின் கையின் கீழில் தங்கள் தங்கள் சேனைகளோடு நடத்தப்பட்டு பிரயாணம் புறப்பட்ட பிரயாணங்களின் விவரம்;  அவர்கள் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே அவர்கள் பிரயாணம் புறப்பட்டதை மோசே எழுதுகிறான். அதன் விவரங்கள் கீழேக் கொடுக்கப்படுகிறது.  என்னவென்றால் அவர்கள் தங்குவதற்கு செழிப்புமான தேசமும், ஆடுமாடுகளுக்கு ஏற்ற தேசமுமாகிய ராமசேஸிலே குடியேறியிருந்தார்கள்.  ஆனால் கர்த்தர் அவர்களை மோசே ஆரோன் மூலமாய் பார்வோனிடத்திலிருந்து விடுவித்து இஸ்ரவேல் தேசத்துக்கு நேராக நடத்திக் கொண்டுவரும்,  போது, முதலில் அவர்கள் ராமசேஸிலிருந்து முதலாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே புறப்பட்டு, பஸ்காவுக்கு மறு நாளிலே எகிப்தியர் எல்லாரும் பார்க்க இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டார்கள்.  அப்போது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த சகல தலைச்சன் பிள்ளைகளையும்  அடக்கம்பண்ணினார்கள்.  அதுமட்டுமல்ல அவர்கள் தேவர்கள் பேரிலும் நீதி செலுத்தினார். 

 இதன் கருத்துக்கள் என்னவெனில் நாம் தியானிக்கும்போது இவையெல்லாமே, நம்முடைய பாவ சரீரம் அழிந்து, ஒரு புதிய சரீரம் (உள்ளான மனுஷன்) தேவ சாயலை தரித்து, நம்முடைய உள்ளத்தில் இருக்கிற உலகத்தின் மேன்மைகளாகிய முதற் ஸ்தானத்திலே இருக்கிற அத்தனை எண்ணங்களையும் சங்கரித்து, கிறிஸ்து முதற் பேறானவராக நம் உள்ளத்தில் தோன்றும்படியாகவே, எகிப்த்தின் தலைச்சன் பிள்ளைகளையெல்லாம் சங்கரித்து, இவ்விதமாக கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி அங்கிருந்து அவர்களை புறப்படப்பண்ணுகிறார் அதனை குறித்து தேவ வசனமானது 

கொலோசேயர் 1:13-20  

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

நம் ஆத்துமா இவ்விதமான உலகமாகிய பாவத்தை விட்டோய்ந்து கிறிஸ்துவோடு வாழவேண்டும் என்கிற விசுவாச ஓட்டத்திற்காகவே அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு இடமாக பாளயமிறங்குகிறார்கள்.  அதன் பின்பு 

எண்ணாகமம் 33:6 – 39 

சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.

ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.

ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.

மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.

ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.

சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.

தொப்காவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.

ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.

ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.

ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.

ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.

லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.

ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.

ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.

மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.

தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.

தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள்.

மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.

மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.

பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.

எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனபிரகாரம் ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம் பண்ணி மாராவிலே பாளயமிறங்குகிறார்கள்.  மாரா என்பது கசப்பை காட்டுகிறது.  ஆனால் மாராவிலிருந்து ஏலீமுக்கு போனார்கள்.  ஏலீமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்த இடத்திலே பாளயமிறங்கினார்கள்.  

பிரியமானவர்களே நாம் தியானிக்கும் போது மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்தது.  நம்முடைய விசுவாச ஜீவிதம் கசப்பாக இருக்கிறது என்றால், நாம் தேவனிடத்தில் மீண்டும் குறைகளை அறிக்கை செய்து பாவமன்னிப்புப் பெற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்து உள்ளத்தில் தோன்றுகிறார்.  அப்போது நம் கசந்த வாழ்க்கை மதுரமாக மாறும்.  அப்போது  கர்த்தர் பன்னிரண்டு நீரூற்று தருகிறார். இந்த பன்னிரண்டு நீரூற்று  பன்னிரண்டு சீஷத்துவம் என்றால் பன்னிரண்டு விதமான கனிகளை தரும் நீதியின் கனிகள்.  மேலும் எழுபது பேரீச்ச மரங்கள், எழுபது மூப்பர்களின் அனுபத்தோடு தீர்க்கதரிசனத்தை காட்டுகிறது.   இவைகளெல்லாம் விசுவாச யாத்திரைகளின் கிரியைகளாக இருக்க வேண்டும்.  

பின்பு அவர்கள் எலீமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள். இவ்விதமாக ஒவ்வொரு இடமாக பாளயமிறங்குகிறார்கள். ஆனால்  காதேசாகிய சீன் வனாந்தரத்திலே  பாளயமிறங்கி, பின்பு காதேசிலிருந்து புறப்பட்டு போய், ஏதோம் தேசத்தின் எல்லையாயிருக்கிற ஒர் என்னும் மலையில் பாளயமிறங்கினார்கள்.  அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னது போல் 

எண்ணாகமம் 33:38,39 

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.

மேற்க்கூறிய வசன பிரகாரம் ஆரோன் மரணமடைகிறான்.  ஆனால் அவன் மரணமடையும் போது அவன் வயது நூற்று இருபத்து மூன்றுவயதாயிருந்தான்.  பிரியமானவர்களே ஓர் என்னும் மலை ஏதோம் தேசத்தின் ஒரு எல்கையாயிருக்கிறது.  அவ்விதம் மரிக்க காரணமாயிருந்தது காரணம் மேரிபாவின் தண்ணீரிடத்தில்,  இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக கர்த்தரை பரிசுத்தம் பண்ணும் படி விசுவாசியாமற் போன படியால், கர்த்தரின் கட்டளை பிரகாரம் ஆரோன் மரிக்கிறான்.  

பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சபைக்கு முன்பாகவும், மற்றும் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும்,  நம்மில் கர்த்தரை பரிசுத்தம் பண்ணி, விசுவாசத்தை பிரஸ்தாபப்படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.