தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 3:2

ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் நித்திய சுதந்தரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நாவினால் பாவஞ்செய்யாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  அதன் விளக்கங்களைக் குறித்து நாம்  சில காரியங்கள் தியானித்தோம்.

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 32:25—42  

அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.

எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.

உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

உங்களோடேகூட யுத்தசன்னத்தராய்க் கடந்துபோகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.

அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,

ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

பேர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

மேற்க்கூறப்பட்ட  வசனங்கள் பிரகாரம் மோசே காத் புத்திரரிடமும், ரூபன் புத்திரரிடமும் தேசத்தின் சுதந்தரத்தை பற்றி பேசினதற்கு மாறுத்தரமாக அவர்கள் சொன்னது எங்கள் பிள்ளைகளும், எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எல்லா மிருக ஜீவன்களோடும் கீலேயாத்தின் பட்டணங்களிலே இருப்பார்கள்.  உங்கள் ஊழியக்காரராகிய நாங்களோ கர்த்தரின் சமூகத்தில் யுத்தத்திற்கு போவோம் என்றார்கள்.  அதற்கு மோசே அவர்களுக்காக எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும்,  இஸ்ரவேல் கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு, காத் புத்திரரும், ரூபன் புத்திரரும் கர்த்தருடைய சமூகத்தில் யுத்தசன்னதராய் உங்களோடே கூட யோர்தானை கடந்து போனால் அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்கு கீலேயாத் தேசத்தை சுதந்தரமாகக் கொடுக்கக் கடவர்கள்.  ஆனால் யுத்த சன்னதராய் கடந்து போகாதிருந்தார்களேயாகில் அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடைய கடவர்கள் என்றான்.  

அதற்கு ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் அப்படியே செய்வோம் என்றார்கள். மேலும் அவர்கள் சொன்னது ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் சொன்னது யோர்தானுக்கு இக்கரையிலே காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி, நாங்கள் கர்த்தருடைய சமூகத்தில் யுத்தசன்னதராய் கானான் தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.  அப்பொழுது மோசே 

எண்ணாகமம் 32:33-37 

அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,

ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் தியானிக்கும் போது அவைகள் அவர்களுக்கு சுதந்தரமாக கொடுக்கப்பட்டன.  மேலும் தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு பேர்கள் மாற்றப்பட்டு அது வேறே பேர்களிடம் கொடுக்கப்பட்டது.  அப்பொழுது மோசே  கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்கு கொடுத்தான்.  அவன் போய் கிராமங்களை கட்டினான், அதற்கு யாவீர் என்று பெயரிட்டான்.  நோபாக் போய் கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு தன் நாமத்தின் படியே நோபாக் என்று பெயரிட்டான்.  

பிரியமானவர்களே மேலே கூறிய பிரகாரம் காத் புத்திரரும், ரூபன் புத்திரரும் தங்கள் காணியாட்சியை சுதந்தரமாக்கிக் கொண்டார்கள்.  இதனை எதற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நாம் எல்லாரும் கிறிஸ்துவை சுதந்தரராக்க வேண்டும் என்பதற்காகவே என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.  நாம் அவரை எவ்விதத்தில் சுதந்தரராக்க வேண்டும் என்றால் கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் அவரோடு நித்திய உடன்படிக்கை எடுக்கும் போது நித்திய சுதந்தரராகுவோம்.  எப்படியெனில் 

எபிரெயர் 9:14,15 

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

மேற்க்கூறப்பட்ட வசன பிரகாரம் கிறிஸ்துவினுடைய இரத்தம். அழைக்கப்பட்டவர்கள் வாக்குதத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துக்கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.  ஆதலால் நாம் எல்லாரும் கிறிஸ்துவினால் நித்திய சுதந்தரம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.