தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51: 9

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய நாவால் பாவஞ்செய்யாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நல்ல மேய்ச்சலை கண்டடைய வேண்டும் என்றும், அந்த நல்ல மேய்ச்சல் புறம் கர்த்தரின் சபை என்பதையும், ஆனால் அதனை கண்டறிய விடாமல் பிதாக்கள் திடனற்று போக பண்ணுகிறதையும், அதனால் கர்த்தரின் கோபம் இஸ்ரவேல் புத்திரராகிய சபையிடம் வருகிறதை குறித்து தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 32 :11- 15 

உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.

அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.

இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடம் உத்தமமாய் என்னை பின்பற்றின கேனாசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமாய் பின்பற்றாத படியினால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தை காண்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார் என்று மோசே சொல்கிறான்.  அல்லாமலும் நாம் வாசிக்கும்போது கர்த்தரின் சொல்லை கேளாமல் பொல்லாப்புச் செய்த சந்ததியெல்லாம் நிர்மூலபண்ணும்மட்டும் கர்த்தர் வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணுகிறார். 

இவ்விதமாக தான் நம்மில் அநேகம் பேர் என்ன என்று தெரியாமல், கர்த்தரின் சபையில் சத்திய சபை என்று தெரியாமல், வாழ்க்கையில் ஆத்தும விடுதலை இல்லாமல், எங்கே போனால் சமாதானம் கிடைக்கும் என்று அலைந்து திரிகிறோம்.  ஆனால் பிரியமானவர்களே நாம் உண்மையான சத்திய சபையை கண்டறிந்து, சத்தியத்திற்கு கீழ்படிந்து, ஆத்துமாவின் மீட்பை பெற்றுக்கொள்வோமானால் நமக்கு சமாதானம் கிடைக்கும்.  நம்முடைய அலைச்சல்கள் யாவையும் அகற்றி நம்மை இளைப்பாற செய்து, அவர் சமூகத்தில் நாட்டுவார்.  அதன் பின்பு நாம் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை, அவர் ஆசீர்வதிப்பார்.  

இவ்விதமாக கர்த்தரின் சபையில் நாட்டபடாமல் இருந்தால் இஸ்ரவேல் புத்திரர் நடுவில் கர்த்தர் கோபத்தை அதிகரிக்கபண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள் என்றும் அவரை விட்டு பின்வாங்கி போனால் இன்னும் வனாந்திர வாழ்க்கையில் இருக்கப்பண்ணுவார்; இப்படி இவர்களை எல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்று மோசே காத் புத்திரிடமும், ரூபன் புத்திரரிடமும்   சொல்கிறான்.  

இவை நமக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் நாமும் உண்மையாக ஜீவனுள்ள தேவனுடைய சரீரமாகிய சத்திய சபைக்குள் கண்டறிந்து வராமல் இருப்போமானால் நம்முடைய ஆத்துமா நிலைவரப்படாமல் அழிந்து போவதற்கு ஏதுவாகும்.  இவற்றை மோசேயிடம் இருந்து கேட்டவுடனே  அவர்கள் சமீபமாய் வந்து ஆடுமாடுகளுக்கு தொழுவமும், பிள்ளைகளுக்கு பட்டணங்களையும் இங்கே கட்டுவோம் என்கிறார்கள். மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால்  

எண்ணாகமம் 32:17-19 

நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை காத் புத்திரரும், ரூபன் புத்திரரும் சொல்லவும், மோசே அவர்களிடம் இந்த வார்த்தைகளின்படியே செய்து, கர்த்தருடைய சமூகத்தில் யுத்தசன்னதராய் யோர்தானை கடந்து போவீர்களானால் அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தபட்ட பின்பு, நீங்கள் திரும்பி வந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும் குற்றமில்லாதிருப்பீர்கள்.  அதற்கு பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்கு சுதந்தரமாகும். நீங்கள் இப்படி செய்யாமற் போனால் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தவர்களாயிருப்பீர்கள். அப்போது உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து பிடிக்கும்.  பின்னும் மோசே அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காக தொழுவங்களையும் கட்டி,உங்கள் வாய் மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.  

பிரியமானவர்களே  இதன் கருத்துகளை நாம் நன்றாக நிதானித்து அறிந்துக்கொள்ளவேண்டும், என்னவென்றால் நம்முடைய வாயால் கர்த்தரின் சமூகத்தில் ஏதாவது சொல்லி விட்டால், அதனை நாமாகவே நிச்சயம் செயகிறவர்களாக வேண்டும்.  இல்லாவிட்டால நம்முடைய வாயால் சொன்னதினால் பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்கும்.  இப்படியாக அநேகர் தங்கள் வாழ்க்கையில் ஆராதனைக்குரிய இடத்தை சொந்தமாக பார்த்து,  ஜனங்களையும் இழுத்து வைத்துவிட்டு தான் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று அவர்களுக்கு வாக்கும் கொடுத்து விட்டு, பின் பரலோக பாதைக்கு வழியொருக்குகிறது போல் அவர்களை சில நாட்கள் நடத்துவார்கள்.  அவர்கள் தாங்கள் யுத்தசன்னதராக செயல்படுவார்கள்.  அவர்களால் ஜெயிக்கமுடியாத காரணத்தால் அதனை இடையில் விட்டு விடுவார்கள்.  அப்படி அவர்கள் சொல்லியும் சரியாக செய்யாமல் இருக்கிறதால்  அவர்கள் சொன்ன பாவம் அவர்களை தொடர்ந்து பிடிக்கும்.  

ஆதலால் பிரியமானவர்களே இவ்விதம் யாரும் நெறிதவறி போகாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். எப்படியும் இதனை வாசிக்கிற யாவரும் தேவ சித்தம் அறிந்து செயல்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.