தேவனுக்கே மகிமையுண்டாவதா

2 கொரிந்தியர் 3:18

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய ஜாதிகளை அழித்து  கிறிஸ்துவின் மகிமையில் பிரவேசிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம், பரிசுத்த ஆவியினாலும், பரிசுத்த அக்கினியாலும் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்றும், அதன் கருத்துக்களை கர்த்தர் இஸ்ரவேல் சபையை நமக்கு திருஷ்டாந்த படுத்தி, மோசே மூலம் கர்த்தர் மீதியானியரை எவ்விதம் கொள்ளையாடுகிறார் என்பதையும், இஸ்ரவேலர் எவ்விதம் தீட்டுபடுகிறார்கள் என்பதையும், அதனை கர்த்தர் எவ்விதத்தில் எல்லாம் சுத்தம் செய்கிறார் என்பதின் கருத்துக்களை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  அதன் காரணம் நம்முடைய இரட்சிப்பின் வஸ்திரம் அழுக்காக்காதபடி அனுதினம் நாம் நம்மை கழுவி சுத்தம் செய்து புதிதாக்கிக்கொண்டு நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்கிறவர்களாக காணப்பட வேண்டும்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 31: 25-31 

கர்த்தர் மோசேயை நோக்கி:

பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து,

கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,

அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி,, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் மீதியானியரில் பிடித்துக்கொண்டு வரப்பட்ட எல்லாவற்றையும் தொகைப்பார்க்க வேண்டும்.  ஆனால் தொகை பார்க்க வேண்டியவர்கள் யாரென்றால் மோசயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், இஸ்ரவேல் சபையின் பிதாக்களாகிய தலைவர்கள். அவர்கள் கொள்ளையிடப்பட்டு பிடித்துக் கொண்டு வரப்பட்டதை  இரண்டு பங்காக பங்கிட்டு, யுத்தத்திற்கு படையெடுத்து போனவர்களுக்கும், சபையனைத்துக்கும் கொடுங்கள் என்றும். 

மேலும் யுத்தத்திற்கு போன படை வீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,  அவர்களுடைய பாதி பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும்.  இஸ்ரவேல் புத்திரரின் பாதி பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும் ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி, அவைகளை கர்த்தருடைய வாசஸ்தலத்தின்  காவலை காக்கும் லேவியருக்கு கொடுக்க வேண்டும் என்றார்.  கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.  

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட பகுதியில் நாம் தியானிக்கும் போது, உண்மையாகவே கர்த்தருடைய வேலை செய்கிறவர்களுக்கு அவரால் நல்ல பிரதிபலன் நிச்சயமாக வரும்.  ஆனால் நாம் சோம்பேறியாக இருக்கக்கூடாது. நாம்,  ஆத்துமாக்கள் புறஜாதிகளிலிருந்து விடுதலை அடைந்து, மீட்பை சுதந்தரித்துக்கொள்ளும்படியாக போராடி ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் ஜெபித்தால் நமக்காக யுத்தம் பண்ணுகிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  ஆதலால் கர்த்தருடைய வேலை செய்கிற நமக்கு அவராலே பிழைப்பு உண்டு என்பதை அறிந்திருக்கிறோம்.  அதுதான் ஆத்துமாவின் தாகம் நம்முடைய தேவன் மாற்றுகிறார்.  

ஆதலால் தேவனுடைய வார்த்தையானது 

1 கொரிந்தியர் 9:13-27 

ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது பிழைப்பை நினைத்து நாம் கர்த்தரின் வேலையை செய்யாமல் சுவிசேஷத்தினால் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படி செய்கிறேன் என்பது போல் நாம் கர்த்தரின் வேலையை செய்ய வேண்டும்.  அல்லாமலும் 

யாக்கோபு 5:19,20  

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் என்ன சொல்கிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் சத்தியத்தை விட்டு யாராவது விலகி போனால், அவர்களை நாம் சத்தியத்துக்கு கீழ்படிய செய்யும்படி நாம் உபதேசிக்க வேண்டும்.  மற்றும் மார்க்கந்தப்பி நடப்போரை சத்தியவழிக்குள் நடத்தி  அவர்கள் ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது.  இவ்விதம் கர்த்தரின் வேலையில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.  

மேலும்  அவர்கள் கொள்ளயிட்டதும், ஆசாரியனுக்கு கொடுத்ததும், கர்த்தருக்கு பங்காக வந்ததும், இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்ததும் லேவியருக்கு கொடுத்ததும் கீழே குறிக்கப்படுகிறது.  அவை 

எண்ணாகமம் 31:32-47

படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

எழுபத்தீராயிரம் மாடுகளும்,

அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.

இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.

கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.

நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.

கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.

யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:

ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,

மாடுகளில் முப்பத்தாறாயிரம்,

கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,

நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.

பின்பு எண்ணாகமம் 31: 48-54  

பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,

உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.

ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.

இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.

யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள்.

அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

இந்த வசனங்கள் என்னவென்றால் ஆயிரம் பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து யுத்த மனிதரை தொகை பாரத்தோம் என்று சொல்லி; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை, ஆகையால் எங்கள் ஆத்துமாக்களுக்காக பாவ நிவிர்த்தி செய்யும் பொருட்டு எங்களுக்கு கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்காக காணிக்கையாக கொண்டு வந்தோம் என்றபோது, 

மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும் அதனை வாங்கினார்கள்.  அவர்கள் வாங்கின பொன்னின் நிறை பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.  இவை யுத்தத்திற்கு போன மனிதர்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள்.  அந்த பொன்னை மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும் , கொண்டு வந்தவர்களின் கையிலிருந்து வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபக குறியாக ஆசரிப்புக்கூடாரத்திலே கர்த்தரின் சந்நிதியில் வைத்தார்கள்.  

பிரியமானவர்களே, இந்த பொன் எதற்கு திருஷ்டாந்தம் என்றால் தேவனுடைய மகிமை, அதனால் ஞாபக குறி என்பது பிதாக்கள் வைத்த சுதந்தரம்.  இது கிறிஸ்துவுக்கு அடையாளம்.  இப்போது இந்த அடையாளம் நம் சரீரத்தில் கிறிஸ்து மகிமையாக வெளிப்படுகிறார். பிரியமானவர்களே கிறிஸ்துவின் மகிமையில் நாம் யாவரும் பிரவேசிக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.