தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 பேதுரு 3: 17, 18

ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்..

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ சத்தம் கேட்டால், கீழ்ப்படியும் பொருட்டு விவேகத்தை பேணிக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் பொல்லாத வல்லமைகளுக்கு இடம் கொடுக்காதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  அதென்னவென்றால் பேயோரின் குமாரனாகிய பிலேயாம், பாலாக் அனுப்பினதான குறிச்சொல்லுகிற மோவாபின் மூப்பரையம், மீதியானின் மூப்பரையும், தன்னிடத்தில் இடம் தங்கியிருக்க இடம் கொடுத்ததால்; தேவன், பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்கிறார்.  அதற்கு பிலேயாம் தேவனிடத்தில் `

எண்ணாகமம் 22:11 

பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம்பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.

மேற்க்கூறிய வார்த்தைகளை தேவனிடத்தில் சொல்லவும், தேவன் பிலேயாமிடம் நீ அவர்களோடே போகவும் வேண்டாம், அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம் அவர்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள் என்று இஸ்ரவேல் சபையைக் குறித்து சொல்கிறார்.  இந்த காரியத்தை தேவன் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் மனவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் ஒருபோதும் பாகாலின் கிரியைகளுக்கு உடன்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  அப்படி இடம் கொடுத்தால் நம்முடைய பரிசுத்த சபையாகிய நம்முடைய ஆத்துமா தீட்டுப்படும்.  அப்படியானால் பிலேயாமை போல காசுகளுக்காக நம்முடைய உள்ளம் வஞ்சிக்கப்பட்டு விடும்.  அப்படியிருந்தால் கர்த்தர் நம்மேல் பிரியமாயிருப்பதில்லை. 

அதனால் பிலேயாம் காலையில் எழுந்து பாலாக்கின் பிரபுக்களை அழைத்து: நீங்கள் உங்கள் தேசத்துக்கு போங்கள், கர்த்தர் நான் உங்களோட வருவதற்கு உத்தரவுக் கொடுக்கவில்லை என்றான்.  அந்த காரியங்களை மோவாபியரின் பிரபுக்கள் போய், பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள். பின்பு பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.  அவர்கள் பிலேயாமிடத்தில் போய் அவனை நோக்கி: பாலாக் சொல்ல சொன்னதை சொன்னார்கள்.  அதென்னவென்றால் 

எண்ணாகமம் 22:16,17 

அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;

உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.

அதற்கு பிலேயாம் எண்ணாகமம் 22:18,19  

பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.

ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

மேற்க்கூறிய வசனம் நாம் தியானிக்கும் போது பிலேயாம் ஒருமுறை தேவன் போகக்கூடாது என்று சொல்லியும், இரண்டாம் முறை அதைவிட கனவான்களை அனுப்பியதையும், கனம் பண்ணுவேன் என்று சொன்னதையும் கேட்டவுடன், அவன் உள்ளம் வஞ்சிக்கப்பட்டு, அங்கு வந்தவர்களுக்கு தங்குவதற்கு இடமும் கொடுத்ததின் காரணமாக,  

எண்ணாகமம் 22:20-23   

இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

மேறக்கூறிய வார்த்தைகளின் படி  தேவன் பிலேயாமிடம் வந்து: அந்த மனிதர் உன்னை கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூட போ; ஆனால் உனக்கு சொல்லும் வார்த்தையின்படி மாத்திரம் நீ செய்ய வேண்டும் என்றார்.  அப்படியே பிலேயாம் காலமே எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடே கூடப்போனான்.  அப்போது கர்த்தர் அவன் போகிறதினால் கோபமூண்டவராகி;  கர்த்தருடைய தூதனானவர் வழியிலே எதிராளியாக நின்றார்; அவன் தன் கழுதையின் மேல் ஏறிப் போனான்.  அவன் வேலைக்காரர் இரண்டு பேரும் அவனோடு கூட இருந்தார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய கருத்துப்பிரகாரம், ஒரு முறை தேவனால் எச்சரிக்கப்பட்டும், மீண்டும் நம்மை வஞ்சிக்கும் படி பலவிதத்தில் சத்துருவானவன் தந்திரமாக வழி ஒருக்கி நம்மை அவனுக்கு கீழ்ப்படுத்தி விடுவான்.  அப்படியே தான் பிலேயாம் வஞ்சிக்கப்பட்டு விடுகிறான்.  தேவன் இரண்டாம் முறை அவனை போக சொல்கிறார்; என்னவென்றால் அவன் தன் மனதுக்கு உகந்த பிரகாரம் தன்னை மாற்றி இரண்டாந்தரம் அவர்களை தங்களிடத்தில் தங்க வைக்கிறான்.  இதனை அறிந்த தேவன் அவனுடைய மனதை நிறுத்திறார்.  ஆனால் அவனோ நம்பி புறப்படுகிறான்.  

இதனை கண்ட தேவன் கோபத்தோடு அவனுக்கு எதிராளியாக நிற்கிறார். கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைகண்டு, கழுதை வயலிலே விலகி போயிற்று; கழுதையை வழியிலே பிலேயாம் அடிக்கிறான்.  

பிரியமானவர்களே நம்முடைய விசுவாச யாத்திரையில் நம் உள்ளம் ஒருபோதும் வஞ்சிக்கப்படாத படி தேவ சத்தம் கேட்டு நடக்க வேண்டும்.  தேவ சத்தம் கேட்டும் நாம் வஞ்சிக்கப்பட்டு நம்முடைய ஆத்துமா மீறுதலுகுட்பட்டால், கர்த்தருடைய தூதன் நம்மை எச்சரிக்கும்போது அதனை அறிந்து கொள்ள வேண்டிய விவேகம் உண்டாயிருக்கவேண்டும்.  ஆனால் பிலேயாமிடம் அது இல்லாத காரணத்தால் அவன் கழுதையை வழியில் அடிக்கிறதை பார்க்கிறோம்.  

இவ்விதம் நம் ஆத்துமா தேவ ஆலோசனைக்குட்பட்டு நம் உள்ளத்தை உணர்த்தும் போது அதற்கு கீழ்படிய வேண்டும் என்று திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அவ்விதம் தேவ ஆலோசனைக்கு கீழ்படிந்தவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.